உக்ரைன் மீது தாக்குதல் 21 பேர் பரிதாப பலி | 21 people were tragically killed in the attack on Ukraine

உமன் உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய ஏவுகணைகள் மற்றும் ‘ட்ரோன்’கள் நடத்திய திடீர் தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனர். ‘நேட்டோ’ எனப்படும் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பில் சேர எதிர்ப்பு தெரிவித்து, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு போர் தொடுத்தது. இரு நாடுகளுக்கும் இடையே 14 மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இந்தப் போரில் உக்ரைன் தலைநகர் கீவ், கெர்சன், மரியுபோல் உள்ளிட்ட … Read more

இந்தோனேசியாவில் கடலில் படகு கவிழ்ந்து 11 பேர் உயிரிழப்பு

ஜகார்த்தா, இந்தோனேசியாவின் மேற்கு மாகாணமான ரியாவில் உள்ள இந்திரகிரி ஹிலிர் என்ற துறைமுக பகுதியில் இருந்து ரியாவ் தீவின் தலைநகரான தஞ்சோங் பினாங்குக்கு பயணிகள் படகு ஒன்று புறப்பட்டது. இதில் 80-க்கும் மேற்பட்டவர்கள் சென்று கொண்டிருந்தனர். இந்த படகு புளாவ் புருங் என்ற இடத்துக்கு அருகே உள்ள கடற்பகுதியில் சென்றபோது திடீரென கடலில் கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தத்தளித்து கொண்டிருந்தனர். இந்த சம்பவம் குறித்து கடலோர போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் … Read more

பாகிஸ்தானில் ஜூன் மாதத்திற்கு பிறகு நிலைமை இன்னும் மோசமாகும்: ஆய்வுகளின் பகீர் ரிப்போர்ட்

Pakistan Economic Crisis: இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு, பிற நாடுகளிலிருந்து நிதி உதவி பெறுவதில் அதிக சிரமங்கள் ஏற்படக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

துரத்தும் போர்… துயரத்தில் சூடான் வாழ் சிரிய நாட்டு மக்கள்!

“உயிர்பிழைத்த வேரறுந்த நபர்கள் இன்னொரு எதிர்காலத்தை உருவாக்கும் சக்தி படைத்தவர்கள்” – அகதிகள் வாழ்வு பற்றி ஓர் எழுத்தாளர் இப்படி எழுதியிருப்பார். சிரியா உள்நாட்டுப் போரில் இருந்து தப்பி பிழைக்கலாம் என்ற நம்பிக்கையில் சூடான் வந்த 30,000-க்கும் மேற்பட்டோர் இப்போது செய்வதறியாது திகைத்து வருகின்றனர். வான்வழித் தாக்குதல்கள், ஏவுகணைகள், துப்பாக்கிகள் என துயர்மிகு சூழலில் இருந்து மீண்டுவிட்டதாக நினைத்தவர்களை இப்போது மீண்டும் வேறொரு மண்ணில் அதே சத்தங்கள் துரத்துகின்றன. சூடானில் தற்போது ராணுவத்துக்கும் துணை ராணுவப் படைக்கும் … Read more

பிணங்களோடு உடலுறவு கொள்ளும் வழக்கம்.. கல்லறைகளை பூட்டும் பெற்றோர்.!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் பாகிஸ்தானில் இறந்த பெண்களின் கல்லறைகளில் பெற்றோர் பூட்டு போடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிணங்களோடு உடலுறவு கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்து வருவதன் காரணமாக பெற்றோர்கள் இத்தகையை முடிவுகளை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்து கழுத்து நெரிக்கப்பட்டு நிலையில் மூதாட்டி உயிரிழப்பு! நெக்ரோபிலியா உயிரிழந்தபின் பின் சடலங்களுடன் உடலுறவு கொள்ளும் நபர்களை நெக்ரோபிலியா … Read more

உலகிலேயே விலையுயர்ந்த தங்கம் கலந்த தண்ணீர் : ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலின் விலை ரூ.45 லட்சமாம்..!

24 கேரட் தங்கத் துகள்கள் கலந்துள்ள உலகில் விலையுயர்ந்த தண்ணீர் ஒரு பாட்டிலின் விலை 45 லட்சம் ரூபாயாகும். 2010 ஆம் ஆண்டில் கின்னஸ் புத்தகத்தில் உலகிலேயே விலை உயர்ந்த தண்ணீர் என அக்வா டி கிறிஸ்டல்லோ ட்ரிபுடோ எ மோடிக்லியானி பதிவு செய்யப்பட்டது. பிரான்ஸ் நாட்டிலிருந்து ஒரு நன்னீர் ஊற்றில் இருந்தும், ஃபிஜி நாட்டில் ஒரு நீரூற்றில் இருந்தும், ஐஸ்லாந்தின் பனிக்கட்டி ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் ஆகிய மூன்றும் கலக்கப்பட்டு இந்த தண்ணீர் விற்பனை … Read more

அமெரிக்காவில் ராணுவ பயிற்சியின்போது ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதல் – 3 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன், அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் ஹீலி என்ற இடத்தில் ராணுவத்தினர் நேற்று முன்தினம் வழக்கமான ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதில் ராணுவத்துக்கு சொந்தமான 2 ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டது. நடுவானில் பறந்தபோது திடீரென அந்த 2 ஹெலிகாப்டர்களும் நேருக்கு நேர் மோதின. இதில் ஹெலிகாப்டர்கள் கீழே விழுந்து அப்பளம்போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 2 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மற்றொரு வீரர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். … Read more

பிணங்களை வன்புணர்வு செய்யும் நெக்ரொபிலியாக்கள்… கல்லறைக்கு பூட்டு போடும் அவலம்!

Raise in Necrophilia Cases in Pakistan: பிணத்துடன் உறவுக்கொள்ளும் நெக்ரோபிலியா மன நிலை கொண்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை பாகிஸ்தானில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

நெதர்லாந்தில் 550 முறை விந்து தானம் செய்த ‘தாராள பிரபு’வுக்கு நீதிமன்றம் தடை

ஹேக் (நெதர்லாந்து): ஏறத்தாழ 550 முறை விந்து தானம் செய்த நபருக்கு, ‘இனி விந்து தானம் செய்யக் கூடாது’ என்று நெர்தர்லாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜோனாதன் ஜேக்கப் மெய்ஜர் என்ற அந்த நபர், இந்த உத்தரவை மீறி மீண்டும் விந்து தானம் செய்ய முயன்றால், அவருக்கு 1,00,000 யுரோஸ் (இந்திய மதிப்பில் ரூ.90,41,657) அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிர்வலையை ஏற்படுத்திய இந்தச் செய்தி, ஒரு தன்னார்வ அமைப்பும், ஜோனாதன் மூலம் குழந்தை பெற்ற தாய் … Read more

வாழைப்பழத்தை காட்டி வெறுப்பேற்றிய இளம்பெண்ணை முட்டி தூக்கிய யானை..!

வாழைப்பழத்தை காட்டி வெறுப்பேற்றிய பெண்ணை காட்டு யானை ஒன்று முட்டித் தள்ளியுள்ளது. வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா இது தொடர்பான வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். யானை முட்டியதில் அந்தப் பெண்ணுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. புத்திசாலித்தனமான விலங்குகளான யானைகளை பழக்கினாலும் கூட ஏமாற்ற முடியாது என்று வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா குறிப்பிட்டுள்ளார். Source link