பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய தடை நீட்டிப்பு

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை போலீஸார் கைது செய்வதற்கு இன்று காலை 10 மணி வரை தடை விதித்து லாகூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் பிரச்சாரத்தின் போது நீதித் துறையைச் சேர்ந்தவர்களுக்கும், போலீஸாருக்கும் மிரட்டல் விடுத்ததாக தொடரப் பட்ட வழக்கில் நேரில் ஆஜராகுமாறு முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், போலீஸார் நேற்று லாகூரில் உள்ள இம்ரான் … Read more

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராகிறார் எரிக் கார்செட்டி

லாஸ் ஏஞ்சல்ஸ் நகர முன்னாள் மேயர் எரிக் கார்செட்டியை, இந்தியாவுக்கான தூதராக நியமிக்க அமெரிக்க செனட் சபை உறுதி செய்துள்ளது. அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, இந்தியாவுக்கான தூதராக இருந்த கென்னத் ஜஸ்டர் பதவி விலகினார். தொடர்ந்து, இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டியை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்தார். பல்வேறு காரணங்களால் இவரது பெயர் நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில், மீண்டும் எரிக் கார்செட்டியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் நடந்த … Read more

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராகிறார் எரிக் கார்செட்டி: செனட் சபை ஒப்புதல்| Senate approves appointment of Eric Garcetti as Ambassador to India

வாஷிங்டன் : இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக, எரிக் கார்செட்டியை நியமிக்க, 52, அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக எரிக் கார்செட்டியை, 2021ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்தார். பல்வேறு காரணங்களால் இவரது பெயர் நிராகரிக்கப்பட்டு வந்த சூழலில், மீண்டும் எரிக் கார்செட்டியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இந்த பரிந்துரைக்கு, அரசு அதிகாரங்களில் வெளியுறவு கொள்கை தொடர்பான முக்கிய முடிவு எடுக்கும் செனட் குழு ஒப்புதல் அவசியம் என்பதால், … Read more

‘ராணி எலிசபெத் எனது ***யை முத்தமிட்டவர்’ – டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை.!

பொது நபர்களால் தனக்கு அனுப்பப்பட்ட தனிப்பட்ட கடிதங்களின் தொகுப்பை புதிய புத்தகமாக விளம்பரப்படுத்தும் போது, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனக்கு எழுதிய கடிதம் அனைவரும் “என்னுடைய பின்புறத்தை முத்தமிட்டனர் (kissed my ass)” என்று கூறியுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘லெட்டர்ஸ் டு ட்ரம்ப்’ என்று அழைக்கப்படும் இந்த புத்தகத்தில், ராணி இரண்டாம் எலிசபெத், இளவரசி டயானா, ஓப்ரா வின்ஃப்ரே, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் வட கொரிய தலைவர் கிம் … Read more

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் சாட் ஜி.பி.டி.யின் புதிய பதிப்பு வெளியீடு..!

பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் சாட் ஜி.பி.டி. தேடுபொறியின் புதிய பதிப்பான ஜி.பி.டி – 4-ஐ (GPT-4) ஓபன் ஏ.ஐ. (OpenAI) செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. சேட் ஜிபிடியை போல் இல்லாமல், புதிய பதிப்பில் எழுத்துக்கள் மட்டுமின்றி படங்களையும் பதிவேற்றி தேடும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய பதிப்பு மிகவும் துல்லியமாகவும், சேட் ஜிபிடிஐ விட சிக்கலான உள்ளீடுகளை தீர்க்கும் திறன்களைக் கொண்டுள்ளதாகவும் ஓபன் ஏ.ஐ. குறிப்பிட்டுள்ளது. மேலும், பயனர்களால் பதிவேற்றப்படும் படங்களை அடையாளம் கண்டு அதனை … Read more

சார்ஸ் குறித்த தகவலை உலகுக்கு அம்பலப்படுத்திய சீன மருத்துவர் ஜியாங் யான்யோங் மறைவு

ஹாங்காங்: சார்ஸ் பாதிப்பு குறித்து உலகறிய செய்தச் சீன மருத்துவர் ஜியாங் யான்யோங் காலமானார். அவருக்கு வயது 91. அவரது மறைவை சீன தேச ஊடகங்கள் மற்றும் அவரது நண்பர்கள் உறுதி செய்துள்ளனர். 2003-ல் சார்ஸ் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது சீனாவில் சார்ஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என சொல்லி இருந்தார் அப்போதைய சீன சுகாதாரத் துறை அமைச்சர். அதை கேட்டு பதறிய மருத்துவர் ஜியாங் யான்யோங், தனக்கு தெரிந்தே சார்ஸ் பாதிப்புடன் நூற்றுக்கும் மேற்பட்ட … Read more

பனி படர்ந்திருந்த வணிக வளாகத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விபத்து..

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில், பனிப்படர்ந்து காணப்பட்ட வணிக வளாகத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. டுலுத் என்ற இடத்திலுள்ள மில்லர் ஹில் வணிக வளாகத்தின் மேற்கூரை முழுவதுமாக பனி படர்ந்திருந்த நிலையில், பனியை அகற்ற அங்கு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. பணியில் ஈடுபட்டிருந்த போது ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்த தொழிலாளர்கள், உடனடியாக பணியை நிறுத்திவிட்டு வெளியேறிய உடன், மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. வணிக வளாகத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டதால் யாருக்கும் காயம் … Read more

விளையாட்டு போட்டியை காண சீக்கியருக்கு அனுமதி மறுப்பு; அமெரிக்காவில் அநியாயம்.!

அமெரிக்காவில் கூடைப்பந்து போட்டி ஒன்றில் ‘கிர்பான்’ அணிந்ததால் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சீக்கியர் ஒருவர் கூறியுள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், ‘கிர்பான்’ என்பது ஒரு சிறிய வாள், பட்டா அல்லது பெல்ட்டின் உறையில் வைக்கப்படும் சிறிய கத்தி ஆகும். சீக்கியர்கள் எல்லா நேரங்களிலும் அணிய வேண்டிய சடங்காக இது ஆக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவின் சாக்ரமெண்டோவில், தொழில்முறை வட அமெரிக்க கூடைப்பந்து லீக் NBA அணியான சேக்ரமெண்டோ கிங்ஸ் பங்கேற்கும் கூடைப்பந்து போட்டியின் போது இந்த சம்பவம் நடந்தது. ட்விட்டரில், மந்தீப் … Read more

நாளை காலை 10 மணி வரை இம்ரான் கானை கைது செய்ய லாகூர் உயர்நீதிமன்றம் தடை

இம்ரான்கான் ஆதரவாளர்களுக்கும், பாகிஸ்தான் போலீசாருக்கும் 2 நாட்களாக கடும் மோதல் வெடித்த நிலையில், நாளை காலை 10 மணி வரை அவரை கைது செய்ய லாகூர் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இம்ரான் கான், பிரதமராக பதவி வகித்தபோது பெற்ற பரிசுப்பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல், கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்ற குற்றச்சாட்டில் அவரை கைது செய்ய இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இம்ரான் கான் இல்லத்தில் திரண்ட ஆதரவாளர்கள், கைது செய்யவந்த போலீசார் மீது கற்களை வீசி தாக்கியதுடன், போலீஸ் … Read more