கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் பாரம்பரிய திருவிழாவில் இசைக்கருவி வாசித்த 5 ஆயிரம் கலைஞர்கள்..!

தென்அமெரிக்க நாடான பொலிவியாவின் ஓருரோ நகரில் நடைபெற்ற பாரம்பரிய திருவிழாவில் சுமார் 5 ஆயிரம் இசைக்கலைஞர்கள் வண்ணமயமான உடையணிந்து இசைக்கருவிகளை வாசித்தனர். பழங்குடியின உரு மக்கள் தங்களை பாதுகாக்கும் வாக்கா கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படும் இத்திருவிழாவில், பொலிவியா ஜனாதிபதி லூயிஸ் ஆர்க் சக அதிகாரிகளுடன் சேர்ந்து நடனமாடினார். பழங்குடியினரின் சடங்குகளை ஸ்பெயின் அரசு தடை செய்த பிறகு கிறிஸ்தவ மத கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கொண்டாடப்படும் இந்த திருவிழாவில் சுமார் 2 மணி நேரத்திற்கு … Read more

துருக்கியில் கட்டட இடிபாடுகளுக்கிடையே 6 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட தந்தை, மகள்..!

துருக்கியின் தென்கிழக்கு மாகாணமான ஹடேயில் நிலநடுக்கம் ஏற்பட்டு 6 நாட்களுக்குப் பிறகு இடிபாடுகளுக்கிடையே இருந்து தந்தையும், அவரது 5 வயது மகளும் மீட்கப்பட்டனர். கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கித் தவித்த அவர்களை மீட்புக்குழுவினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்துள்ளது.  Source link

நியூசிலாந்தை அச்சுறுத்தும் புயல் விமான சேவை கடும் பாதிப்பு| Storm threatening New Zealand severely affects airline service

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வெலிங்டன்,-பசிபிக் தீவு நாடான நியூசிலாந்தில், ‘கேப்ரியல்’ என பெயரிடப்பட்டுள்ள புயல், ஆக்லாந்து நகருக்கு அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி ஆக்லாந்திற்கான உள்ளூர் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுஉள்ளது. நியூசிலாந்தின் ஆக்லாந்தில் கடந்த மாதம் வரலாறு காணாத மழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கேப்ரியல் புயல் உருவாகி, நியூசிலாந்து மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த புயல் ஆக்லாந்து அருகே கரையை கடக்கும் என … Read more

குலுங்கிய மருத்துவமனை கட்டிடம்… இன்குபேட்டர்களில் இருந்த குழந்தைகளை கீழே விழாத வண்ணம் பாதுகாத்த செவிலியர்கள்.!

துருக்கியின் காசியாண்டெப் நகரில் கடந்த வாரம் நிலநடுக்கம் ஏற்பட்ட போது ஒரு மருத்துவமனையில் இன்குபேட்டர்களில் வைக்கப்பட்டிருந்த பச்சிளங்குழந்தைகளை செவிலியர்கள் பாதுகாத்த வீடியோ வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தின் போது மருத்துவமனை கட்டிடம் குலுங்கியதில், பிறந்த குழந்தைகள் பிரிவில் இருந்த இன்குபேட்டர்களும் குலுங்கின. நிலநடுக்கத்தை உணர்ந்த இரண்டு செவிலியர்கள் ஓடி வந்து, குழந்தைகள் கீழே விழாமல் பாதுகாக்க, இன்குபேட்டர்களை பிடித்துக் கொண்ட வீடியோவை துருக்கி சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. Source link

எதிரொலி கேட்டான்.. வானொலி படைத்தான்… – இன்று உலக வானொலி தினம்| He heard the echo.. The radio was a force… – Today is World Radio Day

ஐ.நா.வின் கல்வி , அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ )ஆண்டு தோறும் பிப்ரவரி 13-ம் தேதியை உலக வானொலி தினமாக கடைபிடிக்கிறது. கடந்த 2011-ம் ஆண்டு ஐ.நா. 36-வது பொதுச்சபை கூட்டத்தில் முதன்முதலாக ஸ்பெயின் , நவம்பர் 3-ம் தேதியை உலக வானொலி தினமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியது.அதன் பின்னர் பிப்ரவரி 13-ம் தேதியை உலக வானொலி தினமாக யுனெஸ்கோ அறிவித்தது.. நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல் , ஸ்மார்ட்போன், ஐ.பேட், … Read more

”துருக்கி, சிரியாவில் நிலநடுக்க உயிரிழப்புகள் 50,000-ஐ தாண்டும்..” – ஐ.நா. எச்சரிக்கை..!

துருக்கியில், வாட்டி வதைக்கும் கடும் குளிரை பொருட்படுத்தாமல் மீட்பு பணிகள் இரவு பகலாக நடைபெற்றுவருகின்றன. 150 மணி நேரத்திற்கு பிறகும் இடிபாடுகளில் சிக்கியவர்கள் சிலர் உயிருடன் மீட்கப்படுவது மீட்பு குழுவினருக்கு உற்சாகமளித்துள்ளது. துருக்கி, சிரியாவில் உயிரிழப்புகள் 29 ஆயிரத்தை தாண்டிய நிலையில், இந்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டக்கூடும் என ஐநா கணித்துள்ளது. நிலநடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாமல் கட்டடங்களை எழுப்பிய பில்டர்கள், அவர்களுக்கு துணை போன அதிகாரிகள் என 113 பேரை கைது செய்ய துருக்கி … Read more

30 ஆயிரத்தை கடந்தது பலி எண்ணிக்கை துருக்கியில் தொடரும் மீட்பு நடவடிக்கை| Death toll exceeds 30,000 as rescue operations continue in Turkey

டமாஸ்கஸ்- துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தில் பலியானோரின் எண் ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், கட்டடக் குவியல்களுக்கு நடுவே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து முழு வீச்சில் நடந்து வருகிறது. மேற்காசிய நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோளில் 7.8 ஆக பதிவானது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வலுவான நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகளால், 12 ஆயிரத்துக்கும் அதிகமான கட்டடங்கள் தரைமட்டமாகின. பாதிக்கப்பட்ட பகுதிகளில் … Read more

காரை மோத வைத்து 3 இஸ்ரேலியரை கொன்ற கார் ஓட்டுநர் சுட்டுக்கொலை

ஜெருசலேமில் காரை மோத வைத்து 3 இஸ்ரேலியரை கொன்றதாக, பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த கார் ஓட்டுநரை சுட்டுக் கொன்ற இஸ்ரேலிய போலீசார், அவரது வீட்டிற்கும் சீல் வைத்தனர். கடந்த மாதம் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த 7 பேர் மீது பாலஸ்தீனியர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே எல்லையில் அடிக்கடி மோதல் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில், பேருந்து நிலையத்தில் கூட்டத்திற்குள் காரை செலுத்தி 3 பேரை கொன்றதை தீவிரவாத தாக்குதலாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்ததைத் தொடர்ந்து, … Read more

துருக்கி, சிரியாவில் நிலநடுக்க உயிரிழப்புகள் 50,000-ஐ தாண்டும் : ஐ.நா. எச்சரிக்கை

துருக்கியில், வாட்டி வதைக்கும் கடும் குளிரை பொருட்படுத்தாமல் மீட்பு பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன. 150 மணி நேரத்திற்கு பிறகும் இடிபாடுகளில் சிக்கியவர்கள் சிலர் உயிருடன் மீட்கப்படுவது மீட்பு குழுவினருக்கு உற்சாகமளித்துள்ளது. துருக்கி, சிரியாவில் உயிரிழப்புகள் 33 ஆயிரத்தை தாண்டிய நிலையில், இந்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டக்கூடும் என ஐநா கணித்துள்ளது. நிலநடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாமல் கட்டடங்களை எழுப்பிய பில்டர்கள், அவர்களுக்கு துணை போன அதிகாரிகள் என 113 பேரை கைது செய்ய … Read more

துருக்கி – ஆர்மீனியா இடையே மோதல் போக்கால் மூடப்பட்டிருந்த எல்லை சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு திறப்பு..!

துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக, துருக்கிக்கும் ஆர்மீனியாவுக்கும் இடையேயான எல்லை சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்டது. துருக்கியில் ஒட்டோமன் பேரரசு காலத்தில், கடந்த 1915ம் ஆண்டு 15 லட்சம் ஆர்மீனிய மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டதால், அலிகன் எல்லை மூடப்பட்டது. பின், 1988ம் ஆண்டு ஆர்மீனியா நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட போது துருக்கி நிவாரண பொருட்களை அனுப்புவதற்காக இந்த எல்லை கடைசியாக திறக்கப்பட்டது. அதன் பிறகு, … Read more