அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு வன்முறைகளை தடுக்கக்கோரி மாணவர்கள் பேரணி.!

அமெரிக்காவின் நாஷ்வில் நகரில், துப்பாக்கிச்சூடு சம்பவங்களை தடுக்க வலியுறுத்தி பள்ளி, கல்லூரி மாணவர்கள் டென்னசி மாகாண தலைமையகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். கடந்த மார்ச் 27ம் தேதி நாஷ்வில்லில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், 3 மாணவர்கள் உட்பட 6 பேர் பலியான நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட 28 வயதான பள்ளியின் முன்னாள் மாணவரை போலீசார் சுட்டுக்கொன்றனர். இந்நிலையில் பள்ளிகளில் நடக்கும் வன்முறை சம்பவங்களை தடுக்கக்கோரி வகுப்புகளை புறக்கணித்து ஊர்வலமாக சென்ற மாணவர்கள், டென்னசி தலைமையகம் … Read more

குருவிக்கு பதில் நாய்: டுவிட்டர் லோகோவை மாற்றிய எலான் மஸ்க்| Elon Musk Changed Twitter Logo into Doge

வாஷிங்டன்: டுவிட்டர் நிறுவனத்தின் லோகோவாக நீல நிற குருவி இருந்துவந்த நிலையில் அதனை நாய் படமாக மாற்றியுள்ளார், அந்நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க். டுவிட்டர் நிறுவனத்தை உலகின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க் கைப்பற்றியதில் இருந்தே பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். முதலில் முக்கிய பணியாளர்களை வேலையில் இருந்து தூக்கிய அவர், பின்னர் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உணர்த்தும் ‛ப்ளூ டிக்’கிலும் 3 பிரிவுகளை கொண்டுவந்து அதற்கு கட்டணமும் நிர்ணயித்தார். அடுத்ததாக டுவிட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ … Read more

Australia bans TikTok: டிக்டாக் செயலிக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா!

பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் டிக்டாக் செயலிக்கு தடை விதித்திருந்த நிலையில்,  ஆஸ்திரேலியாவும் டிக்டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது. ஆஸ்திரேலிய அரசாங்கம் செவ்வாயன்று, பாதுகாப்புக் காரணங்களுக்காக மத்திய அரசுக்குச் சொந்தமான அனைத்து சாதனங்களிலிருந்தும் TikTok ஐ அகற்றுவதாகக் கூறியது. சீனாவுக்குச் சொந்தமான வீடியோ செயலிக்கு எதிரான நடவடிக்கையைத் தொடங்கும் சமீபத்திய அமெரிக்க நட்பு நாடுகளின் பட்டியலில் அப்போது … Read more

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைது செய்யப்படுவாரா?

வாஷிங்டன்: கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்று 4 ஆண்டுகள் அதிபராக பதவி வகித்தார். கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் ட்ரம்ப் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ள நிலையில் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு (44) பணம் … Read more

அருணாச்சலப்பிரதேசத்தின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு பெயரிட்டு மீண்டும் சர்ச்சையைக் கிளப்பும் சீனா..!

அருணாச்சலப் பிரதேசத்தின் குறிப்பிட்ட பகுதிகள் மீது சீனா பெயரிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் சிவில் விவகார அமைச்சகம், அருணாச்சலப் பிரதேசத்தின் சில குடியிருப்பு பகுதிகள், 5 மலை சிகரங்கள், ஆறுகள் உள்ளிட்ட இடங்களுக்கு 3வது முறையாக புதிதாக பெயரிட்டு சீன, திபெத்திய மற்றும் யின்யின் எழுத்துக்களால் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன் முதல் தொகுதி 2017ம் ஆண்டும், 2ம் தொகுதி 2021ம் ஆண்டும் வெளியிடப்பட்டது. அருணாச்சலப் பிரதேசத்தில் சில இடங்களின் பெயரை மாற்றும் சீன நடவடிக்கையை இந்தியா … Read more

ட்விட்டர் செயலியின் லோகோவை மாற்றினார் எலான் மஸ்க்: நீல குருவிக்கு பதிலாக நாய் படம்

சான் ஃப்ரான்சிஸ்கோ: ட்விட்டர் சமூகவலைதள செயலியின் லோகோவை எலான் மஸ்க் மாற்றியுள்ளார். ட்விட்டர் என்றாலே நினைவுக்கு வருவது நீல நிறக் குருவிதான். ஆனால் அந்தக் குருவியின் படத்திற்குப் பதிலாக ஒரு நாயின் படத்தை லோகாவாக மாற்றியுள்ளார் எலான் மஸ்க். இருப்பினும் ட்விட்டர் மொபைல் வெர்சனில் இந்த மாற்றம் அமல்படுத்தப்படவில்லை. எலான் மஸ்க்கின் இந்த திடீர் நடவடிக்கை ட்விட்டர் பயனாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் தளத்தை வாங்கி இருந்தார் மஸ்க். … Read more

150 அடி அகலம் கொண்ட விண்கல் ஒன்று வரும் 6ம் தேதி பூமியை நெருங்கி வருவதாக நாசா எச்சரிக்கை

150 அடி அகலம் கொண்ட விண்கல் ஒன்று வரும் 6ம் தேதி பூமியை நெருங்கி வருவதாக நாசா தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாசாவின் கூற்றுப்படி 5 விண்கற்கள் பூமியை நெருங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது. இதில் இரண்டு கற்கள் பூமிக்கு மிக அருகாமையில் வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக 2023 FZ3 என்ற விண்கல் ஏறத்தாழ 42 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் பூமியைக் கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல்லால் பூமிக்கு ஆபத்தில்லை என நாசா தெரிவித்துள்ளது. Source … Read more

கெய்ரோவில் அறிமுகம் ஆன புதிய பூங்கா.. செல்ஃபி பிரியர்களுக்கான செல்பி ஹால்..!

எகிப்து தலைநகரான கெய்ரோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள செல்பி ஹால் என்னும் தீம் பார்க் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இங்கு பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.இவற்றில் பல்வேறு வகையான தீம்களுடன் செல்பி எடுத்து கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இணையங்களில் பகிர்வதற்கான படங்களை பல கோணங்களில்  எடுத்து காட்சி படுத்தும் விதம் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மட்டும் இன்றி பல தரப்பினர் இந்த நவீன செல்பி ஹாலுக்கு வருகை தருகின்றனர்.  Source link

சீனாவில் 1300 ஆண்டுகள் பழமையான மிதக்கும் நகருக்கு மக்கள் வருகை..!

சீனாவில் ஆயிரத்து 300 ஆண்டுகள் பழமையான தண்ணீரில் மிதக்கும் வுஷன் நகரம் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பச்சை பசேலென காட்சியளிக்கும் பூங்காக்கள் என மனதை மயக்கும் ஹூசைன் நகரில் கட்டிடங்களுக்கு நடுவே பாயும் யாங்சே நதி சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது. அலங்கரிக்கப்பட்ட படகுகளில் சவாரி செய்து குடும்பத்துடன் இளைப்பாறும் மக்கள் வீதிகளில் குவிக்கப்பட்டு இருக்கும் கலை நயமிக்க பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த வாரத்தில் மட்டும் 1,50,000 பேர் வந்து … Read more