வேலையே செய்யாம இருக்கணும்; அதுக்கு ரூ.1.5 கோடி சம்பளம்: மெட்டா நிறுவன பெண் ஊழியரின் அனுபவம்…

வாஷிங்டன், மெட்டா நிறுவனத்தின் முன்னாள் பெண் ஊழியரான மேடலின் மசாடோ என்பவர் டிக்டாக் வீடியோ ஒன்றில் வெளியிட்ட செய்தியில், வேலையில் எதுவும் செய்யாமல் ஓராண்டுக்கு ரூ.1.5 கோடி என்ற அளவில் தனக்கு சம்பளம் அளிக்கப்பட்டது என தெரிவித்து உள்ளார். மெட்டா நிறுவனத்தில், வேலை எதுவும் செய்யாமல் ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளம், என்ற தலைப்பிலான அந்த வீடியோவில், மேடலின் வேலையில் இருந்தபோதே, வேறு புதிய பணியாளர்கள் யாரையும் பணியில் சேர்க்காமல் தனது நிறுவனம் எப்படி செயல்பட்டது என்பது … Read more

சவுதி அரேபிய டிவியில் அதிக பார்வையாளர்களை ஈர்த்த அமெரிக்க அதிபர், துணை அதிபரின் கேலி வீடியோ..!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலாஹாரிஸ் ஆகியோரை கேலியாக சித்தரித்து சவுதி அரேபியா தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட கேலி வீடியோ அதிக பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. அமெரிக்க கொடிக்கு முன்னால் நிற்கும் பைடன் கை குலுக்குவதற்கு ஆள் கிடைக்காமல் அங்கும் இங்கும் கைகளை நீட்டியவாறு செல்வதும், அப்போது அங்கு வரும் கமலாஹாரிஸ் உதவுவது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு காட்சியில், விமானத்தில் சல்யூட் செய்துக் கொண்டே ஏறும் பைடன் சறுக்கி கீழே விழுவதையும் அதனை கமலா … Read more

சுனாமியை ஏற்படுத்தும் புதிய அணு ஆயுதம் கடலுக்கு அடியில் பரிசோதனை – வடகொரியா தகவல்

பியாங்யாங், வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே தீராப்பகை நிலவுகிறது. வடகொரியா தனது அணு ஆயுதங்களால் தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது. இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள தென்கொரியாவுக்கு அமெரிக்கா பெரும் பக்கபலமாக இருந்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கடந்த வாரம் கொரிய தீபகற்பத்தில் பிரமாண்ட கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் … Read more

உக்ரைன் போர்; 4 லட்சம் ஒப்பந்த படை வீரர்களுக்கு அழைப்பு; ரஷ்யா வெறி.!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா 4 லட்சம் ஒப்பந்த படை வீரர்களை பணியமர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் போர் ரஷ்யா – உக்ரைன் போர் ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. உக்ரேனிய மற்றும் மேற்கத்திய அதிகாரிகளின் கூற்றுப்படி, ரஷ்யாவால் கடந்த இலையுதிர்காலத்தில் அணிதிரட்டப்பட்ட 3 லட்சம் துருப்புக்களில் கிட்டத்தட்ட அனைவரும் இப்போது போர்க்களத்தில் உள்ளனர். ஆனால் சமீபத்திய மாதங்களில் ரஷ்யா எந்த முக்கிய நகரங்களையும் கைப்பற்ற … Read more

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதே ஆயுதப்படைகளின் பெரியப் பணி – தைவான் அதிபர் சாய் இங் வென்

அமெரிக்க பயணத்திற்கு முன்னதாக தைவான் அதிபர் சாய் இங் வென் தங்கள் நாட்டு படைகளை ஆய்வு செய்தார். இன்று ராணுவப் பொறியாளர்களை சந்தித்து அவர்களின் பயிற்சியை ஆய்வு செய்த சாய் இங் வென், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதே ஆயுதப்படைகளின் பெரியப் பணி என தெரிவித்தார். சீனா-தைவான் இடையே கடந்த சில மாதங்களாக பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், தைவான் அதிபர் சாய் இங் வென் அடுத்தவாரம் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார். Source link

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பிரபல “சுற்றுலா தலமான லேக் தாஹோவில் கடும் பனிப்பொழிவு”..!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான லேக் தாஹோவில் சுமார் 50 அடி அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. வீடுகளின் மேற்கூரைகளில் பனிக் குவிந்து கிடப்பதால், பாரம் தாங்காமல் மேற்கூரை இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் மேற்கூரைகள் இடிந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லேக் தாஹோவில் மார்ச் 28ம் தேதி வரை அதிக பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.     Source link

பென்சில்வேனியாவின் வெஸ்ட் ரீடிங்கில் உள்ள சாக்லேட் தொழிற்சாலையில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு

பென்சில்வேனியாவின் வெஸ்ட் ரீடிங்கில் உள்ள சாக்லேட் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். கடந்த 1948ம் ஆண்டு முதல் இயங்கி வரும் பிரபலமான ஆர்.எம்.பால்மர் எனும் சாக்லேட் தொழிற்சாலையில் 850 பேர் பணிபுரிகின்றனர். இந்நிலையில் தொழிற்சாலையின் 2ம் கட்டிடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் அருகிலிருந்த கட்டிடம் ஒன்றும் சேதமடைந்துள்ளது. இதில் சிக்கி 9 பேர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மீட்புப் பணிகள் தொடரும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து … Read more

100 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் வரும் – புதினிடம் கூறிய ஜி ஜின்பிங் – வைரல் வீடியோ

மாஸ்கோ: 100 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் வரும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் புதினிடம் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. சீன அதிபர் ஜி ஜின்பிங், 3 நாட்கள் பயணமாக இந்த வாரம் ரஷ்யா வந்திருந்தார். இந்த சந்திப்பில் இரு நாடுகளின் பரஸ்பர உறவுகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.இந்த ஆலோசனையில் உக்ரைன் உடனான ரஷ்யாவின் போர் விவகாரம் முக்கியத்துவம் பெற்றது. இரு நாட்டு வணிக உறவு குறித்தும் ஆலோசனை … Read more

'அதுக்கு கூட இப்ப பணம் இல்ல’: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அளித்த பகீர் தகவல்

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி: பாகிஸ்தானில் இந்நாட்களில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத மிக ஏழ்மையான நிலையில் தற்போது பாகிஸ்தான் உள்ளது. மக்கள் அடிப்படை வசதிகள் மற்றும் சேவைகளுக்கு கூட அல்லல்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். மக்களின் அத்தியாவசிய தேவைகளான கோதுமை மாவு, பருப்பு வகைகள் மற்றும் எரிபொருளின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இவ்வாறான நிலையில் எதிர்வரும் நாட்களில் பாகிஸ்தான் தனது நாட்டில் பொதுத் தேர்தலை நடத்தும் நிலைக்கு தள்ளப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. … Read more