அதிபர் சர்தாரியின் பதவியை பறித்துவிட்டு பாகிஸ்தானில் ராணுவ ஆட்சிக்கு அடித்தளமா?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை தலைவருமான ஆசிப் அலி சர்தாரி, அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இதனை பாகிஸ்தான் மக்கள் கட்சியும், ஆளும் பிஎம்எல்(என்) தலைவர்களும் மறுத்துள்ளனர். அதேவேளையில், ராணுவத் தளபதி அசிம் முனீர் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை கொண்டுவர நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தகவல்கள் கசிகின்றன. பாகிஸ்தானில் கடந்த 2024-ல் நடந்த பொதுத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது பாகிஸ்தான் முஸ்லிம் … Read more

ரஷியாவுக்கு எதிரான போர்; உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை வழங்க அமெரிக்கா முடிவு

வாஷிங்டன், உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. தொடக்கத்தில் முக்கிய நகரங்களை ரஷியா கைப்பற்றியது. ஆனால், அவற்றை உக்ரைன் மீட்டது. இந்நிலையில், ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 3 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுத மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு, வடகொரியா ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி ஆதரவாக இருந்து வருகிறது. போரால் ஆயிரக்கணக்கில் … Read more

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் தகுதியானவர்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

வாஷிங்டன்: அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தகுதியானவர் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள பெஞ்சமின் நெதன்யாகு, நேற்றிரவு (திங்கள்கிழமை) டொனால்டு ட்ரம்ப்பின் இரவு விருந்தில் பங்கேற்றார். முன்னதாக, ட்ரம்ப்பிடம் நெதன்யாகு ஒரு கடிதம் வழங்கினார். அப்போது பேசிய அவர், “அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒன்றன் பின் ஒன்றாக நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் அமைதியை ஏற்படுத்துகிறார். எனவே, நோபல் பரிசு கமிட்டிக்கு அனுப்பிய பரிந்துரை கடிதத்தை நான் தற்போது … Read more

பிரேசிலில் கலாசார நிகழ்ச்சிகளுடன் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு

பிரேசிலியா, பிரதமர் மோடி கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதன் ஒரு பகுதியாக கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ ஆகிய 2 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட அவர் அந்த இரு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு 2 நாடுகளிலும் அந்நாடுகளின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதன்பின் அர்ஜென்டினாவுக்கு புறப்பட்டு சென்றார். 57 ஆண்டுகளில் இந்திய பிரதமரின் முதல் இருதரப்பு … Read more

அம்பலப்படுத்திய இந்தியா… ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானுக்கு உதவிய சீனா…

Key Revelations Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூரில் சீனாவின் பங்கு பற்றிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தபிறகு, சீனா மற்றும் பாகிஸ்தான் விளக்கம் அளித்து வருகின்றனர். பாகிஸ்தானுக்கு வேண்டிய உதவிகளை சீனா மற்றும் துருக்கி செய்ததை இந்தியா அம்பலப்படுத்தி உள்ளது. 

உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை அனுப்புவோம்: டொனால்ட் ட்ரம்ப்

வாஷிங்டன்: உக்ரைனுக்கு அமெரிக்கா கூடுதல் ஆயுதங்களை குறிப்பாக தற்காப்பு ஆயுதங்களை அனுப்பும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் நேற்று (திங்கள் கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்கப்படுமா என்ற செய்தியாளரின் கேள்விக்குப் பதில் அளித்த ட்ரம்ப், “நாங்கள் கூடுதல் ஆயுதங்களை அனுப்ப வேண்டி இருக்கும். குறிப்பாக தற்காப்பு ஆயுதங்கள். அவர்கள் (உக்ரைன்) மிகவும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். (ரஷ்ய அதிபர்) புதினின் செயல் மகிழ்ச்சி அளிக்கவில்லை.” … Read more

14 நாடுகளுக்கு கூடுதல் வரி; இந்தியாவுடன் ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு: ட்ரம்ப் தகவல்

வாஷிங்டன்: ஜப்பான், தென் கொரியா உட்பட 14 நாடுகளுக்கு கூடுதல் இறக்குமதி வரி விகிதத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது. அதேநேரத்தில், இந்தியாவுடன் ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு நெருக்கமாக உள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகின் பல நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரிகளை விதிப்பதாகக் கூறி வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பதிலுக்கு அந்த நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதிக்கும் என அறிவித்தார். 30%, 40% என கூடுதல் வரி விகிதத்தை அவர் … Read more

ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு வரிகளை உயர்த்தியது அமெரிக்கா – ட்ரம்ப் வெளியிட்ட பட்டியல்

வாஷிங்டன்: ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு 25 சதவீத விதிக்கப்படுவதாக அறிவித்த சில மணி நேரங்களில், மேலும் 12 நாடுகளுக்கு வரிகளை உயர்த்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பட்டியலிட்டுள்ளார். மியான்மர், தென்னாப்பிரிக்கா, மலேசியா, வங்கதேசம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு வரிகளை அவர் உயர்த்தியுள்ளார். அந்த நாடுகளுக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பட்டியல்: தென் கொரியா – 25% வரி ஜப்பான் – 25% வரி … Read more

அமெரிக்க அதிபர் ட்ரம்பை மீண்டும் சீண்டிய எலான் மஸ்க்

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, தொழில​திபர் எலான் மஸ்க் மீண்​டும் சீண்​டி​யுள்​ளார். கைது விவ​காரம் என்ற பெயரில் ஒரு பதிவை சமூக வலை​தளத்​தில் பதி​விட்டு பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளார் மஸ்க். அமெரிக்க அதிபர் ட்ரம்​பின் தீவிர ஆதர​வாள​ராக இருந்​தவர் தொழில​திபர் எலான் மஸ்க். கடந்த ஜனவரி​யில் ட்ரம்ப் அமெரிக்க அதிப​ராக பொறுப்​பேற்​றதும் எலான் மஸ்க்கை அரசின் செயல்​திறன் துறை​யின் தலை​வ​ராக நியமித்​தார். அரசின் தேவையற்ற செல​வு​களை குறைப்​பதே இத்​துறை​யின் நோக்​கம் என்​றும் அப்​போது ட்ரம்ப் அறி​வித்​தார். இந்​நிலை​யில், … Read more

பதவி நீக்கம் செய்யப்பட்டதால் விரக்தி – ரஷ்ய போக்குவரத்துத் துறை அமைச்சர் தற்கொலை

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தன்னை பதவி நீக்கம் செய்த சில மணி நேரங்களில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் அந்நாட்டின் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் ரோமன் ஸ்டாரோவோயிட். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் புறநகர்ப் பகுதியில் காரில் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டதாக ரஷ்ய செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள குர்ஸ்க் பிராந்தியத்தின் ஆளுநராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய ரோமன் கடந்த ஆண்டு மே மாதம் ரஷ்யாவின் போக்குவரத்துத் துறை … Read more