அமெரிக்காவை அடுத்தடுத்து தாக்கிய கடும் சூறாவளி: 32 பேர் பலி; பலர் காயம்

நியூயார்க்: அமெரிக்காவை அடுத்தடுத்து கடுமையான சூறாவளிகள் புரட்டிப்போட்ட நிலையில் அங்கே இதுவரை 32 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். சூறாவளிகளால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ” அமெரிக்காவின் மிஸிஸிப்பி மற்றும் அலபாமா மாகாணங்களில் கடந்த வாரம் வீசிய அதிசக்திவாய்ந்த சூறாவளி மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. சுமார் 23 பேர் வரை உயிரிழந்தனர். இந்த நிலையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மீண்டும் அமெரிக்காவை சூறாவளிகள் தாக்கியது. இதில் மெம்பிஸ், டென்னஸி ஆகிய மாகாணங்கள் … Read more

பெரிய அளவில் பணி நீக்கம் செய்ய தயாராகும் McDonald நிறுவனம்!

Mcdonald’s US Office Layoff: உலகின் மிகப்பெரிய துரித உணவு சங்கிலிகளில் ஒன்றான McDonald’s இந்த வாரம் அமெரிக்காவில் உள்ள அதன் அனைத்து அலுவலகங்களையும் தற்காலிகமாக மூடவுள்ளது. புதிய சுற்று ஆட்குறைப்பு குறித்து தனது நிறுவன ஊழியர்களுக்கு தெரிவிக்க நிறுவனம் தயாராகி வருகிறது. வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. திங்கள் முதல் புதன்கிழமை வரை வீட்டிலிருந்து வேலை செய்யத் தொடங்குமாறு நிறுவனம் தனது அமெரிக்க ஊழியர்களுக்கு கடந்த வாரம் மின்னஞ்சல் அனுப்பியது. மெக்டொனால்டு இந்த … Read more

ஈபிள் கோபுரம் அருகிலேயே மினி ஈபிள் கோபுரம் ஒன்றை உருவாக்கி காட்சிப்படுத்திய பிரான்ஸ் கலை நிபுணர்!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் கோபுரம் அருகிலேயே மினி ஈபிள் கோபுரம் ஒன்றை  உருவாக்கி காட்சிப்படுத்திய பிரான்ஸ் கலை நிபுணர் ஒருவர் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். ஏப்ரல் முதல் நாளன்று ஒரே நாளில் நிறுவப்பட்டுள்ள இந்த மினி ஈபிள் கோபுரத்துக்கு ஈபிலா என பெயரிடப்பட்டுள்ளது .இதனை உருவாக்கிய பிலிப் மைண்ட்ரோன் , பெரிய ஈபிள் கோபுரத்தின் 10-ல் ஒரு பங்கு பாகங்கள் மூலம் மினி ஈபிள் டவரை உருவாக்கியதாக தெரிவித்துள்ளார். பாரிசில் 2 வார காட்சிக்கு … Read more

சரணடையும் ட்ரம்ப்; ஆயத்தமாகும் நியூயார்க் நகரம்: வன்முறைகளை தவிர்க்க போலீஸ் குவிப்பு

நியூயார்க்: ஆபாசப் பட நடிகைக்கு ரகசியமாக பணம் கொடுத்த புகாரில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் விரைவில் சரணடைவார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் ட்ரம்ப் சரணடையும்போது போராட்டங்கள் நடந்தால் அதை கண்காணிக்கவும், வன்முறைகளைத் தவிர்க்கவும் நியூயார்க் நகரில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். டொனால்டு ட்ரம்ப் கடந்த 2016-ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டார். இந்த தேர்தலுக்கு முன்பு, ஸ்டோர்மி டேனியல்ஸ் என்ற … Read more

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் 262 உக்ரேனிய விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் – உக்ரைன் அமைச்சர்!

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் 262 உக்ரேனிய விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 363 விளையாட்டு கூடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு விளையாட்டுதுறை அமைச்சர் தெரித்துள்ளார். அடுத்தாண்டு பாரிசில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்ய வீரர்கள் அனுமதிக்கக் கூடாது என்றும், கடந்தாண்டு பிப்ரவரியில் போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனிய தேசிய அளவிலான விளையாட்டு வீரர்கள் பலர் தங்கள் நாட்டைப் பாதுகாக்க தானாக முன்வந்து ஆயுதம் ஏந்தி போரிட்டதாகவும் தெரிவித்தார்.  Source link

சூரியனை விட 33 பில்லியன் மடங்கு பெரிய கருந்துளை! ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்!

பிரமாண்டமான பிரபஞ்சத்தில்  இன்று வரை மிகப்பெரிய ரகசியமாகவும் மர்மமாகவும் உள்ள ஒரு   பொருள் கருந்துளை என்று தான் சொல்ல வேண்டும். இதில் அப்படி என்ன மிகப்பெரிய ரகசியம் உள்ளது என்று கேட்டால், இது இயற்பியலுக்கு அப்பாற்பட்டு செயல்படக்கூடியது. தற்போது இருக்ககூடிய எந்த இயற்பியல் விதிகளும் இந்த கருந்துளைக்கு பொருந்தாது என்பது தாம் மிகவும் ரகசியமான மர்மமான விஷயமாக உள்ளது. நாம் வசிக்கும்  இந்த பூமி சூரிய குடும்பத்தைச் சார்ந்தது. சூரியனைப் போன்ற ஏராளமான நட்சத்திரங்கள் இணைந்ததுதான் பால்வெளி … Read more

அபுதாபியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் புத்தகம் வெளியிட்டு கின்னஸ் சாதனை

புதுடெல்லி: சாதனை படைப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது. அபுதாபியைச் சேர்ந்த சயீத் ரஷீத் அல்மெய்ரி என்ற சிறுவன் தனது 4 வயதில் 218 நாட்களில் புத்தகத்தை வெளியிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளான். உலகில் மிக இளம் வயதில் புத்தகத்தை வெளியிட்ட இளம் தனி நபர் (ஆண்) என்ற பிரிவில் அந்த சிறுவன் இந்த சாதனையை படைத்துள்ளான். கடந்த மார்ச் மாதம் 9-ம் தேதி குழந்தைகள் விரும்பிப் படிக்கக் கூடிய ‘‘எலிஃபண்ட் … Read more

பாகிஸ்தானில் தீவிரமடையும் உணவுத் தட்டுப்பாடு: இலவச கோதுமை வாங்க குவிந்த மக்கள் நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு

கராச்சி: பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. கடன் சுமை அதிகரித்துள்ளதால், அதன் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது. இதனால், உணவு, மருந்து உட்பட அத்தியாவசிய பொருள்களை இறக்குமதி செய்ய முடியாத சூழலில் அந்நாடு உள்ளது. இதனால், அவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளது. பால், காய்கறி, சமையல் எரிவாயு, பெட்ரோல் விலை உச்சம் தொட்டுள்ளது. மக்கள் உணவு வாங்கபணம் இல்லாமல் திணறி வருகின்றனர். தற்போது ரமலான் மாதம் என்பதால் … Read more

தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க உள்ளதாக ஒபெக் நாடுகள் அறிவிப்பு!

தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க உள்ளதாக ஒபெக் நாடுகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதன்படி, கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள சவுதி அரேபியா வரும் மே மாதம் முதல் இந்த ஆண்டு இறுதி வரை தினமும் 5 லட்சம் பேரல்கள் மட்டுமே கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அதேபோல், ஒபெக் கூட்டமைப்பில் உள்ள ஈராக் 2 லட்சத்து 11 ஆயிரம் பேரல்களும், குவைத் 1 லட்சத்து 28 ஆயிரம் பேரல்களும், ஓமன் 40 … Read more