பாக். வெளியுறவு மந்திரி வருகை எதிரொலி: நல்லிணக்க அடிப்படையில் 600 இந்திய மீனவர்களை விடுவிக்க முடிவு

லாகூர், ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு (மே 4,5) இரு தினங்கள் கோவாவில் நடைபெற்று வருகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகித்து வரும் நிலையில் உறுப்பு நாடுகளுக்கு மாநாட்டில் பங்கேற்கும்படி இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. அந்த வகையில் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்கும்படி பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பூட்டோ சர்தாரிக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கடிதம் அனுப்பி இருந்தார். இந்நிலையில், கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு … Read more

‘பிரதமர் மோடிக்கு செக்.?’.. ஆஸ்திரேலியாவில் கோயில் சேதம்.. காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டூழியம்.!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து கோயில் மீண்டும் ஒருமுறை அவமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஏற்கனவே பல முறை கோயில்கள் அவமதிக்கப்பட்ட நிலையில், இந்தியா வந்திருந்த ஆஸ்திரேலிய பிரதமரிடம், இந்திய பிரதமர் மோடி கடுமையாக பேசினார். அதைடுத்து கொஞ்சநாட்களாக அமைதியாக இருந்த ஆஸ்திரேலியாவில், சிட்னியில் நடைபெற்றுள்ள சம்பவம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியின் ஆஸ்திரேலிய பயணத்திற்கு முன்பாக, இந்த அவமதிப்பு … Read more

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு

டோக்கியோ, ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானது. ஜப்பானின் சுசு நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. நில நடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. எனினும் கடல் மட்டத்தில் 10 செ.மீ அளவுக்கு மாற்றம் இருக்கும் என்று புவியியல் அதிகாரிகள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதனால், உயிரிழப்பும் பதிவாகியுள்ளது. ஒருவர் பலியான நிலையில், 22 … Read more

வெள்ளைமாளிகைக்கு சென்ற மைக்ரோசாப்ட் நாதெல்லா மற்றும் கூகுள் சுந்தர் பிச்சை

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து ஆலோசிக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சத்யா நாதெல்லா மற்றும் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட தொழில்நுட்பத்துறையினர் நேற்று வெள்ளைமாளிகைக்கு சென்றனர். அண்மைக்காலங்களில் செயற்கை நுண்ணறிவு மூலமாக அழிவுசக்திகள் தலைதூக்கியிருக்கும் நிலையில் அவற்றை ஒழுங்குமுறைப்படுத்தவும் அரசு அதிகாரத்தில் கட்டுப்படுத்தவும் ஜோ பைடன் நிர்வாகம் தொழில்நுட்பத் துறை வல்லுனர்களை, வெள்ளை மாளிகைக்கு அழைத்து துணை அதிபர் கமலா ஹாரிஸ் தலைமையில் அவசர ஆலோசனை நடத்தியது. எந்த ஒரு … Read more

சிறையில் இருக்கும் கொடூர கைதியுடன் உல்லாசம் ; சிறை பெண் ஊழியர் கைது

லண்டன் இங்கிலாந்து நாட்டில் 2021 ஆம் ஆண்டில் ஆல்பிரட் ஜாரா அலினா (35) என்ற பெண்ணை கொள்ளையடித்து கற்பழித்து கொடூரமாக கொலை செய்தார் ஜோர்டான் மெக்ஸ்வீனி(29) என்பவர். இந்தப் படுகொலை பிரிட்டன் நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது. இந்த வழக்கில் குற்றசாடப்பட்ட ஜோர்டான், ‘எந்தவொரு பெண்ணுக்கும் ஆபத்து’ என்று வர்ணிக்கப்பட்டார். கொலை மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு நீதிமன்றத்தால் அவருக்கு 38 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஜோர்டான் தென் கிழக்கு லண்டனின் மிகவும் பாதுகாப்பான மற்றும் ஹைடெக் … Read more

கோவிட் குறித்த அவசர நிலை இனி வராது: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு| No more emergency on Covid: World Health Organization announcement

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: கோவிட் தொற்று பாதிப்பு குறித்த அவசர நிலை இனி வராது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. . கடந்த 2020-ம் ஆண்டு கெரோனா பெருந்தொற்று பாதிப்பு உலகை ஆட்டிப்படைத்தது. தொற்று பாதிப்புக்கு 69 லட்சம் பேர் பலியாயினர். 66 கோடிக்கும் அதிகமாேனோர் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டனர். உலகளாவிய பொருளாதாரத்தை சீர்குலைத்தது. கொரோனா வைரஸ் பரவல் துவங்கி மூன்று ஆண்டுகளை எட்டிய நிலையில், அதிக வீரியமுள்ள உருமாறிய ‘ஒமைக்ரான்’ … Read more

மாநாட்டில் கொடியை பறித்த ரஷிய பிரதிநிதியை தாக்கிய உக்ரைன் எம்.பி. -வைரலாகும் வீடியோ

அங்காரா உக்ரைன் – ரஷியா இடையிலான போர் ஒரு வருடங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறிய நாடான உக்ரைன், பல்வேறு நாடுகளின் உதவி மற்றும் அமெரிக்காவின் ராணுவ உதவியுடனும் தொடர்ந்து சண்டை செய்து வருகிறது. ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், துருக்கியின் தலைநகரான அங்காராவில் நடந்த மாநாட்டின் போது, உக்ரைன் எம்.பி.ஒலெக்சாண்டர் மரிகோவ்ஸ்கி ரஷிய பிரதிநிதியை தாக்கி உள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலாகி உள்ளது. கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பின் பாராளுமன்ற சபையின் … Read more

Stone of Destiny: மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் ’விதியின் கல்’

King Charles Coronation Ceremony: மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா மே 6 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. முடி சூட்டு விழாவில் விதியின் கல் என்ற முக்கியமான பொருளுக்கு உள்ள முக்கிய பங்கு பற்றி தெரியுமா? 

கோவிட்-19 உலகளாவிய சுகாதார அவசரநிலை முடிந்துவிட்டது: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

லண்டன்: கோவிட்-19 பெருந்தொற்றால் உலக அளவில் நிலவிய சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த முக்கிய அறிவிப்பை, உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலைக் குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் உள்ளிட்ட நிபுணர்கள் கூறியது: “கோவிட்-19 பெருந்தொற்றின் உலகளாவிய சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துவிட்டதாக மிகுந்த நம்பிக்கையுடன் அறிவிக்கிறோம். இவ்வாறு கூறுவதால், கோவிட் 19 அச்சுறுத்தல் முடிந்துவிட்டதாகக் கருதக் கூடாது. கடந்த … Read more