பாகிஸ்தான் பயங்கர குண்டு வெடிப்பு: பலர் காயம்| Pakistan terror blast: many injured

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் இன்று(பிப்.,05) பயங்கர குண்டு வெடிப்பு நடந்தது. இதில் பலர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் இன்று(பிப்.,05) பயங்கர குண்டு வெடிப்பு நடந்தது. இதில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குவெட்டாவின் போலீஸ் தலைமையகம் அருகே நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டோர் குறித்து எந்த தகவலும் இல்லை. கடந்த சில தினங்களுக்கு முன், பாகிஸ்தான் பெஷாவரில் நடந்த குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். போலீஸ் குடியிருப்புகள் … Read more

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மரணம்

துபாய்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். அவருக்கு வயது 79. பர்வேஸ் முஷாரப் நீண்ட நாட்களாக அமிலாய்டோசிஸ் நோயினால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி முஷாரப் இறந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. முஷாரப் இறப்பு குறித்து தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சித் தலைவர் ஃபகத் உசைன் கூறும்போது, “பர்வேஸ் முஷாரப் காலமானார், அவர் ஒரு சிறந்த மனிதர், அவரது சிந்தனையில் பாகிஸ்தானே முதலில் இருந்தது. கடவுள் அவர் மீது … Read more

Pervez Musharraf: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் காலமானார்

பர்வேஸ் முஷாரப் காலமானார்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் (வயது 79) துபாயில் இன்று காலமானார். நீண்ட காலமாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.  1943-ல் சுதந்திரத்துக்கு முன்பு டெல்லியில் பிறந்தார் பர்வேஸ் முஷாரப். தேச பிரிவினையின் போது முஷாரப் குடும்பம் பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு இடம்பெயர்ந்தது. 1964-ல் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்த முஷாரப் படிப்படியாக உயர்ந்து தலைமை தளபதியானார். பர்வேஸ் முஷாரப் பாகிஸ்தானின் முன்னாள் இராணுவத் தளபதியும் அதிபரும் … Read more

ஆட்சி கலைப்பு, சர்வாதிகாரி, தோனியின் ஹேர் ஸ்டைல்… பர்வேஸ் முஷரஃப் உயிர் பிரிந்தது!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதியாக இருந்தவர் பர்வேஸ் முஷரஃப். இவர் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் ஆட்சியை கவிழ்த்து ராணுவ ஆட்சியை கொண்டு வந்தவர். பாகிஸ்தான் அதிபராக 2008ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். இதையடுத்து பதவி விலகி விட்டு துபாய் சென்று அங்கேயே செட்டில் ஆனார். இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. இவருக்கு வயது 78. பர்வேஸ் முஷரஃப் மறைவில் பல்வேறு … Read more

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷ்ரப் காலமானார்

பாக். முன்னாள் அதிபர் முஷ்ரப் காலமானார் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷ்ரப் காலமானார் துபாயில், நீண்டநாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் முஷ்ரப் காலமானார் Source link

சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா| US shot down Chinese spy balloon

வாஷிங்டன்: அமெரிக்காவில் சந்தேகத்திற்கிடமாக பறந்த சீன உளவு பலூனை அமெரிக்கா விமானப் படை இன்று(பிப்.,05) சுட்டு வீழ்த்தியது. அமெரிக்காவின் மொண்டானா பகுதியில், அந்நாட்டு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் அணுமின் நிலையம் இயங்கி வருகிறது. பயங்கர கட்டுப்பாடு நிறைந்த இந்த பகுதியின் வான்வெளியில் கடந்த சில தினங்களுக்கு முன், ராட்சத மர்ம பலுான் பறந்தது. இதையடுத்து சீனா பலூன், உளவு பார்க்க அனுப்பட்டுள்ளது என அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டது. மேலும் பலூன் சுட்டு வீழ்த்தினால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற … Read more

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிப்பை அடுத்த மாதம் விண்ணில் செலுத்தும்: எலான் மஸ்க் தகவல்

வாஷிங்டன், எலோன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமானது ஸ்டார்ஷிப் என்ற ராக்கெட் அமைப்பை உருவாக்கி சோதித்து வருகிறது. இந்த ஸ்டார்ஷிப், மனிதர்களை பிற கிரகத்திற்கு அழைத்துச்செல்லும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வகையை சேர்ந்த ராக்கெட்டை தான் நாசா, அடுத்த ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அழைத்துச்செல்வதற்காக தேர்ந்தெடுத்து உள்ளது. கடந்த மாதம் எலான் மஸ்க், ஸ்டார்ஷிப்பை அடுத்த மாதம் விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இந்த நிலையில், அடுத்த மாதம் ஸ்டார்ஷிப் ராக்கெட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தலாம் … Read more

கண்ணில் விரலை விட்ட சீனா; சுட்டு தள்ளி உளவு பலூனை பஸ்பமாக்கிய அமெரிக்கா!

உலகின் சர்வாதிகார மிக்க நாடாக அமெரிக்கா திகழ்ந்து வருகிறது. தன்னை விட யாரும் வளர்ந்து விடக் கூடாது என்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது. அப்படி யாராவது தனக்கு இணையாக வளர்ந்து விட்டால் சீக்ரெட் ஆபரேஷனை களமிறக்கி மூலையில் உட்கார வைத்துவிடும். சமீபத்தில் மிகப்பெரிய பணக்காரரான அதானியை கதறவிட்டு ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதும் இதன் பின்னணி தான் எனக் கூறப்படுகிறது. வெள்ளை நிற பலூன் மர்மம் இந்நிலையில் சீனாவின் பலூன்கள் அமெரிக்க எல்லைக்குள் பறந்து பெரும் … Read more

ஒலிம்பிக்ஸ் போட்டியில் ரஷ்யாவைத் தடை செய்ய இங்கிலாந்து நடவடிக்கை..!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யாவைப் புறக்கணிப்பது குறித்து விவாதிக்க இங்கிலாந்து தலைமையில் வரும் 10ம் தேதி சர்வதேச நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது. இது தொடர்பாக 30 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. உக்ரைன் மீது போர்த் தொடுத்ததால் ரஷ்யா ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்பதைத் தடை விதிக்க வேண்டும் என்று ஒலிம்பிக்ஸ் விளையாட்டு கமிட்டிக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. ஆனால் ஒலிம்பிக்ஸ் கமிட்டி இதனை ஏற்காததால் உக்ரைன் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துவருகிறது. இதனிடையே ரஷ்யாவைத் … Read more