வட கொரியா படகை விரட்டியடித்த ராணுவம்| The army chased away the North Korean boat

சியோல்,- தங்கள் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த வட கொரிய ரோந்து படகை, தென் கொரிய ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டிஅடித்தனர். கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவின் பேக்ரியோங் தீவிற்கு அருகே, வட கொரியாவின் ரோந்து படகு எல்லை தாண்டி அத்துமீறி நுழைந்தது. இதைப் பார்த்த தென் கொரிய கடற்படையினர், துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை செய்ததைத் தொடர்ந்து அந்த ரோந்து படகு அங்கிருந்து பின்வாங்கியதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர். கொரிய தீபகற்ப பகுதியில் தொடர்ந்து … Read more

அமெரிக்காவில் சேவல் சண்டையின் போது மோதல் – 2 பேர் சுட்டுக்கொலை

வாஷிங்டன், அமெரிக்காவின் தீவு மாகாணம் ஹவாய். இந்த மாகாணத்தில் சேவல் சண்டை போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அமெரிக்காவில் மொத்தமுள்ள 50 மாகாணங்களிலும் சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்ட போதும் சில மாகாணங்களில் தடையை மீறி சேவல் சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஹவாய் தீவு மாகாணத்தின் ஹொனொலுலு நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு சிலர் சேவல் சண்டை போட்டி நடைபெற்றது. இதில் பலர் தங்கள் சேவல்களை கொண்டு களத்தில் இறக்கி விளையாடினர். சேவல் சண்டையின் போது திடீரென … Read more

அமைதியான சமூகத்தை உருவாக்குவோம் : அமெரிக்காவில் அமைச்சர் நிர்மலா பெருமிதம்| Lets create a peaceful society: Minister Nirmala Perumidham in the US

வாஷிங்டன்-”இந்தியா – அமெரிக்கா இணைந்து வலுவான, அமைதியான மற்றும் இணக்கமான உலகளாவிய சமூகத்திற்கான அடித்தளத்தை உருவாக்கி வருகின்றன,” என, அமெரிக்காவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு, இந்திய துாதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: இந்தியா – அமெரிக்கா என்ற இரண்டு ஜனநாயக நாடுகளின் முன் எத்தனையோ சவால்கள், பிரச்னைகள் … Read more

துபாயில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து; தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள், கேரள தம்பதி உள்பட 16 பேர் பலி

துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரம் துபாய். இந்த நகரத்தில் அல்-ரஸ் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த பலர் சிக்கிக்கொண்டனர். இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சில மணி நேர போராட்டத்திற்கு பின் தீ மூழுமையாக … Read more

‘மூடப்போரமே..’- அட்ராசக்க.. ஜெர்மனியின் சூப்பர் அறிவிப்பு.. நம்மளும் தான் இருக்கமே.!

ஏப்ரல் 14 முதல் 17 வரையிலான பிளாக்பஸ்டர் Value Days- வீடு, சமையலறை மற்றும் கோடைகால உபகரணங்களுக்கான அற்புதமான சலுகைகளைப் பெறுங்கள். ஐரோப்பிய நாடான ஜெர்மனி அதன் கடைசி மூன்று அணு உலைகளை மூடப்போவதாக அறிவித்து, அணு சக்தியை விட்டு வெளியேறியது. ஜெர்மனி புதைபடிவ எரிபொருட்களை விலக்கி உக்ரைனில் போரினால் ஏற்பட்ட ஆற்றல் நெருக்கடியை நிர்வகிக்க முயல்கிறது. பல மேற்கத்திய நாடுகள் தங்கள் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்காக அணு ஆற்றலில் தங்கள் முதலீடுகளை அதிகரித்து வரும் நிலையில், … Read more

ஜப்பான் பிரதமர் மீது குண்டுவீச்சு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்| The bombing of Japans prime minister fortunately survived

டோக்கியோ-ஜப்பானில் அந்நாட்டு பிரதமர் புமியோ கிஷிடா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், இளைஞர் ஒருவர் குண்டு வீசிய நிலையில், அவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், பார்லி.,க்கான இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல், வரும் 23ம் தேதி நடக்கிறது. தேர்தலில் போட்டியிடும் ஆளுங்கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்து வரும் அந்நாட்டு பிரதமர் புமியோ கிஷிடா, பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வாகயாமா மாகாணத்தில் உள்ள சைகாசாகி துறைமுகத்துக்கு நேற்று சென்றார். கூட்டத்தில் உரையாற்றத் துவங்கியபோது, பார்வையாளர் … Read more

'டீன் ஏஜ்' மாணவர்களுடன் பள்ளியிலேயே 'செக்ஸ்'.. கையும் களவுமாக சிக்கிய 6 ஆசிரியைகள்.. அதிர்ச்சியில் அமெரிக்கா!

நியூயார்க்: அமெரிக்காவில் நடந்திருக்கும் ஒரு சம்பவம் அந்நாட்டை மட்டுமல்லாமல் உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அங்குள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டதாக கடந்த 2 நாட்களில் மட்டும் 6 ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். என்னதான் நடக்கிறது அமெரிக்காவில்..? ஏப்ரல் 14 முதல் 17 வரையிலான பிளாக்பஸ்டர் Value Days- வீடு, சமையலறை மற்றும் கோடைகால உபகரணங்களுக்கான அற்புதமான சலுகைகளைப் பெறுங்கள். உலக வல்லரசு என போற்றப்பட்டாலும், கலாச்சாரம் என எடுத்துக் கொண்டால் அமெரிக்காவை … Read more

மெஹுல் சோக்சியை வெளியேற்ற ஆன்டிகுவா நீதிமன்றம் தடை| Antigua Court Blocks Extradition of Mehul Choksi

ரோசியோ,-இந்தியாவில் மோசடி வழக்கில் தேடப்படும் வைர வியாபாரி மெஹுல் சோக்சியை, ஆன்டிகுவா மற்றும் பார்புடாவில் இருந்து வெளியேற்ற அந்த நாட்டு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரிகளான நிரவ் மோடி மற்றும் அவருடைய உறவினர் மெஹுல் சோக்சி மீது, பஞ்சாப் நேஷனல் வங்கியில், ௧௩ ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக, ௨௦௧௮ல் சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து, இருவரும் வெளிநாடு தப்பிச் சென்றனர். இவர்களை இந்தியாவுக்கு நாடு … Read more

கென்யா: ‘இயேசு வர்ராரு வெயிட்பண்ணுங்க’.. நான்கு பேரின் உயிரை குடித்த போதகர்.!

ஏப்ரல் 14 முதல் 17 வரையிலான பிளாக்பஸ்டர் Value Days- வீடு, சமையலறை மற்றும் கோடைகால உபகரணங்களுக்கான அற்புதமான சலுகைகளைப் பெறுங்கள். கென்யாவின் கடலோர கிலிஃபி கவுண்டி பகுதியில், இயேசுவை காண சர்ச்சைக்குரிய வழிபாட்டின் ஒரு பகுதியாக நான்கு பேர் இறந்து கிடந்தனர் மற்றும் கிட்டத்தட்ட ஒரு டஜன் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நியூஸ்வீக்கின் செய்தியின் படி, குட் நியூஸ் இன்டர்நேஷனல் சர்ச்சின் நான்கு வழிபாட்டாளர்கள், மகரினி தொகுதியில் உள்ள ஷகாஹோலா கிராமத்தில் உணவு மற்றும் தண்ணீர் … Read more