காங்கோ நாட்டில் வெள்ளத்தில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு…. ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளதாக தகவல்

காங்கோ நாட்டில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் தெற்கு கிவு மாகாணத்தில் பெய்த திடீர் கனமழையால் நதிக்கரையோரம் உள்ள நியாமுகுபி, புஷூஷூ ஆகிய 2 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் அக்கிராமங்களில் இருந்து தொடர்ந்து சடலங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், 5,500 பேர் பற்றிய விவரங்கள் தெரியவரவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த … Read more

ஆழ்கடலில் இளம்பெண்ணுக்கு வரம்பு மீறி முத்தம்! இதெல்லாம் தேவையா?

மலேசியாவில் 27 வயது ஆழ்கடல் நீச்சல் வழிகாட்டி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் தான் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.  

முடிவுக்கு வரும் கொரோனா கட்டுப்பாடுகள்.. அமெரிக்காவிற்குள் செல்ல எல்லையில் திரளும் புலம்பெயர்ந்தோர்.!

கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருவதால் அமெரிக்காவிற்குள் செல்ல புலம்பெயர்ந்தோர் அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் திரண்டுள்ளனர். 3 ஆண்டுகளாக தஞ்சம் கோரிய விண்ணப்பங்களைத் தடுக்கும் டைடில் 42 எனப்படும் கொரோனா கட்டுப்பாட்டு கொள்கை நாளையுடன் காலாவதியாகிறது. இதனையடுத்து மெக்சிகோ நகரமான டிஜுவானாவில் உள்ள எல்லையில் புலம்பெயர்ந்தவர்கள் வருகை அதிகரித்துள்ளது. தற்காலிக பிளாஸ்டிக் கூடாரங்களின் கீழ் உள்ள அவர்கள் அமெரிக்காவிற்குள் செல்வதற்காக காத்திருக்கின்றனர். இதனால் எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  Source link

பத்திரிகையாளரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு 5 மில்லியன் டாலர் அபராதம்

பத்திரிகையாளரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் 5 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. பத்திரிக்கையாளர் ஜீன் கரோலை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்கும், அவரை அவமதிப்பு செய்ததற்கும் டிரம்ப் பொறுப்பேற்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆயினும் டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்ற எழுத்தாளரின் குற்றச்சாட்டை மன்ஹாட்டன் நடுவர் மன்ற நீதிபதி நிராகரித்தார். இந்த தீர்ப்பு குறித்து கருத்துத் தெரிவித்த டிரம்ப் தமக்கு நேர்ந்த அவமானம் என்று கூறினார். … Read more

உக்ரைன் மீது ஆளில்லா விமானங்களை கொண்டு கடுமையாக தாக்கிய ரஷியா

கீவ், உக்ரைனுக்கு எதிரான ரஷிய படையெடுப்பு ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில், 1945-ம் ஆண்டு 2-ம் உலக போரில் ஜெர்மனியின் நாஜி படையை, தோற்கடித்த வெற்றி கொண்டாட்ட தினம் ரஷியாவில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதில் அதிபர் புதின் மக்களுக்கு உரையாற்றினார். இதனை முன்னிட்டு பல மாதங்களுக்கு பின்னர், உக்ரைனின் தலைநகர் கீவ், கருங்கடல் நகரான ஒடிசா மற்றும் பிற நகரங்களை இலக்காக கொண்டு, ரஷியா இன்று கடுமையாக தாக்கியது. இதுபற்றி உக்ரைனின் கீவ் நகர … Read more

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது: கலவரத்தைக் கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நேற்று ரேஞ்சர்ஸ் படையினரால் கைது செய்யப்பட்டார். இம்ரான் கான் வழக்கு விசாரணைக்காக நேற்று இஸ்லாமாபாத்தில் உள்ள உயர் நீதிமன்றத்துக்கு வந்தார். அப்போது நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்த பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினர் இம்ரான் கானை கைது செய்தனர். அவரை பிடித்து இழுத்துச் சென்று காரில் ஏற்றினர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்ரான் கான் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார். அவரது தலைமையிலான கூட்டணியிலிருந்து … Read more

திரவ வடிவில் கடத்த முயன்ற ஆயிரத்து 629 கிராம் எடையுள்ள கொக்கைன் போதைப் பொருளை கண்டுபிடித்த மோப்ப நாய்!

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் போதைப் பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த மோப்ப நாய் ஒன்று, திரவ வடிவில் கடத்த முயன்ற ஆயிரத்து 629 கிராம் எடையுள்ள கொக்கைன் போதைப் பொருளை கண்டுபிடித்து உள்ளது. ரியோனெக்ரோ நகரின் ஜோஸ் மரியா கொர்டோவா விமான நிலையத்தில் மோப்ப நாயைக் கொண்டு சல்லடை போட்டு அதிகாரிகள் சோதித்துள்ளனர். அப்போது ரத்த சிவப்பு நிறத்துடன் திரவ வடிவில் கடத்தப்படவிருந்த கொக்கைன் போதைப்பொருள் இருப்பதை தனது சக்தியால் உணர்ந்த மோப்ப நாய் அலர்ட் … Read more

இஸ்ரேல் வெளியுறவு மந்திரியின் 3 நாள் சுற்றுப்பயணம் குறைப்பு… தூதர் விளக்கம்

டெல்அவிவ், இஸ்ரேல் வெளியுறவு மந்திரி எலி கோஹென் இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு, அதன்படி டெல்லிக்கு இன்று வந்தடைந்து உள்ளார். புதுடெல்லி, ஆக்ரா மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்கு 9 முதல் 11 வரையிலான நாட்களில் செல்ல பயண திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் இன்று அதிகாலை வான்வழி தாக்குதலை நடத்தியது. அதில், பாலஸ்தீன நாட்டில் உள்ள, பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் (பி.ஐ.ஜே.) என்ற இயக்கத்தின் 3 முக்கிய … Read more