அடுத்தடுத்து ஏவுகணை சோதனை – வடகொரியா அதிரடி…!

பியாங்யாங், அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா – தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக எல்லை தொடர்பாக மோதல் பிரச்சினை நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், இன்று ஒரேநாளில் அடுத்தடுத்து 4 ஏவுகணைகளை … Read more

ரஷ்யாவை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு கூடுதலாக ட்ரோன்கள் வழங்கப்படும் – ஆஸ்திரேலியா அரசு

உக்ரைனில் போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், ரஷ்யாவை எதிர்த்து போரிட உதவியாக உக்ரைனுக்கு கூடுதலாக ட்ரோன்கள் வழங்கப்படும் என ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், உக்ரைனில் படைகளை திரும்பப்பெற்று உடனடியாக போரை நிறுத்துமாறு ரஷ்ய அதிபர் புடினை வலியுறுத்தினார். இதனிடையே, ஓராண்டாக போரை எதிர்கொள்ளும் உக்ரைனுக்கு ஆதரவாக, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மக்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.  Source link

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65.20 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 கோடியே 92 லட்சத்து 76 ஆயிரத்து 249 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 4 லட்சத்து 10 ஆயிரத்து 986 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து … Read more

உலக வங்கியின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளி அஜய் பங்காவை பரிந்துரைத்த அமெரிக்க அதிபர்

வாஷிங்டன், உலக வங்கியின் தலைவராக பதவி வகித்து வருபவர் டேவிட் மல்பாஸ். இவர் தனது பதவி முடிவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், உலக வங்கியின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அதிகாரி அஜய் பங்காவின் பெயரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். இதுதொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அஜய் பங்கா மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றினார். தற்போது … Read more

புதிய தகவல்தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது சீனா.!

புதிய தகவல்தொடர்பு செயற்கைக்கோளை சீனா விண்ணில் செலுத்தியது. சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-3 பி ராக்கெட் மூலம், சீனாசாட் 26 என்ற செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. செயற்கைக்கோள்கள் அதன் சுற்றுப்பாதையில் நுழைந்ததாகவும், இது லாங் மார்ச் சீரிஸ் ராக்கெட்டுகளின் 463-வது திட்டம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் மற்றும் விமான போக்குவரத்திற்கான அதிவேக இணைய சேவைகளுக்காக பயன்படுத்த உள்ளது. Source link

Lasting Peace: ரஷ்யா உக்ரைன் மீதான போர் தொடங்கி ஓராண்டு நிறைவு! ஐநா தீர்மானத்தில் இந்தியா அதிருப்தி

Russia Ukraine War: ரஷ்யாவின் படையெடுப்பு தொடர்பாக ஐநாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்கவில்லை. உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி தனது தாக்குதலை தொடங்கிய ரஷ்யா, ஓராண்டாக சண்டையை நிறுத்தாமல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. போர் தொடங்கி ஓரண்டாகியும் தொடரும் தாக்குதல்களின் பாதிப்பு தொடர்பாக தீர்மானத்தை வெளியிட்டது ஐநா. ஐநா தீர்மானம் உக்ரைனில் “விரிவான, நியாயமான மற்றும் நீடித்த அமைதிக்காக” ரஷ்யா உடனடியாக சண்டை நிறுத்தம் என்ற முடிவை எடுக்க வேண்டும் என்று … Read more

ஐ.நா. பொதுச் சபையில் உக்ரைன் கொண்டுவந்த தீர்மானம்: வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா

நியூயார்க்: ஐ.நா. பொதுச் சபையில் உக்ரைன் கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இரு நாடுகள் இடையிலான போர் ஓராண்டை எட்டியுள்ளது. இரு தரப்பிலும் இதுவரை தலா ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் பேர் அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சமடைந்து உள்ளனர். இந்த சூழலில் உக்ரைனில் இருந்து ரஷ்ய ராணுவம் உடனடியாக … Read more

அமெரிக்காவில் மோசமான வானிலையால், நடுவானில் விமானம் தீப்பற்றி எரிந்து விபத்து – 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் சுற்றுச்சூழல் ஆலோசனை நிறுவனத்துக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், 5 பேர் உயிரிழந்தனர். ஓஹியோ மாகாணத்தில் உலோக ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்து சம்பவத்துக்கு ஆலோசனை அளிக்கச் சென்ற நார்த் லிட்டில் ராக்கை தளமாகக் கொண்ட சுற்றுச்சூழல் ஆலோசனை நிறுவன ஊழியர்கள் சிறிய ரக விமானத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென இடியுடன் கூடிய மழைபெய்து பலத்த காற்றும் வீசியதால், நடுவானில் விமானம் தீப்பற்றி எரிந்து விழுந்தது. இதில், விமானி உட்பட … Read more

காயத்தை வேகமாக குணப்படுத்தும் இ-பேண்டேஜ்

வாஷிங்டன்: உடலில் ஏற்படும் காயங்கள் குணமடைவதை 30% வேகப்படுத்த உதவும் இ-பேண்டேஜ் என்றமின்னணு கருவியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பான ஆய்வு முடிவுகள் மருத்துவ இதழ் ஒன்றில் வெளியாகி உள்ளது. இதன்படி, 2 எலிகளுக்கு காயத்தை ஏற்படுத்திஅவற்றில் ஒன்றுக்கு புதிய இ-பேண்டேஜை பொருத்தி உள்ளனர். மற்றொரு எலியை அப்படியே விட்டுள்ளனர். இதில்,குறிப்பிட்ட நாளில் இ-பேண்டேஜ் பொருத்தப்பட்ட எலி வேகமாககுணமடைந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து இந்த ஆராய்ச்சிக்கு தலைமை வகித்தவர்களில் ஒருவரும் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவருமான ஏ.அமீர் கூறும்போது, “நீரிழிவுநோயாளிகளுக்கு … Read more

புதிய விண்மீன் திரளை கண்டறிந்துள்ள விஞ்ஞானிகள்

விண்வெளி தொலைநோக்கி மூலம் பால்வளி மண்டலத்திற்கு அப்பால் உள்ள புதிய விண்மீன் திரளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் ஸ்வின்பர்ன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள், ஜேம்ஸ் வெப் விண்வெளி  தொலைநோக்கி மூலம் ஆய்வு நடத்தினர். அப்போது பிரபஞ்சம் தோன்றிய பின்னர் 300 மில்லியன் ஆண்டுகளுக்குள் இருக்கும் புதிய விண்மீன் திரளைக் கண்டுபிடித்துள்ளனர். அதன் அனைத்து நட்சத்திரங்களின் மொத்த எடை சூரியனை விட 100 பில்லியன் மடங்கு அதிகமாக இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். Source link