ஆப்கனில் பெண்கள் நடத்தி வந்த வானொலிக்கு தடை – இசை ஒலிபரப்பியதால் நடவடிக்கை என விளக்கம்
காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்கள் நடத்தி வந்த வானொலிக்கு அந்நாட்டு ஆட்சியாளர்களான தலிபான்கள் தடை விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றதை அடுத்து அந்நாட்டில் பெண்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, அந்நாட்டில் பெண்கள் நடத்தி வந்த ஒரே வானொலியான ‘சடை பனோவன்’ (பெண்களின் குரல்) என்ற வானொலிக்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர். இந்த வானொலி 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. இதன் 8 பணியாளர்களில் 6 பேர் பெண்கள். இது அந்நாட்டின் ஒரே பெண்கள் … Read more