இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கியது இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம்..!

கொலைக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. ஊழல் வழக்கில் கடந்த மாதம் 9ம் தேதி இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து பாகிஸ்தானில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். இருப்பினும் அவருக்கு பல்வேறு வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்தது. இந்நிலையில் இம்ரான் கானுக்கு எதிராக தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென வலியுறுத்திய வழக்கறிஞர் அண்மையில் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக இம்ரான் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் … Read more

Rescue of 300 orphaned children as civil war escalates in Sudan | சூடானில் தீவிரமடையும் உள்நாட்டு போர் ஆதரவற்ற 300 குழந்தைகள் மீட்பு

கெய்ரோ, சூடானில், உள்நாட்டு போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஆதரவற்றோர் இல்லத்தில், பட்டினியாலும், உடல்நலக் குறைவாலும் 71 குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து, 300 குழந்தைகள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். வடகிழக்கு ஆப்ரிக்க நாடான சூடானில், ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே ஏப்., 15 முதல் உள்நாட்டு போர் மூண்டுள்ளது. இருதரப்பும் மிக கொடூரமாக தாக்கிக் கொள்வதை அடுத்து, மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில், இதுவரையிலும் 190 குழந்தைகள் … Read more

Constructive talks with Serbian President: President Murmu comments after meeting | செர்பியா அதிபருடன் ஆக்கப்பூர்வ பேச்சு: சந்திப்புக்கு பின் ஜனாதிபதி முர்மு கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெல்கிரேட்: ”செர்பியா அதிபர் அலெக்ஸாண்டர் வுசி உடனான பேச்சு, மிகவும்ஆக்கப்பூர்வமான சந்திப்பாக அமைந்தது,” என, ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்தார். தென்கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில், பால்கன்ஸ் தீபகற்பத்தில் அமைந்துள்ள செர்பியாவுக்கு நம் ஜனாதிபதிதிரவுபதி முர்மு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இந்திய ஜனாதிபதி என்ற பெருமையை முர்முபெறுகிறார். செர்பியா அதிபர் அலெக்ஸாண்டர் வுசியை நேற்று சந்தித்து உரையாடிய பின், ஜனாதிபதி முர்மு வெளியிட்ட … Read more

சாம்பல் புகையை வெளியேற்றி வரும் மயோன் எரிமலை.. வெடிக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!

பிலிப்பைன்ஸில் உள்ள மயோன் எரிமலை சீறி வருவதால் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மணிலாவிலிருந்து 330 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மயோன் எரிமலை தொடர்ச்சியாக சாம்பல் புகையை வெளியேற்றி வருகிறது. அடுத்த சில நாட்களிலோ அல்லது சில வாரங்களிலோ, எரிமலை வெடித்து நெருப்புக் குழம்பு வெளியேற வாய்ப்பு இருப்பதால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். 5 ஆண்டுகளுக்கு முன், மயோன் எரிமலை வெடித்த போது, பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. Source … Read more

Should Punjab students be expelled?: Canadian PMs response to Indian MP | பஞ்சாப் மாணவர்கள் வெளியேற்றமா?: இந்திய எம்.பி.,க்கு கனடா பிரதமர் பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டொரன்டோ: போலி கல்லூரி அனுமதி கடிதங்களுடன் வந்து சிக்கியுள்ள பஞ்சாப் உள்பட இந்தியாவைச் சேர்ந்த, 700 மாணவர்கள், கனடாவில் இருந்த வெளியேற்றப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து இந்தியாவை பூர்வீகமாக உடைய எம்.பி.,யின் கேள்விக்கு அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ விளக்கம் அளித்துள்ளார். வட அமெரிக்க நாடான கனடாவில் உள்ள கல்லூரிகள், பல்கலைகளில் படிப்பதற்காக இந்திய மாணவர்கள் அதிகம் செல்கின்றனர். குறிப்பாக பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் செல்கின்றனர். இவ்வாறு, … Read more

துருக்கி அதிபருக்கு ஹிட்லரை போன்ற மீசை வரைந்த சிறுவன் கைது..!

துருக்கியில், அதிபர் எர்டோகனின் புகைப்படத்திற்கு ஹிட்லரை போன்ற மீசை வரைந்த 16 வயது சிறுவனை, போலீசார் கைது செய்தனர். அண்மையில் அங்கு நடைபெற்ற தேர்தலின்போது, எர்டோகன் புகைப்படத்துடன் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியில், சிறுவன் ஒருவன் ஹிட்லரை போன்ற மீசையை வரைந்து உள்ளான். மேலும், அதில் அவதூறான கருத்துக்களை எழுதியதாகவும் கூறப்படுகிறது. சிசிடிவி காட்சிகள் மூலம் சிறுவனை கண்டுபிடித்த போலீசார், அவனது வீட்டை கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டதில், மீசை வரைந்ததை சிறுவன் ஒப்பு கொண்டான். கடந்த ஆண்டு 16,000க்கும் மேற்பட்டோர் … Read more

பிரான்ஸில் 4 குழந்தைகள் உள்பட 6 பேருக்கு கத்திக் குத்து – தாக்கிய நபர் கைது

பாரிஸ்: பிரான்ஸின் ஆல்ப்ஸ் நகரில் 4 குழந்தைகள் உள்பட 6 பேர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரான்ஸின் ஆப்ல்ஸ் நகரின் அன்னெசி சதுக்கத்தில் இன்று காலை விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் உள்பட பலரை நபர் ஒருவர் கத்தியால் குத்தி உள்ளார். இதில் 4 குழந்தைகள் உள்பட 6 பேர் காயமடைந்திருப்பதாக முதற்கட்டத் தகவல் கிடைத்துள்ளது. இவர்களில் இரண்டு குழந்தைகள் உள்பட 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் … Read more

உக்ரைன் அணை உடைப்பு: 600 சதுர கி.மீ மேல் சூழ்ந்த வெள்ளம் – 3 பேர் உயிரிழப்பு

உக்ரைனில் கக்கோவ்கா அணை உடைப்பால் ஏற்பட்ட வெள்ளம் 600 சதுர கிலோமீட்டருக்கு மேல் சூழ்ந்துள்ளது. கெர்சன் நகரில் பல்வேறு பகுதிகளில் ஐந்தரை மீட்டர் உயரத்துக்கு சூழ்ந்து வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கின்றன. ரப்பர் படகுகள் மற்றும் தண்ணீரில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில்சென்று ஆய்வு மேற்கொண்ட அதிபர் … Read more