அப்பவே அப்படி… காதலியை அடைய 4 மாதங்கள் சைக்கிளில் பயணம் செய்த ஓவியர்

ஸ்டாக்ஹோம், அது 1970-ம் ஆண்டு காலகட்டம். டெல்லியில் ஓவிய கல்லூரியில் பிரத்யும்னா குமார் மகாநந்தியா என்பவர் மாணவராக படித்து வந்துள்ளார். இவரது ஓவியம் பற்றி அப்போது, பல்வேறு பத்திரிகைகளும் புகழ்ந்து எழுதி உள்ளன. இவரை பற்றி அறிந்த சுவீடனை சேர்ந்த சார்லட் வோன் ஸ்கெட்வின் என்ற இளம்பெண் (அப்போது வயது 19), ஐரோப்பியா வழியே துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளை கடந்து, 22 நாட்கள் பயணித்து மகாநந்தியாவை பார்க்க இந்தியா வந்துள்ளார். இருவரும் ஒருவரையொருவர் … Read more

தாக்குதல் நடத்த ரஷ்யா அனுப்பிய 36 டிரோன்கள் ஒரே நாள் இரவில் சுட்டு வீழ்த்தி உக்ரைன்..

ராணுவ நிலைகள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யா அனுப்பிய ஈரானிய தயாரிப்பு 36 டிரோன்களை ஒரே நாள் இரவில் சுட்டுவீழ்த்தி விட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. மேலும் தலைநகர் கீவின் வான்பரப்பில் பறந்த டிரோன்கள் தாக்கி அழிக்கப்படும் வீடியோ காட்சிகளையும் உக்ரைன் வெளியிட்டுள்ளது. அக்காட்சியில், டிரோன்கள் தாக்குதலுக்கு ஆளாகி தீப்பிழம்பாய் விழும் காட்சிகள் உள்ளன. Source link

இம்ரான் கான், அவரது மனைவி மற்றும் கட்சி தலைவர்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேற தடை

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த 9-ந்தேதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தபோது, அவரை துணை ராணுவ படையினர் அதிரடியாக கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. லாகூர் படைப்பிரிவு கமாண்டர் அலுவலகம், மியான்வாலி விமானப்படை தளம் மற்றும் பைசலாபாத்தில் உள்ள ஐ.எஸ்.ஐ. கட்டிடம் உட்பட பல ராணுவ தளங்களை இம்ரான் கானின் கட்சியினர் சேதப்படுத்தினர். ராவல்பிண்டியில் … Read more

2,000 கி.மீ. தூர இலக்கை தாக்கும் பாலிஸ்டிக் ரக ஏவுகணையை பரிசோதித்தது ஈரான்…!

2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலுள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட பாலிஸ்டிக் ரக ஏவுகணையை ஈரான் பரிசோதித்துள்ளது. கெய்பர் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஏவுகணை, ரேடார் சாதனங்கள் மற்றும் பிற பாதுகாப்பு தளவாடங்களின் பார்வையில் படாமல் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டதென்று  ஈரான் பாதுகாப்பு அமைச்சர் முகம்மது ரெஜா கரே அஸ்டியானி தெரிவித்துள்ளார்.    Khoramshahr 4  ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட வடிவமே கெய்பர் ஏவுகணை என்றும்,  அது ஆயிரத்து 500 கிலோ வெடிப் … Read more

மைசூர் புலி என்றழைக்கப்படும் திப்பு சுல்தானின் வாள் ரூ.140 கோடிக்கு ஏலம்…!

மைசூர் புலி என்றழைக்கப்படும் திப்பு சுல்தானின் வாள் லண்டனில் 140 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. இங்கிலாந்தின் லண்டனில் உள்ள கலைப்பொருட்களை ஏலம் விடும் போன்ஹாம்ஸ் நிறுவனம் நடத்திய ஏலத்தில் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பை விட 7 மடங்கு அதிக விலைக்கு வாள் ஏலம் போனதாக நிறுவனத்தின், இஸ்லாமிய மற்றும் இந்திய கலைத் தலைவர் ஆலிவர் ஒயிட் தெரிவித்துள்ளார். 18 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற போரில் திப்பு கொல்லப்பட்ட பிறகு, அரண்மனையின் தனிப் பகுதியில் வாள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அந்த … Read more

இந்திய மாணவர்களுக்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் தடை… விசா மோசடியால் எழுந்துள்ள சிக்கல்!

உயர் கல்வி பயில வேண்டும் என்ற போர்வையில், வேலை பெறுவதை நோக்கமாகக் கொண்ட மோசடி விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சில ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் சில இந்திய மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுக்கு தடை விதித்துள்ளன.

மந்தநிலையை சந்திக்கும் உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடான ஜெர்மனி

பெர்லின்: இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஜெர்மனி எதிர்பாராத பொருளாதார சரிவினை சந்தித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடு இப்போது மந்தநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், யூரோவுக்கான மதிப்பு சரிவடைந்துள்ளது. ஜெர்மனியின் மத்திய புள்ளியியல் அலுவலக அதிகாரிகள் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, ஜெர்மனியின் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 0.3 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் 0.5 சதவீதமாக … Read more

ரொமேனியாவில் வடிவமைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய டி ஷர்ட்…. 5 லட்சம் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் வடிவமைப்பு…!

ரொமேனியா நாட்டில் வடிவமைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய டி சர்ட் கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 357 அடி நீளமும், 241 அடி அகலமும் கொண்ட அந்த டி சர்ட், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மறுசுழற்சி செயப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தயாரிக்கப்பட்டிருப்பதாக கின்னஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. ரொமேனியா நாட்டின் தேசிய கொடியின் நிறத்தில், மறுசுழற்சியை ஊக்குவிக்கும் வகையில் அந்த ஆடை தயாரிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உலக சாதனை படைத்துள்ள அந்த டி சர்டின் துணியால், 10 ஆயிரம் ஆடைகள் செய்து … Read more

”மக்கள் பேராபத்திற்கு ஆளாகவோ, கொல்லப்படவோ செயற்கை நுண்ணறிவு காரணமாகலாம்..” கூகுள் முன்னாள் தலைமை செயல் அதிகாரி எரிக் ஷமிட் எச்சரிக்கை…!

எதிர்காலத்தில் மக்கள் பேராபத்திற்கு ஆளாகவோ, கொல்லப்படவோ ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு காரணமாகலாம் என கூகுள் முன்னாள் தலைமை செயல் அதிகாரி எரிக் ஷமிட் எச்சரித்துள்ளார். லண்டனில் நடைபெற்ற தலைமை செயல் அதிகாரிகள் கூட்டத்தில் உரையாற்றிய அவர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பற்றி தற்போது பேசுவது கற்பனை கதை போல தோன்றினாலும், எதிர்காலத்தில் உண்மையாக வாய்ப்புள்ளதாக கவலை தெரிவித்தார். தீயவர்கள் இதனை தவறாக பயன்படுத்தாமல் தடுக்க ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். எலான் மஸ்க் … Read more

அமெரிக்காவில் உவால்டே பகுதியில் உள்ள பள்ளி துப்பாக்கிச்சூட்டின் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிப்பு!

அமெரிக்காவில் உவால்டே பகுதியில் உள்ள பள்ளியில் 21 பேர் பலியான துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கடந்தாண்டு மே 24ம் தேதி உவால்டேவில் உள்ள தொடக்கப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் மற்றும் 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர். அமெரிக்க பள்ளியில் நடந்த மிக மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இச்சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினத்தை ஒட்டி, பொதுமக்கள் பலர் ஒன்று கூடி … Read more