ஆபாச நடிகைக்கு பணம்…. கைது செய்யப்பட்ட ட்ரம்ப்

அமெரிக்காவில் தேர்தல் நிதியை ஆபாச நடிகைக்கு கொடுத்த வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த, முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டாலும் அவர் போலீசாரின் கண்காணிப்பில் இருப்பார். அமெரிக்காவில் அதிபராக இருந்த ஒருவர் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளாவது இதுவே முதன்முறை. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும், தனக்கும் தொடர்பு இருந்ததாக ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் என்பவர் கடந்த 2006ம் ஆண்டு முதல் குற்றம் சாட்டி வந்தார். இதுகுறித்து ஊடகங்களில் தெரிவிக்கப் … Read more

சீனா விஷமத்துக்கு மத்திய அரசு பதிலடி :அருணாச்சல் விவகாரத்தில் கொந்தளிப்பு| The central governments response to Chinas poison is the turmoil in the Arunachal issue

புதுடில்லி, அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை மாற்றி, புதிய பெயர்களை சீனா சூட்டியுள்ளதற்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ‘சீனா இதுபோன்ற அடாவடிகளில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல; இதை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. நம் நாட்டின் வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம், சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு, சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதை ‘தெற்கு திபெத்’ என சீனா … Read more

நேட்டோ அமைப்பில் பின்லாந்து: ரஷ்யாவுக்கு நெருக்கடி| Finland in NATO: Crisis for Russia

ஹெல்சின்கி, ‘நேட்டோ’ எனப்படும் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் ராணுவ அமைப்பில், 31-வது உறுப்பினராக பின்லாந்து இணைந்ததை அடுத்து ரஷ்யாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த ராணுவ அமைப்பான நேட்டோவை அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உட்பட 12 நாடுகள் சேர்ந்து உருவாக்கின. இதில் உறுப்பினராக உள்ள எந்தவொரு நாடு மீதும் ஆயுத தாக்குதல் நடந்தால், அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பு நாடுகள் ஓரணியாக சேர்ந்து இயங்க வேண்டும் என்பது … Read more

ஹிந்து என்பதால் மறுப்பு : இந்திய மாணவர் குற்றச்சாட்டு| Indian student accused of denial because he is a Hindu

லண்டன் :இந்தியர் மற்றும் ஹிந்து என்ற காரணத்தினால், லண்டன் பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் போட்டியிட தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக இந்தியாவை சேர்ந்த மாணவர் குற்றஞ்சாட்டி உள்ளார். ஹரியானாவை சேர்ந்த மாணவர் கரண் கட்டாரியா, 22. இவர், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள, ‘லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்’ கல்லுாரியில் முதுநிலை சட்டப்படிப்பு படித்து வருகிறார். குடும்பத்தின் முதல் பட்டதாரியான கரண் கட்டாரியா, நடுத்தர வர்க்கத்தைத் சேர்ந்தவர். இவர், லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்சில் … Read more

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரஷ்யாவின் கிழக்கு பசிபிக் கடற்கரை பகுதியில் கம்சட்கா பிராந்தியத்திற்கு தெற்கே 44 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், தரைப்பகுதியில் இருந்து 100 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ரஷ்யாவின் அவசர கால அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு இருப்பிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.  Source link

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கைது

நியூயார்க்: ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு (44) பணம் கொடுத்த விவகாரத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கைது செய்யப்பட்டுள்ளார். லோயர் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் முறைப்படி கைதுசெய்யப்பட்டார். கைதுக்கு பின்னான நடவடிக்கைகள் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. அவர் சரணடைவார் என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், அதன்படி லோயர் மன்ஹாட்டனில் அமைந்துள்ள நீதிமன்றத்திற்கு வந்த டொனால்ட் ட்ரம்ப் அங்கு கூடியிருந்தவர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு, ரகசிய வழியில் நீதிமன்றத்திற்குள் சென்றார். வழக்கின் பின்னணி: டொனால்டு ட்ரம்ப் … Read more

டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு கடும் சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது. ஒரு டாலருக்கு நிகராக பாகிஸ்தான் 287 ரூபாய் 29 காசுகளை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி 285 ரூபாய் 9 பைசாவாக இருந்த நிலையில், தற்போது உச்சபட்ச சரிவு அளவை பாகிஸ்தான் ரூபாய் எட்டியுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான், தனது பொருளாதாரத்தை மீட்க சவுதிஅரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் மற்றும் சர்வதேச … Read more

அமெரிக்காவில் பஸ் விபத்து ஆந்திர இளைஞர் உயிரிழப்பு| Andhra youth dies in bus accident in USA

நியூயார்க்:அமெரிக்க விமான நிலையம் அருகே பஸ் மோதியதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விஷ்வசந்த் கொல்லா, 47, அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் பணியாற்றினார். நேற்று முன் தினம், தன் நண்பரை வரவேற்க, லோகன் சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த பஸ் மோதியதில், சில அடி துாரம் இழுத்துச் செல்லப்பட்ட விஷ்வசந்த், அதே இடத்தில் உயிரிழந்தார். பஸ் ஓட்டிய பெண் கைது செய்யப்பட்டார். … Read more

செலவை குறைக்க… கூகுள் நிறுவனம் அடுத்த அதிரடி; கலக்கத்தில் பணியாளர்கள்

நியூயார்க், உலக பொருளாதாரம் மந்த நிலையின் ஒரு பகுதியாகவும், உக்ரைன் போர், கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட காரணங்களாலும் பல்வேறு நிறுவனங்கள் தங்களது பணியாளர்கள் எண்ணிக்கையை குறைத்தன. இந்த பட்டியலில் கூகுள் நிறுவனமும் இடம் பெற்றது. இதன்படி, கடந்த ஜனவரி 3-ம் வாரத்தில் 12 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்கும் அதிரடி முடிவை கூகுள் நிறுவனம் எடுத்தது. இதற்காக அந்த பணியாளர்களுக்கு தனியாக இ-மெயில் வழியே தகவல் அனுப்பப்பட்டது. இந்த அதிர்ச்சியில் இருந்து பணியாளர்கள் மீள்வதற்குள் கூகுள் … Read more

பங்காபஜாரில் தீ விபத்து: ரமலான் பண்டிகைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த ஆடைகள், 3,000 கடைகள் எரிந்து சேதம்

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பிரபலமான ஆடை சந்தையான பங்காபஜாரில் அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 3 ஆயிரம் கடைகள் தீயில் எரிந்து நாசமாகின. 600 தீயணைப்பு வீரர்கள் மற்றும் ராணுவத்தினர் கொளுந்து விட்டெறிந்த தீயை அணைக்கும் பணியில் 6 மணி நேரமாக ஈடுபட்டு தீயை கட்டுப்படுத்தினர். சிறிய அளவில் தடுப்புகளுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள இந்த கடைகளில் குறைந்த விலையில் ஆடைகள் கிடைக்கும் என்பதால் எப்போதும் அதிக நெருக்கடியோடு காணப்படும். ரமலான் பண்டிகையை முன்னிட்டு … Read more