தென் கொரியாவில் குறையும் திருமணங்கள்: பிறப்பு விகிதமும் சரிவதால் திகைக்கும் அரசு

சியோல்: தென் கொரியாவில் கடந்த ஆண்டில் திருமணங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால், அங்கு பிறப்பு விகிதமும் கணிசமாக குறைந்து வருகிறது. தென் கொரியாவின் தேசிய புள்ளியியல் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, ”2022-இல் சுமார் 1,91,700 திருமணங்கள் நடந்தன. இது முந்தைய ஆண்டை விட 0.4% குறைவு. திருமணங்கள் குறைந்து வருவதால் குழந்தைகள் பிறப்பு விகிதமும் படிப்படியாக குறைந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டில், தென் கொரியாவில் பிறந்தவர்கள் எண்ணிக்கையை … Read more

துபாயில், 700 அடி உயர கட்டடத்தின் மாடியில் ஹெலிபேட் மீது விமானத்தை தரையிறக்கி சாகசம்..!

போலந்து நாட்டு ரேஸ் விமானியான லியூக் ஜெப்பிலா (Luke Czepiela), துபாயில் உள்ள 700 அடி உயர கட்டடத்தின் மாடியில் சிறிய ரக விமானத்தை தரையிறக்கி சாகசம் புரிந்தார். புர்ஜ் அல் அராப் என்ற அந்த 56 மாடி சொகுசு விடுதியின் மீது 90 அடி விட்டளவில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள் தரையிறங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட அந்த ஹெலிபேடில், லியூக் ஜெப்பிலா சிறிய ரக விமானத்தை நேர்த்தியாகத் தரையிறக்கினார். இந்த அபாயகரமான சாகசத்தை நிகழ்த்த, லியூக் ஜெப்பிலா, சுமார் … Read more

தன் வினை தன்னை சுடும்…. பாகிஸ்தானை விழுங்க ஆரம்பிக்கும் பயங்கரவாத அரக்கன்!

பாகிஸ்தான், இந்தியாவை தாக்குவதற்கும், இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தவும் பயங்கரவாதத்தை ஊக்குவித்து வளர்த்து வந்தது. இப்போது, பாம்பிற்கு பால் வார்த்த கதையாக, பாகிஸ்தான் பயங்கரவாதத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் வெளியிட்டுள்ள பயங்கரவாதக் குறியீடு அறிக்கையில் பாகிஸ்தானின் உண்மை நிலை தெரியவந்துள்ளது. தெற்காசியாவில் அதிகபட்ச பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் இறப்புகளின் அடிப்படையில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானை முந்தியுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, பயங்கரவாதம் என்ற அரக்கன் இப்போது அதிகபட்ச … Read more

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

வெலிங்டன்: நியூசிலாந்தின் அருகே உள்ள கெர்மடெக் தீவுகளில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். இது குறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், “நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளின் முழு விவரம் இதுவரை வெளியாகவில்லை. அதிக நிலநடுக்கங்கள் ஏற்படக் கூடிய பசிபிக் … Read more

அருணாச்சல் எல்லை விவகாரம் : அமெரிக்க செனட் சபை தீர்மானம்| Arunachal Boundary Issue: US Senate Resolution

வாஷிங்டன், அருணாச்சல பிரதேசம் – சீனா இடையே, மெக்மகோன் எல்லைக் கோட்டை சர்வதேச எல்லைப் பகுதியாக அமெரிக்கா அங்கீகரித்துள்ளது. வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த மாநிலத்தை ஆக்கிரமிக்க, சீனா பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. ஆனால், அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒரு அங்கம் என, மத்திய அரசு உறுதியாக கூறி வருகிறது. இந்நிலையில், அமெரிக்க செனட் சபையில், ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி என இருதரப்பு உறுப்பினர்களும் சேர்ந்த ஒரு தீர்மானத்தை … Read more

வடகொரியாவில் மரம் நடும் தினம் : மரக்கன்றுகளை நட்டு வைத்த மக்கள்

வடகொரியாவில் வருடாந்திர மரம் நடும் தினத்தை முன்னிட்டு, அந்நாட்டு மக்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். தலைநகர் பியாங்யாங்கில் உள்ள Mangyongdae தளத்தில் ஒன்று கூடி மரக்கன்றுகளை நட்டனர் இந்த ஆண்டு ஒன்பது வகையிலான, சுமார் 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடகொரியாவில் மரம் நடும் தினம் ஏப்ரல் 6ம் தேதி கொண்டாடப்பட்டு வந்த நிலையில், நடப்பாண்டு முதல் மார்ச் 14ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. Source link

எல் சால்வடாரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மெகா சிறைச்சாலைக்கு மேலும் 2,000 கைதிகள் மாற்றம்..!

எல் சால்வடார் நாட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மெகா சிறைச்சாலைக்கு மேலும் 2 ஆயிரம் கைதிகள் மாற்றப்பட்டுள்ளனர். அந்நாட்டில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக இதுவரை 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், 40 ஆயிரம் பேரை அடைக்கக்கூடிய வகையில் மிகப்பெரிய சிறைச்சாலை கட்டப்பட்டது. கடந்த மாதம் 25ம் தேதி அந்த சிறைச்சாலைக்கு 2 ஆயிரம் கைதிகள் மாற்றப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2 ஆயிரம் பேர் அழைத்துச் செல்லப்பட்டனர். கைதிகளுக்கு மொட்டையடிக்கப்பட்டு கைகள் பின்னால் … Read more

பூங்காவில் நாயை தனியாக உலவ விட்டு புதிய சர்ச்சையில் சிக்கிய பிரிட்டன் பிரதமர்| British Prime Minister caught in fresh controversy after leaving dog alone in park

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: பிரிட்டனில் தடை செய்யப்பட்ட பகுதியில் செல்லப் பிராணியை உலவ விட்டதை அடுத்து, புதிய சர்ச்சையில் அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் சிக்கியுள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், கடந்த ஆண்டு அக்டோபரில் பதவியேற்றார். இவர், சமீபத்தில் லண்டனில் உள்ள ஹைட் பூங்காவுக்கு குடும்பத்தினருடன் சென்றார். அப்போது, தன் செல்லப் பிராணியான நோவா என்ற லேப்ரடார் ரக நாயையும் சுனக் அழைத்துச் சென்றார். … Read more

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் கொட்டித் தீர்த்த கனமழை… வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி, 14 பேர் உயிரிழந்தனர். சான்லியுர்ஃபா மற்றும் அதியமான் மாகாணங்களில் பெய்து வரும் கனமழையால், சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது. அப்போது, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, ஒன்றோடொன்று மோதி உருக்குலைந்தன. நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்கள் கண்டெய்னர்களிலும், கூடாரங்களிலும் வசித்துவரும் நிலையில், திடீர் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். Source link