வடகொரியாவின் எச்சரிக்கையை மீறி தென்கொரிய ராணுவத்தினருடன் அமெரிக்கா கூட்டு போர் பயிற்சி

வடகொரியாவின் எச்சரிக்கையை மீறி,  தென்கொரிய ராணுவத்துடன் இணைந்து அமெரிக்க ராணுவம் கூட்டு போர் ஒத்திகை நடத்தியுள்ளது. சியோல் அருகே உள்ள யோன்சியோன் பகுதியில் இருக்கும் ஆற்றை கடந்து படையணிகளை கொண்டு செல்வது, இதற்காக தற்காலிக பாலம் அமைப்பது உள்ளிட்டவை குறித்து இருநாட்டு வீரர்களும் பயிற்சி மேற்கொண்டனர். இந்த பயிற்சியில் அமெரிக்கா, தென்கொரியா நாடுகளைச் சேர்ந்த 400 வீரர்கள் கலந்து கொண்டதுடன், 2 அபாச்சி ஹெலிகாப்டர்கள், 50 ராணுவ வாகனங்கள் உள்ளிட்டவை ஈடுபடுத்தப்பட்டன.   Source link

வளர்ப்பு நாயால் வந்தது பிரச்சினை.. சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்..

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் வளர்ப்பு நாய் லண்டன் பார்க்கில் சங்கிலி இல்லாமல் சுதந்திரமாக சுற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அந்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுஇடங்களில் சங்கிலியுடன் வளர்ப்பு நாயை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற சட்டம் இங்கிலாந்தில் கடைப்பிடிக்கப்படும் நிலையில் அந்நாட்டு பிரதமராக உள்ள இந்திய வம்சாவழியான ரிஷி சுனக் குடும்பத்தினருடன் லண்டன், ஹைதி பூங்காவில் (Hyde Park) நடைப்பயிற்சி சென்ற கொண்டிருந்தபோது அவரது வளர்ப்பு நாயான நோவா சங்கிலி இல்லாமல் சுற்றிய வீடியோ … Read more

”சீனா விவகாரத்தில் இந்தியாவுக்கு தோளோடு தோள் கொடுத்து அமெரிக்கா உதவ வேண்டும்..” – செனட் சபையில் தீர்மானம்..!

சீனாவுடனான மோதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா தோளோடு தோள் கொடுத்து உதவி செய்ய வேண்டுமென வலியுறுத்தி, அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்திய பகுதியான அருணாசலப் பிரதேச மாநிலத்தை சீனா தங்களுக்கு சொந்தமான பகுதி என்று உரிமை கொண்டாடுகிறது. லடாக் எல்லையிலும் படைகளை இருநாடுகளும் குவித்துள்ளன. இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற மேலவையான செனட் சபையில் எம்பிக்கள் பில் ஹேகர்டி (Bill Hagerty), ஜெப் மெர்க்லே (Jeff Merkley) ஆகியோர் ஒரு தீர்மானம் கொண்டு … Read more

அதிகம் மாசடைந்த நாடுகளின் பட்டியல் – இந்தியாவுக்கு 8 ஆம் இடம்

பெர்ன்: அதிகம் மாசடைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 8 ஆம் இடம் கிடைத்துள்ளது. ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த IQAIR என்ற நிறுவனம் உலக நாடுகளின் காற்று தரம் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. சுமார் 131 நாடுகளில் உள்ள 7,300 நகரங்களில் நடத்திய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வு அறிக்கையில் கூறிப்பிடப்பட்டுள்ளதாவது, “2022 -ல் உலகில் மாசடைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 8 ஆம் இடம் பிடித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தியா ஐந்தாமிடத்தில் … Read more

கொலை செய்ய போலீசார் சதி: இம்ரான் பகீர் புகார்| “Real Intent To Abduct, Kill”: Imran Khan’s Post As Supporters Block Cops

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: என்னை கடத்தி சென்று படுகொலை செய்ய பாக்., போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக கைது என நாடகமாடுகின்றனர் என அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக இருந்த போது, வெளிநாட்டு தலைவர்கள், முக்கிய பிரமுகர்களிடம் இருந்து பெறப்பட்ட பரிசுகளை, அரசு கருவூலத்தில் சேர்க்காமல் சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில், நீதிமன்ற உத்தரவுப்படி, இம்ரான் கானை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி … Read more

72 போயிங் ட்ரீம்லைனர் விமானங்களை வாங்க ரியாத் ஏர் திட்டம்..!

பல பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் 72 போயிங் ட்ரீம்லைனர் விமானங்களை வாங்க ரியாத் ஏர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தை உலகளாவிய விமானப் போக்குவரத்து மையமாக மாற்றும் இலக்குடன் அது செயல்பட்டு வருகிறது. இந்த ஒப்பந்தம் போயிங் வரலாற்றில் ஐந்தாவது பெரிய வணிகத்தின் ஒரு பகுதியாக இருக்கும். போயிங் விமானங்களை சவூதி அரேபியா வாங்குவதன் மூலம் அமெரிக்காவில் இது சுமார் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இந்த ஒப்பந்தம், 2030ஆம் ஆண்டுக்குள் 330 … Read more

இம்ரான் கானை கைது செய்ய முயற்சி செய்ததையடுத்து பெரும் வன்முறையில் இறங்கினர் அவருடைய ஆதரவாளர்கள்..!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை போலீசார் ஊழல் வழக்கில் கைது செய்ய முயற்சி செய்ததையடுத்து அவருடைய ஆதரவாளர்கள் பெரும் வன்முறையில் இறங்கினர். போலீஸ் வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. கடைகள் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இஸ்லாமாபாத், கராச்சி, பெஷாவர் உள்பட பல முக்கிய நகரங்களில் போராட்டங்கள் வெடித்ததால் கலவரச் சூழல் காணப்பட்டது. போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைத்தனர். இம்ரான்கான் வீட்டின முன்பு நூற்றுக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இம்ரான் கான் அதிகாரிகளுக்கு … Read more

ஐரோப்பாவுக்கு வெளியே முதல் பேட்டரி ஆலையை அமைக்க ஃபோக்ஸ்வாகன் திட்டம்

ஐரோப்பாவிற்கு வெளியே முதல் பேட்டரி ஆலையை அமைப்பதற்காக கனிமங்கள் நிறைந்த கனடாவை ஃபோக்ஸ்வாகன் வாகன உற்பத்தி நிறுவனம் தேர்வு செய்துள்ளது. இது கனடாவின் மின்சார வாகனத் துறையில் மிகப்பெரிய ஒற்றை முதலீடாக மாற உள்ளது.உலகெங்கிலும் உள்ள நாடுகள் வாகனங்களின் கார்பன் உமிழ்வைக் குறைப்பதை இலக்காகக் கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்று வலியுறுத்தி வருகின்றன. இதன் காரணமாகவே கனடா அரசு பல பில்லியன் டாலர்களை பசுமை தொழில்நுட்பத் திட்டங்களில் முதலீடு செய்கிறது. லித்தியம், நிக்கல் மற்றும் கோபால்ட் … Read more

காற்று மாசுப் பட்டியலில் முன்னேறும் இந்தியா! உங்கள் நகரத்திற்கு என்ன இடம்?

நியூடெல்லி: உலகின் முதல் 100 மாசுபட்ட நகரங்களில் பாதிக்கும் மேற்பட்டவை இந்தியாவில் உள்ளன என்ற தகவல் கவலைகளை அதிகரிக்கிறது. சர்வதேச அளவில் 7300 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட காற்று மாசு ஆய்வில் பட்டியலின் முதல் 100 பட்டியலில் 65 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான சுவிஸ் நிறுவனமான IQAir இன் சமீபத்திய மாசுபாடு தரவரிசை வெளியாகியுள்ளது. உலகளவில் காற்று மாசு அதிகம் உள்ள (Air Pollution) முதல் 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது என்பதைக் காட்டும் இந்த ஆய்வில்,131 … Read more