ஜப்பானில் மாரடைப்பால் சுருண்டு விழுந்த நபரின் உயிரைக் காப்பாற்றிய நாய்க்கு விருது

ஜப்பானில், மாரடைப்பால் நிலைகுலைந்து சரிந்து கீழே விழுந்த நபரின் உயிரைக் காப்பாற்றிய நாய்க்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. சிபா நகரில் உள்ள வகாபா-குவில் உள்ள குதிரையேற்ற கிளப்பில் இந்த சம்பவம் நிகழ்ந்து உள்ளது. 50 வயது மதிக்கத்தக்க நபர் மாரடைப்பால் நெஞ்சைப் பிடித்தபடி கீழே விழுந்துள்ளார். இதைக் கண்டு அருகில் இருந்த ஐந்தே வயதான Koume என்ற நாய் சாதுர்யமாக செயல்பட்டு இடைவிடாமல் குரைத்துள்ளது. நீண்ட நேரமாக நாய் குரைத்துக் கொண்டே இருந்ததால், அருகில் இருந்தவர்கள் விரைந்து … Read more

அமெரிக்கா: கண்ணாமூச்சி விளையாடிய 14 வயது சிறுமியை சுட்டுக் கொன்ற முதியவர்

அமெரிக்காவில், கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த 14 வயது சிறுமியை சுட்டுக் கொன்ற முதியவரை போலீசார் கைது செய்தனர். சம்பவத்தன்று, லூசியானா மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியொன்றில் 58 வயது முதியவரின் இடத்தில் சில குழந்தைகள் கண்ணாமூச்சி விளையாடி உள்ளனர். அப்போது, வெளியில் நிழல் தெரிவதைக் கண்டு வேறு யாரோ தன் இடத்தில் புகுந்து விட்டதாக எண்ணி, முதியவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சிறுமி பலியாகியுள்ளார். Source link

இம்ரான்கானை இன்று ஐகோர்ட்டில் ஆஜராகுமாறு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70), கடந்த 9-ந் தேதி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டுக்கு வந்தபோது, அவரை துணை ராணுவத்தினர் கைது செய்து இழுத்துச் சென்றது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் ஊழல் செய்து, அல்காதிர் அறக்கட்டளை விவகாரத்தில் பாகிஸ்தான் அரசுக்கு ரூ.5,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இம்ரான்கான் கைது விவகாரம், அவரது கட்சியினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரை 8 நாள் … Read more

Linda Yaccarino In Talks To Be New Twitter CEO As Elon Musk Steps Down | டுவிட்டர், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களுக்கு சி.இ.ஓ., நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: டுவிட்டர், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களுக்கு புதிதாக பெண் சி.இ.ஓ., நியமிக்கப்பட்டுள்ளதாக, எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ஆனால், அந்த பெண் அதிகாரியின் பெயரை அறிவிக்கவில்லை. அதேநேரத்தில், ‘என்பிசி யுனிவர்சல் ஸ்டூடியோ’ நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி லிண்டா யக்கரினோ புதிய சி.இ.ஓ., ஆக பதவியேற்கலாம் எனக்கூறப்படுகிறது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 44 பில்லியன் டாலர் கொடுத்து விலைக்கு வாங்கினார். அதில் … Read more

சீன விண்கலம் வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்

பீஜிங், சீனா விண்வெளியில் டியாங்யாங் விண்வெளி நிலையத்தை கட்டி முடித்தது. ஒரே நேரத்தில் 6 பேர் வரை தங்கும் வகையில் இந்த விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஆயுட்காலம் 2038-ல் முடிவடைவதாக சீனா கணித்துள்ளது. இங்கு முதன்முறையாக கடந்த டிசம்பர் மாதம் சீன விண்வெளி குழுவினர் சென்றனர். இந்த நிலையில் தற்போது சீனாவின் தெற்கு தீவு மாகாணமான ஹைனானில் உள்ள வெங்சாங் ஏவுதளத்தில் இருந்து டியான்சூ-6 என்ற விண்கலத்தை சீனா அனுப்பியது. அது வெற்றிகரமாக விண்ணில் சரியான … Read more

கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்கள்! பல தசாப்தங்களாக தொடரும் கைதுகள்

Arrested Pakistan PM: பாகிஸ்தானின் பிரதமர்கள் துரத்தப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டதற்கும், கைது செய்யப்பட்டதற்கும் நீண்ட வரலாறு…பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்களின் கைதுகள்

பீரால் இயங்கும் மோட்டார்சைக்கிள் கண்டுபிடிப்பு… 150கிலோ மீட்டர் வேகத்தில் செல்லுமாம்

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் பீரால் இயங்கும் மோட்டார்சைக்கிளை இளைஞர் ஒருவர் உருவாக்கியுள்ளார். இந்த மோட்டார் சைக்கிளில் எரிவாயு இயங்கும் இயந்திரத்திற்கு பதிலாக 14காலன் எடை கொண்ட வெப்பம் ஊட்டும் இயந்திரம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் பீரை ஊற்றும் போது 300டிகிரி வரை சூடாக்குகிறது. பின்னர் அது பைக்கை முன்னோக்கி செலுத்துவதற்கு ஏதுவாக அதிக வெப்பமான நீராவியாக மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 150கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும் என்று கூறிய கண்டுபிடிப்பாளர் மைக்கேல்சன் … Read more

Fire kills 21 in Russia | ரஷ்யாவில் தீ : 21 பேர் பலி

மாஸ்கோ : ரஷியாவில் பரவிய காட்டுத்தீயில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர். மாஸ்கோ, ரஷியா, சைபீரியாவின் எல்லையில் அமைந்துள்ள யூரல் மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பரவியது. இதனால் ரஷியாவின் குர்கான், சைபீரியாவின் டியூமென், ஓம்ஸ்க் ஆகிய மாகாணங்களில் உள்ள பல கிராமங்களில் தீப்பிடித்தன. இதில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள், ஆயிரக்கணக்கான எக்டேர் விவசாய நிலங்கள் சேதம் அடைந்தன. இந்த விபத்தில் 21 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தீ பரவிய இடங்களில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. … Read more