ட்விட்டரின் புதிய சிஇஓ லிண்டா யாக்கரினோ – அதிகாரபூர்வமாக அறிவித்தார் எலான் மஸ்க்

வாஷிங்டன்: ட்விட்டரின் புதிய சிஇஓ -வாக அமெரிக்காவைச் சேர்ந்த லிண்டா யாக்கரினோ நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அறிவித்துள்ள எலான் மஸ்க், “ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோவை வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இனி ட்விட்டரின் பிசினெஸ் நடவடிக்கைகளில் லிண்டா கவனம் செலுத்துவார். நான் தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் புதிய தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துவேன். இந்த பிளாட்ஃபார்மை X ஆக மாற்ற லிண்டாவுடன் இணைந்து செயல்பட எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி … Read more

ரூ.24,000 கோடி லாபம் ஈட்டியது ‘எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்’.. 50,000 ஊழியர்களுக்கு 24 வார சம்பளம் போனஸ்..!

கொரோனா ஊரடங்கால் 2 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிவந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், கடந்த நிதியாண்டில் 24 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. துபாயை தலைமையகமாக கொண்டு இயங்கிவரும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் கடந்த நிதியாண்டில் நான்கரை கோடி பேர் பயணித்துள்ளனர். இதனால், இதுவரை இல்லாத அளவிற்கு அந்நிறுவனம் 29 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. வரலாறு காணாத உச்சத்தை கொண்டாடும் விதமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஐந்தரை மாத சம்பளத்தை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் போனஸாக … Read more

இம்ரான் கானுக்கு 2 வாரம் ஜாமீன் வழங்கியது இஸ்லாமாபாத் நீதிமன்றம்

இஸ்லாமாபாத்: இம்ரான் கானுக்கு அல்-காதர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் 2 வாரம் ஜாமீன் வழங்கி இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த செவ்வாய்க்கிழமை, வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத் நீதிமன்றத்துக்கு வந்தார். அப்போது அவரை துணை ராணுவப் படையினர் கைது செய்தனர். அவர்கள் இம்ரான் கானை மூர்க்கமாக இழுத்துச் சென்று காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர். அறக்கட்டளை முறைகேடு தொடர்பான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இம்ரான் கான் கைது சம்பவம்,பாகிஸ்தானில் பெரும் … Read more

ஒற்றை என்ஜின் பொருத்தப்பட்ட விமானத்தை இயக்கி சாகசம் செய்து விபத்தை ஏற்படுத்திய அமெரிக்க யூடியூபர்..!

யூடியூபில் அதிக பார்வையாளர்களை கவர்வதற்காக, சிறிய விமானத்திலிருந்து கீழே குதித்து அதனை வீடியோவாக வெளியிட்டதோடு, விமானத்தை மோத வைத்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த 29 வயதான ஜேக்கப் 2019ம் ஆண்டு “நான் எனது விமானத்தை மோத வைக்கப் போகிறேன்” என்ற தலைப்பில் யூடியூபில் நேரடி ஒளிபரப்பு செய்தார். ஒற்றை என்ஜின் கொண்ட விமானத்தை அவர் இயக்கிக் கொண்டே காட்டுப்பகுதிக்குச் சென்று விமானத்திலிருந்து பாராசூட் மூலமாக கீழே குதித்தார். … Read more

சிறையில் இம்ரான் கானை கொலை செய்ய சதி” – வழக்கறிஞர் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையில் வைத்து கொல்ல சதி நடந்ததாக அவர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த செவ்வாய்க்கிழமை, வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத் நீதிமன்றத்துக்கு வந்தார். அப்போது அவரை துணை ராணுவப் படையினர் கைது செய்தனர். அவர்கள் இம்ரான் கானை மூர்க்கமாக இழுத்துச் சென்று காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர். அறக்கட்டளை முறைகேடு தொடர்பான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இம்ரான் கான் … Read more

மைக்ரோஃபோனை அனுமதியின்றி பயன்படுத்துகிறதா வாட்ஸ்ஆப்..?

தனது மைக்ரோபோன் அனுமதியின்றி இயங்கியதற்கு ஆண்டிராய்டு இயங்குதளத்தில் உள்ள குறைபாடுகள் தான் காரணம் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. வாட்ஸ் ஆப் செயலி தனது போனின் மைக்ரோபோனை அனுமதியின்றி இயக்குவதாகவும், தான் உறங்க செல்லும்போது கூட பின்னணியில் மைக் இயங்கியதாகவும் பொறியாளர் ஒருவர் டிவிட்டர் தளத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார். அது ஏற்றுக்கொள்ளமுடியாத தனியுரிமை மீறல் என்றும், அது பற்றி  உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், … Read more

நிலவின் பிரம்மாண்டமான புகைப்படம்.. பகிர்ந்த வானிலை ஆய்வாளர்.. இத்தனை துல்லியமா.. ஜூம் செய்து பாருங்க..

வாஷிங்டன்: இதுவரை நாம் கண்டிராத நிலவின் புகைப்படத்தை அமெரிக்காவை சேர்ந்த வானிலை ஆய்வாளர் பகிர்ந்திருக்கிறார். இந்த புகைப்படத்தை எடுப்பதற்கு அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. ஏதோ நாமே நிலவில் இருப்பதை போன்ற உணர்வை இந்த புகைப்படம் தருவதாக உள்ளது. இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் பிரபஞ்சத்தை பற்றியும், அதில் புதைந்திருக்கும் மர்மங்கள் குறிததும் அறிவதற்கு அனைவருக்குமே ஆர்வம் உண்டு. அதிலும் பூமிக்கு அருகே … Read more

Imran Khan Ajar in High Court with heavy security | இம்ரான்கான் பலத்த பாதுகாப்புடன் உயர்நீதிமன்றத்தில் ஆஜர்

இஸ்லாமாபாத்: ஊழல் வழக்கு விசாரணைக்கு, பலத்த பாதுகாப்புடன் இம்ரான்கான் இன்று(மே 12) இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் விலகிய பின், அவர் மீது ஊழல், மோசடி, கொலை மிரட்டல் உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், அல்காதிர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கான் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இம்ரானை 8 நாள் காவலில் வைத்து விசாரிக்க, பொறுப்புடைமை நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த கைது சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி, … Read more

ட்விட்டரின் புதிய சிஇஓ லிண்டா யாக்கரினோ? – யார் இவர்?

வாஷிங்டன்: ட்விட்டருக்கு புதிய சிஇஓ நியமிக்கப்பட்டிருப்பதாக எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் ஒரு பெண் என்ற விவரத்தை தவிர்த்து எந்த தகவலையும் மஸ்க் தெரிவிக்காத நிலையில் புதிய சிஇஓ -வாக அமெரிக்காவைச் சேர்ந்த லிண்டா யாக்கரினோ நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி இருந்தார் மஸ்க். பயனர்கள் தங்களது கருத்துகளை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் இந்த தளத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை அவர் செய்தார். பயனர்களுக்கு சந்தா … Read more

வீடு போல வடிவமைக்கப்பட்ட சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து – 5 பேர் உயிர் தப்பினர்

அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில், மினி லாரியை முந்திச் செல்ல முயன்ற சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான காட்சி டேஷ்கேமில் பதிவாகியுள்ளது. கடந்த மே 5ம் தேதி, வீடு போல வடிவமைக்கப்பட்ட சுற்றுலா வாகனம் ஒன்று பென்டில்டன் புறநகர் சாலையில் சென்றுக் கொண்டிருந்தது. அந்த வாகனம் செண்டர் லேனைக் கடந்து, முன்னே சென்ற மினி லாரியை வலதுபுறமாக முந்திச் செல்ல முயன்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தின் காட்சிகள் மினி லாரியில் பொருத்தப்பட்டிருந்த டேஷ்கேமில் … Read more