துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர் உயிரிழப்பு

துருக்கி நிலநடுக்கத்தின்போது மாயமான இந்தியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். தொழில் நிமித்தமாக அங்கு சென்றிருந்த என்ஜினீயர் விஜய்குமார் என்பவர் தங்கியிருந்த அடுக்குமாடி ஹோட்டலும் நிலநடுக்கத்தில் இடிந்து தரைமட்டானது. உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவரது குடும்பத்தினர், மீட்புக் குழுவினருக்கு அனுப்பிய புகைப்படங்களின் அடிப்படையில்அவரது உடல் அடையாளம் காணப்பட்டது.  விஜய்குமார் உடலை இந்தியாவுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Source link

துருக்கி பூகம்ப இடிபாட்டில் 128 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் 2 மாத குழந்தை மீட்பு| This Two-Month-Old Survived Under Rubble For 128 Hours After Turkey Quake

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அங்காரா: துருக்கி பூகம்ப இடிபாட்டில் சிக்கிய 2 மாத கைக்குழந்தை ஒன்று 128 மணி நேரத்திற்கு பிறகு, உயிருடன் மீட்கப்பட்டது. துருக்கி மற்றும் சிரியாவில், கடந்த திங்கட்கிழமை 7.8 ரிகடர் அளவில் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் நொறுங்கியுள்ளன. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி இரவு பகல் பாராமல் நீடிக்கிறது. இந்தியா உள்ளிட்ட ஏராளமான உலக … Read more

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் பேருந்தின் மீது விமானம் மோதி விபத்து..!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர விமான நிலையத்தில் பயணிகளுக்கான பேருந்து ஒன்றின் மீது விமானம் மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். விமான நிலையத்தின் ஒரு வாயிலில் இருந்து விமானங்கள் நிறுத்தும் இடத்திற்கு, விமானம் ஒன்று இழுத்து செல்லப்பட்டது. அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக விமான பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து மீது விமானம் மோதியது. இதில், பேருந்தில் இருந்த 5 பேர் காயமடைந்தனர்.  விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. Source link

”நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா மக்களுக்கு அவசரகால விசா வழங்கப்படும்..” – ஜெர்மனி அரசு

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா மக்களுக்கு, 3 மாதங்கள் வரையிலான அவசரகால விசாக்களை வழங்க ஜெர்மனி அரசு முன்வந்துள்ளது.  இது குறித்து பேசிய ஜெர்மனி உள்துறை அமைச்சர் நான்சி ஃபைசர், தங்கள் நாட்டில் வசிக்கும் துருக்கி அல்லது சிரிய மக்கள் தங்களது நெருங்கிய உறவினர்களை ஜெர்மனிக்கு அழைத்துவர அரசு விரும்புவதாக தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடம் மற்றும் சிகிச்சை பெற வசதியாக 3 மாத காலங்களுக்கு விசா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 29 … Read more

Brazil Statue lightning: இயேசுவின் தலையில் திடீரென தெரிந்த ஒளி… நொடியில் சிக்கிய புகைப்படம்

இயற்கையில் நடக்கும் சில நிகழ்வுகள் உங்களை வாயடைத்து வியக்க வைக்கும். அதிர்ஷ்டவசமாக, கேமராக்கள் மற்றும் சமூக ஊடகதளங்கள் இருப்பதால், உலகில் நீங்கள் எங்கு இருந்தாலும், இதுபோன்ற ஒரு வகையான நிகழ்வுகளைப் பார்த்து ரசிக்க உங்களை அனுமதிக்கிறது.  சமீபத்தில் பிரேசிலில் அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது. பிரேசிலில் உள்ள புகழ்பெற்ற இயேசு கிறிஸ்து சிலையான, ‘Christ the Redeemer’சிலை மின்னல் தாக்குதலால் பாதிக்கப்பட்டது. இந்த சிலையை மின்னல் தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  … Read more

பாகிஸ்தானில் மத நிந்தனை குற்றத்திற்காக கொடூரமாக கொலை செய்யப்பட்ட 20 வயது இளைஞர்!

பாகிஸ்தானில் மத நிந்தனை குற்றத்திற்காக கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது. தெய்வ நிந்தனை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குற்றவாளியை கும்பல் கொடூரமாக தாக்கியது. இந்தக் கும்பல் நங்கனா சாஹிப் காவல் நிலையத்தைக் கைப்பற்றி, குற்றவாளியை வெளியே இழுத்துச் சென்றது. குற்றம் சாட்டப்பட்டவர் பகிரங்கமாக நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டு பின்னர் உயிருடன் எரிக்கப்பட்டார். அங்கிருந்த போலீசார் வெறும் பார்வையாளர்களாகவே இருந்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு … Read more

மேயர் பதவி விலகல் | Resignation of Mayor

டோராண்டோ:கனடாவில் 30 வயது பெண்ணுடன் ஏற்பட்ட காதல் அம்பலமானதால், டோராண்டோ நகர மேயர் ஜான் டோரி பதவி விலகினார். கனடா தலைநகர் டோராண்டோ நகர மேயராக இருந்தவர் ஜான் டோரி 68. இவருக்கும் அலுவலக உதவியாளரான 30 வயது பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்தது சமீபத்தில் அம்பலமானது. இதையடுத்து பதவி விலகுமாறு மேயருக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ அறிவுறுத்தினார். நேற்று ஜான்டோரி பதவியை ராஜினாமா செய்தார். துணை மேயரான ஜெனிபர் மெல்கல்வி மேயராக பொறுப்பேற்றார். டோராண்டோ:கனடாவில் 30 வயது … Read more

நிலநடுக்கம் எதிரொலி: துருக்கி, சிரியா மக்களுக்கு அவசரகால விசாக்கள்; ஜெர்மனி அறிவிப்பு

பெர்லின், துருக்கி மற்றும் சிரியா நாடுகளில். எல்லையில் கடந்த வார திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பலரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் எதிரொலியாக துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், … Read more

துருக்கி-சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 28 ஆயிரம் ஆக உயர்வு

அங்காரா, துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் கடந்த வாரம் ஓய்வு நாளான ஞாயிற்று கிழமை முடிந்து அடுத்த நாள் விடியல் தொடங்குவதற்கு முன்னரே, சோகம் ஏற்பட்டது. துருக்கியின் எல்லையில் கடந்த வார திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பலரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் … Read more