பெண்கள் ஹோட்டலுக்கு செல்லக் கூடாது… தொடரும் தாலிபான் அட்டூழியங்கள்!

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி வந்தது. அன்று முதல் பெண்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் நரகமாகி வருகிறது. முன்பு பெண்களின் கல்வி கற்கவும், வேலைக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

மியான்மரில் ராணுவ வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 30 பேர் பலி; பலர் காயம்

நேபியேட்டோ: மியன்மரில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 30 பேர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர். மியான்மரில் சாஜைங் பகுதியில் ராணுவ ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்தனர். இப்பகுதியில் இன்று மியான்மர் ராணுவம் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது. இந்தத் தாக்குதலில் பொதுமக்களில் 30 பேர் வரை பலியாகினர். பலர் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலுக்கு மியான்மர் ராணுவம் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. முன்னதாக, ராணுவ ஆட்சியை … Read more

"உச்சக்கட்ட அராஜகம்".. ஹோட்டல்களில் கூடவா.. அலறும் ஆப்கானிஸ்தான் பெண்கள்!

காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் சுதந்திரத்தை முற்றிலும் ஒழித்தே தீருவது என கங்கனம் கட்டி சுற்றும் தலிபான்கள், தற்போது பெண்கள் ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்களுக்கும் செல்லக்கூடாது என உத்தரவிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும் ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2021-ம் ஆண்டு அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, ஆட்சிக்கட்டிலில் தலிபான்கள் அமர்ந்தனர். ஏற்கனவே தலிபான் ஆட்சிக்காலங்களில் பெரும் துன்பங்களை அனுபவதித்த மக்கள், அவர்களுக்கு … Read more

ட்ரம்ப் மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி: ரூ.1 கோடி வழங்க நடிகை ஸ்டார்மிக்கு உத்தரவு

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் தொடுத்த அவதூறு மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், ட்ரம்புக்கு ரூ.1 கோடி வழங்க உத்தரவிட்டது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடனான தொடர்பு குறித்து வெளியில் தெரிவிக்கக் கூடாது என தனக்கு மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததாக ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு ட்ரம்ப் மறுப்பு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக,கடந்த 2018-ம் … Read more

இறந்த மகனின் விந்தணு மூலம் பிறந்த குழந்தை! பேத்தியை மகளாக்கிக் கொண்ட நெகிழ்ச்சி சம்பவம்!

குழந்தை இல்லாத பலர் தங்கள் வாழ்க்கையில் ஒளியேற்ற தத்து எடுப்பது வழக்கம்.  அதே போல் தான் ஸ்பானிஷ் நடிகை ஒருவரும் தத்து எடுத்துக் கொண்டார். ஆனால், நீங்கள் நினைப்பது போல் யாரோ ஒருவரது குழந்தையை அல்ல… அவர் இறந்து போன தனது மகனின் விந்தணு மூலம் பிறந்த குழந்தையை தத்து எடுத்துள்ளார். மனதை நெகிழ வைக்கும் ஒரு சம்பவமாக, 68 வயதான ஸ்பானிய தொலைக்காட்சி நடிகையான அனா ஒப்ரெகன், அனா சாண்ட்ரா என்ற ஒரு வார வயது … Read more

இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு அடுத்த மாதம் முடிசூட்டு விழா!

லண்டன்: இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் கடந்த ஆண்டு அரியணை ஏறினார். அவர் அரியணையில் ஏறினாலும் அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா வரும் மே மாதம் 6-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது. செங்கோல் ஏந்தி.. இந்த முடிசூட்டு விழாவின் போது பாரம்பரிய மரபுப்படி கையில் செங்கோல், தடி … Read more

ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம்: ஐ.நா. ஒட்டெடுப்பில் இருந்து இந்தியா விலகல்

ஜெனீவா: ஐ.நா அமைப்பில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவரப்படும் அனைத்து தீர்மானங்களின் மீதான ஓட்டெடுப்பில் இருந்து இந்தியா விலகியே இருந்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் போரில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடப்பதாகவும், ரஷ்யாவின் நடவடிக்கையால் சர்வதேச மனிதாபிமான சட்ட விதிமுறைகள் மீறப்படுவதாகவும் உக்ரைன் போருக்கான சர்வதேச ஆணையம் கண்டனம் தெரிவித்திருந்தது. உக்ரைனிலிருந்து ரஷ்யப் படைகள் விரைவில் வெளியேற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆணையம் கடந்தாண்டு அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் அதிகாரத்தை ஓராண்டு நீட்டிக்கும் தீர்மானத்தின் மீதான … Read more

அமெரிக்காவின் தெற்கு மிசவுரியில் வீசிய சூறாவளிக்கு 5 பேர் பலி.. பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் தீவிரம்!

அமெரிக்காவின் தெற்கு மிசவுரியில் வீசிய சூறாவளிக்கு 5 பேர் பலியாகினர். இந்த சூறாவளியில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால்  அறுந்து விழுந்த மின்கம்பிகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட 87 கட்டிடங்களில் 12 கட்டிடங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. Peoria வின் தென்மேற்கே உள்ள இல்லினாய்ஸில் உள்ள பிரையன்ட்டை மற்றொரு சூறாவளி தாக்கியது, இதில் பலர் காயமடைந்தனர், Source link

அமெரிக்காவில் ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டொனால்டு ட்ரம்ப் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு

நியூயார்க்: ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் (76) கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப் போட்டியிட்டார். அப்போது ட்ரம்புடனான ரகசிய தொடர்பு குறித்து ஆபாச நடிகை ஸ்டார்மி ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். இதை ட்ரம்ப் மறுத்தார். இந்த விவகாரத்தை மூடி மறைக்க ட்ரம்ப் தனது வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மூலம் … Read more

தெற்கு பிரேசிலில் உள்ள பள்ளியில் கோடாரி தாக்குதலால் கொல்லப்பட்ட சிறார்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!

தெற்கு பிரேசிலில் உள்ள பள்ளியில் கோடாரி தாக்குதலால் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் புளூமெனாவில் வசிப்பவர்கள்  மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். 25 வயதான  நபர் குழந்தைகளை கொன்ற  பிறகு போலீசில் சரண் அடைந்தார். இவரால் தாக்குதலுக்கு ஆளான 4 குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளை கொன்ற பள்ளியின் முன்பாக ஏராளமானோர் மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  Source link