மன்னர் மூன்றாம் சார்லஸின் முதல் அதிகாரப்பூர்வ உருவப்படம் வெளியீடு

பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்லஸ் கடந்த 6-ம் தேதி முறைப்படி முடிசூட்டப்பட்ட நிலையில், மன்னரின் முதல் அதிகாரப்பூர்வ உருவப்படத்தை பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ளது. மொத்தம் 4 புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தனி உருவப்படத்திற்காக, பக்கிங்ஹாம் அரண்மனையில் உள்ள சிம்மாசன அறையில் முழு அலங்காரத்தில், இம்பீரியல் ஸ்டேட் கிரீடத்தை மன்னர் சார்லஸ் அணிந்துள்ளார். சிலுவையுடன் கூடிய இறையாண்மை உருண்டை மற்றும் செங்கோலை கைகளில் பிடித்துள்ளார். குயின் மேரியின் கிரீடம் மற்றும் எஸ்டேட் ரோப் அணிந்த ராணி கமிலாவின் தனி … Read more

"உங்களிடம் நான் மீண்டும் பேச முடியாமல் போகலாம்" – கைதாவதற்கு முன்பு இம்ரான் கான் பேசிய வீடியோ

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான்(வயது 70) இன்று கைது செய்யப்பட்டார். ஊழல் வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக கோர்ட்டுக்கு வந்த போது, அவரை பாகிஸ்தான் துணை ராணுவ ரேஞ்சர்கள் சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்தனர். இம்ரான்கான் கைது செய்யப்பட்டதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் பாகிஸ்தானில் பதற்றமான நிலை உருவாகி உள்ளது. இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் … Read more

கப்பலை அகதிகள் தங்குமிடமாக மாற்றும் இங்கிலாந்து..!

அகதிகளாக வருவோரை தங்க வைப்பதற்காக, கைவிடப்பட்ட கப்பலை தங்குமிடமாக மாற்றும் பணியில் இங்கிலாந்து அரசு ஈடுபட்டு வருகிறது. பிப்பி ஸ்டாக்ஹோம் எனப்படும் கப்பல், ஹெல்ஃபோர்ட் நதி மற்றும் ஃபால் நதியின் முகத்துவாரங்களை பிரிக்கும் ஃபால்மவுத் விரிகுடாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிறிய படகுகளில் நாட்டிற்குள் அடைக்கலம் தேடி தனித்து வரும் 500 ஆண்களை இந்த கப்பலில் தங்க வைக்கும் வகையில் அறைகள், சுகாதார வசதி, உணவு வசதி ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும்,  சரியான தங்கும் வசதிகள் செய்து … Read more

ஒரு மாம்பழத்தின் விலை ரூ.19,000 : ஜப்பான் விவசாயி அசத்தல் விற்பனை| A mango costs Rs 19,000 and the Japanese farmer sells it wildly

டோக்கியோ, ஜப்பானைச் சேர்ந்த விவசாயி, தன் பண்ணையில் விளையும்மாம்பழம் ஒன்றை, 19 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கிழக்காசிய நாடான ஜப்பானின், ஹொக்கைடோ தீவின் ஓட்டோபுக் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஹிரோயுகி நககாவா, 62, மாம்பழ விவசாயியான இவர் 2011 முதல், தன் பண்ணையில் இயற்கை முறையில் மாம்பழத்தை விளைவித்து வருகிறார். இவரது மாம்பழங்களுக்கு, உள்நாடு போக வெளிநாட்டு சந்தையிலும் அதிக கிராக்கிஇருக்கிறது. ஹிரோயுகி நககாவா, ஒரு மாம்பழத்தை, இந்திய ரூபாய் … Read more

பாகிஸ்தானின் கராச்சியில் காங்கோ வைரசுக்கு நடப்பு ஆண்டில் முதல் உயிரிழப்பு பதிவு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் கராச்சி நகரில் லியாகதாபாத் பகுதியை சேர்ந்த வாலிபர் முகமது ஆதில் (வயது 28). இறைச்சி விற்பனை செய்து வந்துள்ளார். அவருக்கு கடந்த ஏப்ரல் 30-ந்தேதி முதலில் தலைவலி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. 2 நாட்களுக்கு பின்பு அது தீவிரமடைந்து உள்ளது. அவர் தனியார் மருத்துவமனையில் அன்று முழுவதும் சிகிச்சையில் இருந்துள்ளார். அதன்பின்பு, தீவிர காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவரது மூக்கில் இருந்து ரத்தம் வழிய தொடங்கி உள்ளது. அவருக்கு நடந்த டெங்கு … Read more

உக்ரைன் போரை சிறப்பாக பதிவு செய்து வருவதற்காக 2 புலிட்சர் விருதுகளை வென்றது தி அசோசியேட்டட் பிரஸ் நிறுவனம்..!

உக்ரைன் போரை சிறப்பாக பதிவு செய்து வருவதற்காக தி அசோசியேட்டட் பிரஸ் நிறுவனம், 2 புலிட்சர் விருதுகளை வென்றுள்ளது. ரஷ்யப் படையெடுப்பு பற்றிய கதைகளுக்காக நியூயார்க் டைம்ஸ், சர்வதேச அறிக்கையிடல் மரியாதையைப் பெற்றுள்ளது. சிறந்த நிருபருக்கான புலிட்சர் விருதை, வாஷிங்டன் போஸ்ட் நிருபர் கரோலின் கிச்சனர் வென்றுள்ளார். அமெரிக்க அரசின் கருக்கலைப்பு சட்டம் தொடர்பான செய்தி தொகுப்புக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 1917ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் புலிட்சர் விருது, அமெரிக்க இதழியல் … Read more

ரஷ்யாவிற்கு எதிராக போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது: புதின்

ரஷ்யாவிற்கு எதிராக போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகவும், அந்த போரை தமது வீரர்கள் வெற்றியாக மாற்றுவார்கள் என்றும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போரில் ரஷ்யா வெற்றி பெற்றதன் வெற்றி விழா அணிவகுப்பு மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் பிரம்மாண்டமாக முறையில் நடைபெற்றது. அதிநவீன ஏவுகணை லாஞ்ச்சர்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்கள் பேரணியில் இடம் பெற்றதோடு, ராணுவ வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு ஒத்திகையும் நடைபெற்றது. Source link

போர் திணிக்கப்பட்டுள்ளது ரஷ்ய அதிபர் புடின் பேச்சு| War is imposed Russian President Putins speech

மாஸ்கோ, ”மேற்கத்திய நாடுகளின் நிறைவேறாத ஆசையை நிறைவேற்றுவதற்காக எங்கள் நாடு மீது போர் திணிக்கப்பட்டுள்ளது,” என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குறிப்பிட்டார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது கடந்தாண்டு பிப்ரவரியில் ரஷ்யா போர் தொடுத்தது. இது, 14 மாதங்களை கடந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மனியின் நாஜி படைகளை வீழ்த்தியதை குறிப்படும் வகையில், வெற்றி தினக் கொண்டாட்டம் நேற்று நடந்தது. மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் ராணுவத்தினர் அணிவகுப்பை மரியாதையை ஏற்று, ரஷ்ய … Read more

இம்ரான் கான் கைது எதிரொலி: பாக்., ராணுவத் தலைமையகம் முற்றுகை; பிடிஐ கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கைதுக்கு கண்டனம் தெரிவித்து அவருடைய தி பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியினர் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். லாகூரில் உள்ள ராணுவ காமாண்டர் இல்லம், ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். லாகூர், ஃபைசாபாத், பண்ணு, பெஷாவர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, கராச்சி, குர்ஜன்வாலா, ஃபைசாலாபாத், முல்தான், மர்டான் எனப் பல பகுதிகளிலும் இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கராச்சியில் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் … Read more