''இந்தியா உடனான உறவு மேலும் வலுப்பெற வேண்டும்'' – அமெரிக்க அதிபர் பைடன்

வாஷிங்டன்: இந்தியா உடனான உறவு மேலும் வலுப்பெற அமெரிக்கா விரும்புவதாக அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனத்திடம் இருந்து டாடா குழுமத்தின் ஏர் இந்தியா விமான நிறுவனம் 290 விமானங்களை வாங்க முடிவு செய்து அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கான அறிவிப்பு முறைப்படி வெளியிடப்பட்டதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் ஜோ பிடனும் தொலைபேசி வாயிலாக உரையாடினர். அப்போது, இரு தலைவர்களும் பேசியது குறித்து அந்நாட்டு தலைமை செய்தித் … Read more

தன்னைத்தானே கிண்டல் செய்துக் கொள்ளும் எலோன் மஸ்க்! ட்விட்டரின் புதிய CEO எப்படி?

 உலக பில்லியனர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ள எலோன் மஸ்க், கிண்டல் கேலி நையாண்ட்டி செய்வதிலும் வல்லவர் என்று சொல்லிவிடலாம் போல் இருக்கிறது. ட்விட்டரை வாங்கியதில் மட்டுமா அவர் வைரலானார்? மஸ்க் என்றாலே அதன்பிறகு அதிரடி நடவடிக்கைகள் தான் என்று புகழ் பெற்றவர் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர். தற்போது ட்விட்டருக்கும் உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.  ட்விட்டரை வாங்கிய தினமே அதன் தலைமை நிர்வாக அதிகாரிகளை அதிரடியாக நீக்கிய மஸ்க், கடந்த சில … Read more

துருக்கி இடிபாடுகளில் சிக்கித் தவித்த நாய் 8 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு..!

துருக்கியின் சமன்டாக் நகரில், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளுக்கு இடையில் சிக்கித் தவித்த நாய் 8 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில் இருந்து நாயை மீட்ட மீட்புக் குழுவினர், அதனை அரவணைத்து தூக்கிச் சென்றனர். நாயின் உரிமையாளர்கள் கடந்த 2020ம் ஆண்டு இஸ்மிர் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்து, ஹடாய் மாகாணத்துக்கு வந்துள்ளனர். ஆனால், தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி அவர்கள் பலியானதாக இஸ்தான் புல் மேயர் தெரிவித்துள்ளார். துருக்கி மற்றும் சிரியாவில் இறப்புகள் எண்ணிக்கை … Read more

மலையாள கரையோரத்தில் இருந்து அமெரிக்க அதிபர் பதவியை நோக்கி…| Indian-American Republican Vivek Ramaswamy May Run For US President

வாஷிங்டன் : அடுத்தாண்டு நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், கேரளாவை பூர்விகமாக கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில் அதிபர் விவேக் ராமசாமி 37, போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்தாண்டு நவம்பரில் நடக்கவுள்ளது.இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் 76, ஏற்கனவே அறிவித்து விட்டார். அமெரிக்காவில் பிரதான கட்சிகளான ஜனநாயக கட்சி மற்றும்குடியரசு கட்சிகள் சார்பில் அதிபர் தேர்தலில் … Read more

நியூசிலாந்தில் சூறாவளி தாக்குதல்: குடும்பங்களை பிரிந்து ஆயிரக்கணக்கானோர் தவிப்பு; மின் இணைப்பு துண்டிப்பு

வெல்லிங்டன், நியூசிலாந்து நாட்டில் கேப்ரியல்லா சூறாவளியால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. அந்நாட்டு வரலாற்றில் 3-வது முறையாக தேசிய அளவிலான அவசரநிலை உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆக்லாந்து, நார்த்லேண்ட், தைராவிட்டி, பே ஆப் ப்ளென்டி பகுதி, ஓபோடிகி, வகாதனே மாவட்டம், வைகாடோ பகுதி, தேம்ஸ்-கோரமண்டல், ஹவுராக்கி மாவட்டம், வைகாடோ மாவட்டம், தாராருவா மாவட்டம், நேப்பியர் சிட்டி மற்றும் ஹேஸ்டிங்ஸ் மாவட்டம் ஆகியவற்றில் முன்பே உள்ளூர் அளவிலான அவசரநிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. சூறாவளி புயலை … Read more

ஹிந்தி மொழிக்கு முக்கியத்துவம் தேவை: ஜெய்சங்கர் பேச்சு | “Focus should be on….Hindi language, its global use and its dissemination,” Jaishankar at 12th Vishwa Hindi Sammelan

சுவா: ஹிந்தி மொழிக்கு முக்கியத்துவம் தேவைப்படுகிறது. காலனித்துவ காலத்தில் ஒடுக்கப்பட்ட பல மொழிகள் மற்றும் மரபுகள் மீண்டும் உலக அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது என 12 வது உலக ஹிந்தி மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். பசிபிக் கடல் தீவு நாடான பிஜியில், 15 முதல் 17ம் தேதி வரை, 12வது உலக ஹிந்தி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை, அந்நாட்டு பிரதமர் சித்திவேணி ரபுகாவுடன் இணைந்து, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று(பிப்., … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65.04 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 கோடியே 78 லட்சத்து 53 ஆயிரத்து 156 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 6 லட்சத்து 34 ஆயிரத்து 849 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து … Read more

துருக்கி துயரம் | ஊரைச் சுற்றும் துர்நாற்றம்; இன்னமும் கேட்கும் மெல்லிய அபயக் குரல்கள்; பலி 41,000ஐ கடந்தது

அங்காரா: துருக்கியில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி மிகவும் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. 7.8 ரிக்டராக பதிவான அந்த பூகம்பம் ஏற்படுத்திய தாக்கத்தால் இதுவரை துருக்கி மற்றும் சிரியாவில் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பூகம்பம் நிகழ்ந்து 10 நாட்களை நெருங்கும் சூழலில் ஊரெங்கும் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. மலைபோல் கட்டிடக் கழிவுகள் குவிந்துகிடக்க இன்னமும் சில இடிபாடுகளுக்கு அடியிலிருந்து அபயக் குரல்கள் கேட்கின்றன. துருக்கியில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள சல்மான் அல்தீன் என்பவர், “நான் அன்டாக்கியா … Read more

துருக்கியில் அபார மருத்துவ சேவை: மக்களின் மனம் கவர்ந்த இந்திய ராணுவம்| Great medical service for people in Turkey: Indian army impresses people

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அங்காரா: துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய ராணுவத்தினர் தற்காலிக மருத்துவமனை அமைத்து மருத்துவ சேவை அளித்து வருவது அந்நாட்டு மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில், 6ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வலுவான நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகளால், 12 ஆயிரம் கட்டடங்கள் தரைமட்டமாகின. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடிபாடுகளில் சிக்கி உள்ளோரை மீட்கும் … Read more

சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற நுழைவு வாயில் அருகே வெடிகுண்டு கவசம் அணிந்த நபரால் பரபரப்பு

பெர்னே, சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகர் பெர்னேவில் அமைந்த நாடாளுமன்றத்தின் நுழைவு வாயில்களில் ஒன்றின் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு நபர் காணப்பட்டு உள்ளார். இதுபற்றி பெர்னே நகர போலீசார் கூறும்போது, அரண்மனை பகுதியின் தெற்கு நுழைவு வாயில் அருகே பாதுகாப்பு கவசம் உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு சந்தேகப்படும்படியாக ஒரு நபர் நின்று கொண்டு இருந்துள்ளார். அவரை மத்திய பாதுகாப்பு படை பணியாளர்கள் நேற்று மதியம் கண்டுள்ளனர். இதனை தொடர்ந்து அந்நபரிடம் தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்ட சோதனையில், விரைவு … Read more