துணி துவைத்து கொண்டிருந்தபோது திடீர் நிலச்சரிவு: 20 பேர் பலி

கொமா, மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசின் மசிசி மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த மாகாணத்தின் மலைப்பகுதியில் அமைந்துள்ள பொலொவா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. மலைப்பகுதி அருகே உள்ள நீரோடையில் 25-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் துணி துவைத்துக்கொண்டிருந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் பெண்கள் குழந்தைகள் என மொத்தம் 20 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மண்ணுக்குள் புதைந்தவர்களை தேடும் பணிகள் … Read more

‘ஹை ப்ரொஃபைல்’ படுகொலைகள்… – ரஷ்ய போர் பதிவர் டடார்ஸ்கி படுகொலை எழுப்பும் கேள்விகள்

மாஸ்கோ: ரஷ்யாவின் போர் பதிவர் விளாட்லென் டடார்ஸ்கி கடந்த ஞாயிறன்று செயிண்ட் பீட்டர்ஸ்பெர்கில் நடந்த ஒரு குண்டு வெடிப்புச் சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் 31 பேர் படுகாயமடைந்தனர். செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரம் ரஷ்யாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரம் மட்டுமல்ல இங்குதான் அதிபர் விளாடிமிர் புதினும் வசிக்கிறார். உயர் பாதுகாப்பு வரம்புக்குள் இருக்கும் ஒரு நகரில் நடந்த இந்தப் படுகொலை சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. யார் இந்த டடார்ஸ்கி? – டடார்ஸ்கியின் இயற்பெயர் … Read more

ஆர்ட்டெமிஸ்-2 நிலவுத் திட்டத்தில் பயணிக்கும் விண்வெளி வீரர்களின் பெயர்களை வெளியிட்டது நாசா

ஆர்ட்டெமிஸ் 2 நிலவுத் திட்டத்தில் பயணிக்கும் விண்வெளி வீரர்களின் பெயர்களை நாசா வெளியிட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. இதன் முதற்கட்ட சோதனை முயற்சியாக, ஆர்ட் டெமிஸ் 1 ஆளில்லா விண்கலத்தை நாசா வெற்றிகரமாக அனுப்பியது. இந்நிலையில், ஆர்டெமிஸ் – 2 ராக்கெட் ஏவும் திட்டத்தை நாசா துவக்கியுள்ளது. இதில் நிலவுக்கு செல்ல தேர்வு செய்யப்பட்ட 4 விண்வெளி வீரர்களில் … Read more

இலங்கையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா உதவ வேண்டும்: ரணில் விக்ரமசிங்கே

கொழும்பு: இலங்கையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா உதவ வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே கேட்டுக்கொண்டுள்ளார். நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் தலைவர் பாரத் லால் தலைமையிலான இந்திய தூதுக்குழு 2 நாள் பயணமாக கடந்த 1ம் தேதி இலங்கை சென்றது. இக்குழு, தலைநகர் கொழும்புவில், அதிபர் ரணில் விக்ரமசிங்கேவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தச் சந்திப்பு குறித்து பாரத் லால் விடுத்துள்ள அறிக்கை விவரம்: ”இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்தபோது அவர், இலங்கைக்கான தனது … Read more

சீன உளவு பலூன் அமெரிக்க ராணுவத் தளங்களை வேவு பார்த்தது உண்மை… அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கையில் தகவல்

அமெரிக்காவால் சுட்டு வீழ்த்தப்பட்ட சீன உளவு பலூன் அமெரிக்காவின் பல ராணுவத் தளங்கள் குறித்த தகவல்களை சேகரித்ததாக அந்நாட்டு உளவுத்துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது. ஆனால் அது வானிலை குறித்த தகவல்களைச் சேகரிக்க அனுப்பப்பட்டதாகவும், தவறுதலாக அமெரிக்க எல்லைக்குள் நுழைந்து விட்டதாகவும் சீனா கூறியிருந்தது. இந்நிலையில் அமெரிக்க உளவுதுறையின் அறிக்கையில், ராட்சத பலூன் வீழ்த்தப்படுவதற்கு முன் அமெரிக்க ராணுவத் தளங்களின் மேல் எண் எட்டு வடிவில் … Read more

துருக்கி பூகம்பத்தால் பிரிந்து 2 மாதங்களுக்குப் பிறகு சேர்ந்த தாய் – சேய்!

அங்காரா: துருக்கியில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட பேரழிவு பூகம்பத்தால் பிரிந்த குழந்தையும், தாயும் மீண்டும் சேர்ந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி – சிரிய எல்லையில் கடந்த பிப்ரவரி மாதம் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்திற்கு 56,000 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். இந்த நிலையில், துருக்கியில் பிப்ரவரி 6-ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டு ஐந்து நாட்களுக்குப் பிறகு ஹடாய் பகுதியிலிருந்து 3 மாதக் குழந்தை … Read more

இஸ்ரேல் தாக்குதலில் பலியான ஈரான் வீரர்களின் உடலுக்கு இறுதிச்சடங்கு

சிரியாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்த 2 ஈரானிய புரட்சிகர காவல் படையினருக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது. கடந்த மார்ச் 31ம் தேதி சிரியாவின் டமாஸ்கஸ் அருகே இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில், ஈரானைச் சேர்ந்த 2 வீரர்கள் பலியாகினர். அவர்களது உடல் ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு கொண்டு வரப்பட்டு, இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். வீரர்களின் மரணத்திற்கு பழிக்கு பழி வாங்குவோம் என ஈரானிய புரட்சிகர காவல்படை கமாண்டர் ஹெசைன் சலாமி கூற, … Read more

நெதர்லாந்தில் கிரேன் இயந்திரம் மீது பயணிகள் ரயில் மோதி தடம்புரண்டு விபத்து..!

நெதர்லாந்து நாட்டில் தண்டவாளத்தின் அருகே பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த கிரேன் இயந்திரம் மீது பயணிகள் ரயில் மோதி தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. தி ஹேக் நகருக்கு அருகே அதிகாலையில் சுமார் 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ரயில், கிரேன் இயந்திரத்தில் வேகமாக மோதி தடம்புரண்டது. இதில் கிரேன் ஆபரேட்டர் உயிரிழந்த நிலையில், ரயில் ஓட்டுநர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து, நெதர்லாந்தின் பரபரப்பான ரயில் பாதைகளில் ஒன்றான லெய்டன் – தி ஹேக் வழித்தடத்தில் உள்ளூர் ரயில் … Read more

நிலநடுக்கத்தின் போது பிரிந்த தாயும், சேயும் மீண்டும் இணைந்தனர்.. உச்சி முகர்ந்து குழந்தையை வாரி அணைத்துக் கொண்ட தாய்

துருக்கியில் நிலநடுக்கத்தின் போது பிரிந்த தாயும், சேயும் இரு மாதங்கள் கழித்து மீண்டும் இணைந்தனர். பிப்ரவரி மாதம் நிலநடுக்கம் ஏற்பட்ட போது ஹடே மாகாணத்தில் 5 நாட்களாக இடிபாடுகளில் சிக்கியிருந்த கைக்குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. “அதிசய குழந்தை” என்று அழைக்கப்பட்ட அந்த பெண் குழந்தையின் தாய் இறந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், குழந்தையின் தாய் யாஸ்மின் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. டி.என்.ஏ பரிசோதனையின் மூலம் அது உறுதி செய்யப்பட்ட பின், துருக்கி அமைச்சர், பிரதமரின் விமானம் மூலம் குழந்தையை … Read more