“அந்த புல்லட்டுகள் நீண்ட கால பாதிப்புகளை தந்துள்ளன…” – மீண்டு வந்த இம்ரான் கான் பகிர்வு

இஸ்லாமாபாத்: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இம்ரான் கான் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்குப் பின்னர் மீண்டு வந்துள்ள இம்ரான் கான் ‘தி இண்டிபெண்டன்ட்’ பத்திரிகைக்கு ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் தன் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் உடலில் நீண்ட கால பாதிப்புகளை தந்துள்ளன என்று கூறியுள்ளார். முன்னதாக, 2022 அக்டோபர் இறுதியில் பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வலியுறுத்தி அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சியின் தலைவருமான இம்ரான் கான் பேரணியைத் தொடங்கினர். நவம்பர் … Read more

சூரியனில் 2-வது ராட்சத துளை: பூமியை விட 30 மடங்கு பெரிது!

நமது பால்வளி ஆண்டத்தில் உள்ள பிரமாண்ட நட்சத்திரமான சூரியனில் சமீப ஆண்டுகளாகவே பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு வருகிறது. அந்த வகையில் சூரியனில் மேற்பரப்பில் ராட்சத ‘துளை’ ஒன்று தோன்றியுள்ளது. இந்தத் துளையை கரோனல் துளைகள் என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். இந்த துளை பூமியை விட 30 மடங்கு அளவு பெரியது என்றும் கூறப்படுகிறது. இது குறித்து நாசா விஞ்ஞானிகள் கூறும்போது, “இந்த துளை காரணமாக வெள்ளிக்கிழமைக்குள் பூமியை நோக்கி 1.8 மில்லியன் அளவு சூரியக் காற்று … Read more

ஆளை விடுங்கப்பா… நாட்டை விட்டு ஓடும் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் பைலட்டுகள்..!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், பாகிஸ்தானில் வறுமையின் தாக்கம் தற்போது அனைத்து துறைகளிலும் காணப்படுகிறது. சமீபத்தில் ஏராளமான விமானிகள் நாட்டை விட்டு வெளியேறியதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் விமானப் போக்குவரத்து விவகாரங்களுக்கான நிலைக்குழுவுக்கு வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. உண்மையில், இந்த விமானிகள் தங்கள் சம்பளம் பெருமளவு குறைக்கப்படும் என அஞ்சுகிறார்கள். மேலும் பாகிஸ்தான் அரசாங்கம் அதிக வரி என்ற பெயரில் சம்பளத்தில் பாதியை எடுத்துக் கொள்ளவும் திட்டமிட்டு வருகின்றனர். பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் தலைமை … Read more

கிழக்கு உக்ரைனில் சண்டையிடும் ரஷ்யா… குடிநீருக்காக குளுரில் 10 கிலோமீட்டர் வரிசையில் நிற்கும் முதியவர்கள்

கிழக்கு உக்ரைனின் பக்முட் பகுதியில் ரஷ்யாவின் தாக்குதல் அதிகரித்துள்ள பொதுமக்கள் அடிப்படை தேவைகளை பெறுவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். பக்முட்டின் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சாசிவ் யாரில் குடிநீருக்காக முதியவர்கள் வரிசையில் காத்து இருக்கின்றனர். தங்களது வசிப்பிடங்களின் அருகே செல் தாக்குதல்கள் நடைபெற்று வருவதால் , அச்சத்துடன் இருப்பதாகவும் அதேவேளை பொறுமையுடன் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பக்முட் தற்போது ரஷ்யா ராணுவ நடவடிக்கையின் மையமாக இருப்பதாக உக்ரைன் ராணுவ செய்தி தொடர்பாளர் Serhiy Cherevatyi தெரிவித்துள்ளார். ரஷ்ய … Read more

உலக வங்கி தலைவர்: போட்டியின்றி தேர்வாகிறார் இந்திய வம்சாவளி அஜய் பங்கா| Ajay Banga poised to become World Bank chief unopposed

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ. அஜய் பால்சிங் பங்கா, உலக வங்கியின் அடுத்த தலைவராக போட்டியின்றி தேர்வாக உள்ளார். உலக வங்கி குழுமத்தின் தலைவராக 2019ம் ஆண்டு பதவியேற்ற டேவிட் மால்பாஸ், 66, பதவி காலம் 2024ம் ஆண்டு நிறைவடைகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உலக வங்கி தலைவர் பதவியிலிருந்து முன் கூட்டியே விலக உள்ளேன் என அறிவித்தார். அதன்படி வரும் ஜூன் … Read more

பாலாடைக் கட்டி தயாரிப்பில் ஈடுபட்ட பிரிட்டன் மன்னர் சார்லஸ்

அரசு முறை பயணமாக ஜெர்மனி சென்றுள்ள பிரிட்டன் மன்னர் சார்லஸ் அங்கு உள்ள சுற்று கிராமமான ப்ரோடோவினுக்கு சென்று அங்கு பாலாடை கட்டி தயாரிப்புகளை பார்வையிட்டார். பெர்லினில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுற்றுசூழல் கிராமத்துக்கு சென்ற சார்லஸ் உடன் ஜெர்மன் அதிபர் பிராங்கு வால்டர் மற்றும் பிராண்டன்பர்க் பிரதமர் டீட்மர் ஆகியோர் சென்றிருந்தனர். அங்கு திரண்டு இருந்த மக்களுக்கு சார்லஸ் வாழ்த்து தெரிவித்தார். சுற்று சூழல் கிராமத்தில் பாலாடை கட்டிகளை தயாரிப்பை பார்வையிட்ட … Read more

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம்… டொனால்டு டிரம்ப் மீது கிரிமினல் வழக்கு!

ஆபாச நட்சத்திரமான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு ரகசியமாக பணம் செலுத்தியதாக நியூயார்க் கிராண்ட் ஜூரி டிரம்ப் மீது குற்றம் சாட்டியுள்ளது. 2016 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக ஆபாச நடிகையுடன் இருந்த தொடர்பில் இருந்ததை மறைத்ததாக எழுந்த புகாரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டுள்ளது.  2006 ஆம் ஆண்டு ட்ரம்ப்பும், ஸ்டெபானி கிளிஃபோர்ட் என்ற ஆபாச நட்சத்திரமும் உறவில் இருந்ததாக கூறப்பட்டது. இதற்கு ஒரு வருடம் முன்பாக 2005 இல், டிரம்ப் தனது தற்போதைய … Read more

போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி

ரோம்: சுவாச பிரச்சினை காரணமாக போப் பிரான்சிஸ் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். போப் பிரான்சிஸுக்கு (86) கடந்த சில நாட்களாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக அவர் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா பாதிப்பு எதுவும் இல்லை. அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர் சிகிச்சைக்காக, அவர் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருப்பார் எனத் … Read more

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது கிரிமினல் வழக்கு: விரைவில் சரணடைவார் எனத் தகவல்

மான்ஹாட்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது மான்ஹாட்டன் கிராண்ட் ஜூரி கிரிமினல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதனால் அவர் கைதாகும் சூழல் எழுந்துள்ளது. இருப்பினும் கைதைத் தவிர்க்க ட்ரம்ப் தாமாகவே சரணடையலாம் என்றும் கூறப்படுகிறது. அடுத்த வாரம் சரணடைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 76 வயதான டொனால்ட் ட்ரம்ப் தன்னுடனான பாலியல் தொடர்பை மறைக்க பான் ஸ்டார் ஸ்டோமி டேனியல்ஸ்க்கு 1,30,000 டாலர் வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும் அவர் அந்தத் தொகையை 2016 தேர்தல் பிரச்சார … Read more