துருக்கியை உலுக்கும் நிலநடுக்கம்: 3-வது முறையாக ஏற்பட்டதால் அச்சத்தில் நடுங்கும் பொதுமக்கள்…

அன்காரா, துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 3-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவரை 2,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சிரியாவில் மட்டும் 783 பேர் உயிரிழந்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது. 7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு … Read more

துருக்கி நிலநடுக்கம்: 3 நாள்களுக்கு முன்பே கணித்த டச்சு ஆராய்ச்சியாளர்… வைரலாகும் ட்வீட்

துருக்கி மற்றும் சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்படுமென டச்சு ஆராய்ச்சியாளர் ஒருவர் மூன்று நாட்களுக்கு முன்னரே ட்வீட் செய்தது இணையத்தில் வைரலாகி வருகிறது இரு நாடுகளிலும் நிலநடுக்கத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இ ந்நிலையில், டச்சு ஆராய்ச்சியாளரான ஃப்ராங்க் கூகர்பீட்ஸ் பிப்ரவரி 3ம் தேதி அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய மற்றும் தென் துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் ஆகிய பகுதிகளைக் குறிப்பிட்டு 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கணித்து … Read more

6,650 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக டெல் நிறுவனம் அறிவிப்பு!

வாஷிங்டன், உலக அளவில் அதிகரித்து வரும் பொருளாதார மந்த நிலையின் காரணமாக ட்விட்டர் மற்றும் மெட்டா ஆகிய முக்கியமான டெக் நிறுவனங்கள் உலகம் முழுவதும் இருக்கும் தனது பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வருகிறது. பொருளாதார நெருக்கடி, குறைந்த விற்பனை மற்றும் இலக்கை அடைவதில் தொய்வு ஆகிய காரணங்களினால் இதனை செய்துள்ளதாக தெரிகிறது. இந்த திடீர் அறிக்கையால் அந்நிறுவனத்தின் பணியாளர்கள் பயத்தில் உறைந்து போயுள்ளனர். இந்தநிலையில், உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்று வந்த பல்வேறு தொழிநுட்ப … Read more

துருக்கி சிரியா நிலநடுக்க பலி எண்ணிக்கை 4300ஐ கடந்தது! உதவிக்கு விரைந்த இந்தியா

Turkey Earthquake: துருக்கியில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களினால், சிரியா மற்றும் துருக்கியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4300க்கும் அதிகமானது. உண்மையான எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியது. அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இரண்டாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் பின்னதிர்வு வகையில் சேராது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி 4:17 மணிக்கு காஸியான்டெப் நகருக்கு அருகில் 17.9 கிமீ ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கம். ரிக்டர் அளவுகோளில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு … Read more

முஷாரப் உடல் அடக்கத்துக்கு கராச்சியில் ஏற்பாடுகள் தயார்| Arrangements are ready for Musharrafs body burial in Karachi

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கராச்சி : துபாயில் காலமான பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் உடல், கராச்சியில் உள்ள ராணுவ கன்டோன்மென்ட் கல்லறையில் அடக் கம் செய்யப்பட உள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்,79, ‘அமிலாய்டோசிஸ்’ என்ற அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டதை அடுத்து, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் சிகிச்சை பெற்று வந்தார். தேசத்துரோக வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டு பாகிஸ்தானில் வீட்டுசிறையில் … Read more

3 சகோதரிகளை மணந்த கென்யா இளைஞர்: அட்டவணை போட்டு வாழ்ந்து வருகிறார்| Kenyan youth who married 3 sisters

நைரோபி: கென்யாவில் மூன்று சகோதரிகளை, ஒரே நேரத்தில் இளைஞர் ஒருவர் காதலித்து திருமணம் செய்ததுடன், அவர்களுடன் அட்டவணை போட்டு வாழ்ந்து வருகிறார். கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில், கேட், ஈவ், மேரி ஆகிய மூன்று சகோதரிகள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மூவரும் ஒரே பிரசவத்தில் அடுத்தடுத்து பிறந்தவர்கள். பார்ப்பதற்கு ஒரே மாதிரி தோற்றத்துடன் காணப்படும் இவர்களை, ஸ்டீவோ என்ற இளைஞர் காதலித்து திருமணம் செய்துள்ளார். முதலில் கேட் என்பவரை ஸ்டீவோ சந்தித்து பேசிய நிலையில், இருவரும் பரஸ்பரம் … Read more

துருக்கி, சிரியா பூகம்ப பலி | 24 மணி நேரத்தில் 3,000 ஆக அதிகரிப்பு – ஏழு நாட்கள் துக்கம் அனுசரிப்பு

இஸ்தான்புல்: துருக்கி மற்றும் சிரியாவில் பிப்ரவரி 6 (திங்கள்கிழமை) அதிகாலை 4 மணி துருக்கியிலும் சிரியாவிலும், இன்னும் சில அண்டை நாடுகளிலும். துருக்கியின் தொழில்நகரான காசியான்டேப் நகரில் ஏற்பட்ட பூகம்பம் துருக்கியையும், சிரியாவையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கியில் இடிந்து விழுந்த 5,606 கட்டிடங்களில் குடியிருப்பாளர்கள் நிறைந்த பல மாடி அடுக்குமாடி கட்டிடங்களும் அடங்கும். காசியான்டேப் சிரியா நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. அதனால் துருக்கி, சிரியா என … Read more

துருக்கி, சிரியாவில் பயங்கர பூகம்பம்: இரு நாடுகளிலும் இடிபாடுகளில் சிக்கி 3,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்

அங்காரா: துருக்கி, சிரியாவில் நேற்று பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. துருக்கியில் 2,316 பேர், சிரியாவில் 1,300 பேர் என மொத்தம் 3,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். பாதிப்பு கடுமையாக இருப்பதால், இரு நாடுகளிலும் உயிரிழப்பு 10,000-ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது. மேற்கு ஆசியா, தென்கிழக்கு ஐரோப்பிய பகுதியில் துருக்கி அமைந்துள்ளது. அந்த நாட்டின் தென்கிழக்கு பகுதியில் காஜியன்டப் நகரை மையமாகக் கொண்டு நேற்று அதிகாலை 4.17 மணிக்கு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் … Read more

துருக்கி, சிரியா நிலநடுக்கம் –  3 நாட்களுக்கு முன்பே கணித்து எச்சரித்த டச்சு ஆராய்ச்சியாளர்

இஸ்தான்புல்: துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று (திங்கள்கிழமை) அதிகாலை ஏற்பட்ட பூகம்பம் அந்நாடுகளை நிலைகுலைய செய்துள்ளது. இதுவரை 3,400-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பனி உள்ளிட்ட தடங்கல்கள் வந்தாலும், இரவு முழுவதும் மீட்புப்பணி தொடர்ந்து வருகின்றன. துருக்கியில் இடிந்து விழுந்த 5,606 கட்டிடங்களில் குடியிருப்பாளர்கள் நிறைந்த பல மாடி அடுக்குமாடி கட்டிடங்களும் அடங்கும். காசியான்டேப் சிரியா நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. அதனால் துருக்கி, சிரியா என இரண்டு நாடுகளுமே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. … Read more

3வது முறையாக கிராமி வென்றார் இந்தியாவை சேர்ந்த ரிக்கி கேஜ்| Ricky Cage from India won the Grammy for the 3rd time

லாஸ் ஏஞ்சல்ஸ்,-நம் நாட்டைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், 41, மூன்றாவது முறையாக, ‘கிராமி’ விருது வென்றார். சர்வதேச அளவில் சிறப்பாக செயல்படும் இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், ஆண்டு தோறும் கிராமி விருது வழங்கப்படுகிறது. இசைத் துறையில் ஆஸ்கர் விருதுக்கு இணையாக இது கருதப்படுகிறது. இந்நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த ரிக்கி கேஜ், பெங்களூரில் பல் மருத்துவம் படித்தார். அந்த பணியில் ஈடுபடாமல், இசைத் துறையில் கால் பதித்தார். ஏராளமான விளம்பரப் படங்களுக்கும் இசையமைத்துள்ள ரிக்கி கேஜ், தனியாக … Read more