டிக்டாக் செயலிக்கு பிரிட்டன் தடை| UK bans TikTok app

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: சீன நிறுவனத்தின் டிக்டாக், செல்போன் செயலிக்கு பிரிட்டனில் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவைச் சேர்ந்த ஒருநிறுவனம் டிக்டாக் செயலியை உருவாக்கியுள்ளது. இச்செயலிக்கு ஏற்கனவே அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் , அரசின் இணையதள சாதனங்களில் உள்ள முக்கிய தரவுகள் டிக்டாக் செயலியால் அச்சுறுத்தல் உள்ளது. எனவே டிக்டாக்கிற்கு தடைவிதித்து உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வாஷிங்டன்: சீன நிறுவனத்தின் டிக்டாக், செல்போன் செயலிக்கு பிரிட்டனில் … Read more

எம்.பி. ஆன பிறகு, ஒரு முறை கூட நாடாளுமன்றம் வராத யூடியூபர்..!

ஜப்பானில், நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து ஒருமுறை கூட நாடாளுமன்ற நிகழ்வுகளில் பங்கேற்காத பிரபல யூடியூபரின் உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. பிரபலங்கள் குறித்து கிசுகிசுக்களை டுவீட் செய்வதன் மூலம் பிரபலமான யோஷிகாசு (Yoshikazu ), கடந்தாண்டு மேல்சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். துபாயில் வசித்துவந்த யோஷிகாசு ( Yoshikazu ), ஒரு முறை கூட நாடாளுமன்ற நிகழ்வில் பங்கேற்காமல் ஒரு கோடியே 16 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். இது குறித்து விசாரிக்க அழைத்தபோது, துருக்கியில் நிலநடுக்கம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு … Read more

"எதிர்காலத்தில் அமெரிக்காவின் அத்துமீறல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்" – ரஷியா

மாஸ்கோ, கிரீமியாவில் உள்ள கருங்கடல் பகுதியில் அமெரிக்காவின் டிரோன் ஒன்று பறந்தது. ரஷியா ஆக்கிரமித்து வைத்துள்ள இந்த பகுதியில் அமெரிக்காவின் டிரோன் பறந்ததால் கோபமடைந்த ரஷியா அதனை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சர்வதேச ஒப்பந்தத்தை ரஷியா மீறி உள்ளதாக அமெரிக்காவுக்கான ரஷிய தூதர் அனடோலி அன்டோனோவிடம் அமெரிக்கா தனது கண்டனத்தை தெரிவித்தது. அதே சமயம், சர்வதேச சட்டம் அனுமதிக்கும் இடங்களில் டிரோன் தொடர்ந்து பறக்கும் என்று ரஷியாவுக்கு அமெரிக்கா பதிலடி கொடுத்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் … Read more

நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.1 ஆக பதிவு

வெலிங்டன், நியூசிலாந்து உலகின் இரண்டு முக்கிய டெக்டோனிக் தட்டுகளான பசிபிக் தட்டு மற்றும் ஆஸ்திரேலிய தட்டு ஆகியவற்றின் எல்லையில் அமைந்திருப்பதால் நிலநடுக்கங்களுக்கு ஆளாகிறது. ஒவ்வொரு ஆண்டும் நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையில், நியூசிலாந்தின் வடக்கே உள்ள கெர்மடெக் தீவுகளில் இன்று 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, இந்த நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் இருந்ததாக கண்டறியப்பட்டு உள்ளது. 300 கிமீ சுற்றளவு கொண்ட மக்கள் … Read more

உக்ரைன் அகதிகள் தங்கியிருந்த ஹோட்டலில் திடீர் தீ விபத்து..!

இங்கிலாந்தில் உக்ரைன் அகதிகள் தங்கியிருந்ததாக கூறப்படும் ஹோட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தைத் தொடர்ந்து அங்கிருந்த 30 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தெற்கு பகுதியான சசெக்ஸ்சில் சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹோட்டல் மற்றும் அதன் பக்கத்து கட்டடத்தில் தீ பற்றியதாகவும், சுமார் 15 தீயணைப்பு வாகனங்கள் மூலமாக தீயை கட்டுப்படுத்தும் பணி நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Source link

தென்கொரியா-ஜப்பான் உச்சிமாநாடு நடைபெறும் நிலையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

பியாங்யாங், அமெரிக்கா மற்றும் தென்கொரியா இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி கடந்த 13-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதற்கு அதிரடி காட்டும் வகையில் தென்கொரியாவின் அண்டை நாடான வடகொரியா, குறுகிய தொலைவு சென்று தாக்கும் 2 ஏவுகணைகளை ஜப்பான் கடல் பகுதியில் செலுத்தி சோதனை செய்தது. இந்த நிலையில் தென்கொரியா-ஜப்பான் இடையிலான உச்சிமாநாடு இன்று நடைபெற உள்ளது. இதற்காக தென்கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக்-இயோல், ஜப்பானுக்கு பயணம் செய்து அந்நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடாவுடன் ஆலோசனை … Read more

ஹேக் செய்யப்பட்ட நேபாள பிரதமரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு – அதிர்ச்சி சம்பவம்

காத்மண்டு, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹல். நேபாள பிரதமருக்கு அதிகாரப்பூர்வ டுவிட்ட கணக்கு உள்ளது. பிஎம் நேபாளம் என்ற பெயரில் உள்ள அந்த டுவிட்டர் கணக்கு இன்று ஹேக் செய்யப்பட்டுள்ளது. நேபாள பிரதமரின் டுவிட்ட கணக்கு ஹேக் செய்யப்பட்டு டுவிட்டர் முகப்பு புகைப்படம் மற்றும் முகப்பு முன்னுரை அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது. முகப்பு பக்கத்தில் புரோபைல் புகைப்படமாக புஷ்ப கமல் தாஹல் புகைப்படம் இருந்த நிலையில் அது ஹேக்கர்களால் மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, ஹேக் பிரதமரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் … Read more

வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கித் தவித்த நபர்.. ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்ட மீட்புக் குழுவினர்..!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ள ஆற்றில் சிக்கித் தவித்த நபரை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். 20 ஆண்டுகால வறட்சியைத் தொடர்ந்து மேற்கு கரையோர பகுதிகளில் மழை பெய்து வருவதால் லாஸ் ஏஞ்செல்ஸ் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இந்நிலையில், அந்த ஆற்றின் கரையோரமுள்ள கான்கிரீட்டை பிடித்துக் கொண்டு ஒருவர் போராடிக் கொண்டிருந்ததை அறிந்த மீட்புக் குழுவினர், ஹெலிகாப்டர் உதவியுடன் கயிறு கட்டி இறங்கி, அந்த நபரை ஆற்றில் இருந்து மேலே தூக்கி காப்பாற்றினர். அந்த … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65.49 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 கோடியே 19 லட்சத்து 05 ஆயிரத்து 589 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 1 லட்சத்து 30 ஆயிரத்து 913 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து … Read more

தென் கொரியாவில் குறையும் திருமணங்கள்: பிறப்பு விகிதமும் சரிவதால் திகைக்கும் அரசு

சியோல்: தென் கொரியாவில் கடந்த ஆண்டில் திருமணங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால், அங்கு பிறப்பு விகிதமும் கணிசமாக குறைந்து வருகிறது. தென் கொரியாவின் தேசிய புள்ளியியல் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, ”2022-இல் சுமார் 1,91,700 திருமணங்கள் நடந்தன. இது முந்தைய ஆண்டை விட 0.4% குறைவு. திருமணங்கள் குறைந்து வருவதால் குழந்தைகள் பிறப்பு விகிதமும் படிப்படியாக குறைந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டில், தென் கொரியாவில் பிறந்தவர்கள் எண்ணிக்கையை … Read more