'மிஸ் யூனிவர்ஸ்' பட்டத்தை வென்றார் அமெரிக்காவின் ரபோனி கேப்ரியல்: பட்டம் சூட்டினார் ஹர்னாஸ்

லூசியானா: மிஸ் யூனிவர்ஸ் எனப்படும் பிரபஞ்ச அழகி பட்டத்தை அமெரிக்க அழகி ரபோனி கேப்ரியல் வென்றார். அவருக்கு கடந்த 2021-ல் மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற இந்திய அழகி ஹர்னாஸ் சாந்து பட்டம் சூட்டினார். கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்க அழகி வெல்லும் முதல் பட்டம் இது. அந்த நாட்டின் சார்பில் வெல்லப்பட்டுள்ள ஒன்பதாவது பட்டம். மொத்தம் 84 நாடுகளை சேர்ந்த அழகிகள் இந்த முறை பட்டம் வெல்லும் நோக்கில் பங்கேற்றனர். இதில் இந்தியா சார்பில் மங்களூருவை … Read more

நேபாள புதிய பிரதமர் விரைவில் இந்தியா வருகை| New Prime Minister of Nepal to visit India soon

காத்மாண்டு: நம் அண்டை நாடான நேபாளத்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற புஷ்ப கமல் பிரசண்டா, 68, தன் முதல் வெளிநாட்டு அரசு முறை பயணமாக, நம் நாட்டிற்கு விரைவில் வர உள்ளதாக தெரிவித்துள்ளார். நேபாள கம்யூனிஸ்ட் கட்சியும், நேபாள காங்கிரஸ் கூட்டணியும் இணைந்து நேபாளத்தில் ஆட்சி அமைத்துள்ளன. இக்கூட்டணி சார்பில் நேபாள நாட்டின் பிரதமராக புஷ்ப கமல் பிரசண்டா, கடந்த டிச., 26ல் மூன்றாவது முறையாக பதவியேற்றார். இந்நிலையில் பிரதமர் புஷ்ப கமல் பிரசண்டா தலைமையிலான அரசின் … Read more

‘இந்திய எல்லையில் படை குவிப்பில் ஈடுபடவில்லை’ – அமெரிக்க குற்றச்சாட்டுகளுக்கு சீனா மறுப்பு..!

இந்திய எல்லையில் படை குவிப்பில் ஈடுபட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள சீனா, இந்தியாவுடனான எல்லை நிலவரம் சீராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. கால்வன் பள்ளத்தாக்கு மோதல் சம்பவத்தை அடுத்து, இருநாடுகளும் எல்லையில் படைகளை குவித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் எல்லையில் படை குவிப்பிலும், ஆயுத குவிப்பிலும் சீனா ஈடுபட்டிருப்பதாக அமெரிக்கா அண்மையில் தெரிவித்திருந்தது. இதுகுறித்து டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான சீன தூதரக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், எல்லையில் நிலவரம் சீராக இருப்பதாகவும், எல்லை விவகாரங்கள் குறித்து … Read more

ரஷிய ஏவுகணை தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தகவல்

கீவ், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைந்து பாதுகாப்பு தேட முயன்ற உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷியா போர் தொடுத்தது. உக்ரைனின் ராணுவ நிலைகள் மட்டுமே இலக்கு என கூறி போரை தொடங்கிய ரஷியா பின்னர் குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரிகள், மின்நிலையங்கள் என தாக்குதல்களை விரிவுப்படுத்தியது. அந்த வகையில் தற்போது ரஷிய படைகள் உக்ரைனின் பொதுஉள்கட்டமைப்புகளை மட்டுமே குறிவைத்து சரமாரியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கீவ் நகர் மீது மீண்டும் கவனம் போர் … Read more

நேபாளத்தில் விமானம் விழுந்தது: கோர விபத்தில் பலி 68| Plane crashes in Nepal: 68 dead in deadly crash

காத்மாண்டு: நேபாளத்தில் சமீபத்தில் திறக்கப்பட்ட போக்கரா விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விபத்தில் சிக்கிய விமானம் எரிந்து தீக்கிரையானதில் 68 பேர் உயிரிழந்தனர். இந்த விமானத்தில் பயணித்த ஐந்து இந்தியர்களும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நேபாளத்தில் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுற்றுலா தலமான போக்கராவுக்கு நேற்று ‘யெட்டி ஏர்லைன்ஸ்’ விமானம் புறப்பட்டது. இதில் 68 பயணியர் நான்கு விமான ஊழியர்கள் இருந்தனர். இதில் ஐந்து இந்தியர் உட்பட 10 வெளிநாட்டு பயணியரும் இருந்தனர். காலை 10:33 மணிக்கு … Read more

தமிழர்களுக்கு 'தை பொங்கல்' வாழ்த்து தெரிவித்த கனடா பிரதமர்…!!

ஒட்டாவா, தை மாதம் முதல் நாளான நேற்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, வண்ண கோலமிட்டு,பொங்கல் பானைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, மஞ்சள் கொம்பு செடியை கட்டி, மங்களகரமாக புத்தரிசியில் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடினர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக உற்சாகம் இழந்த இந்த பொங்கல் விழா தற்போது எந்த கட்டுப்பாடும் இல்லாத நிலையில் களை கட்டியது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை … Read more

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கை அதிபர் ரணில் யோசனை| Sri Lankan President Ranils idea to overcome the economic crisis

கொழும்பு: ”பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நிதியத்தின்ஆதரவை பெறுவதேநல்லது” என இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த சில மாதங்களாக நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக இலங்கையில் உள்ள தொழிற்சங்க நிர்வாகிகளுடன் … Read more

பொது இடங்களில் புகைபிடிப்பதற்கான தடையை வலுப்படுத்தும் மெக்சிகோ

மெக்சிகோ, உணவகங்கள் மற்றும் பணியிடங்களில் புகை இல்லாத பகுதிகளை நிறுவிய மெக்சிகோவில் 2008 விதி இப்போது அனைத்து பொதுப் பகுதிகளிலும் முழுமையான தடையை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பூங்காக்கள், கடற்கரைகள், பணியிடங்கள் மற்றும் உணவகங்கள் அனைத்தும் இந்த வகையின் கீழ் வருகின்றன. கூடுதலாக, புகையிலை பொருட்களின் விளம்பரம், சந்தைப்படுத்தல் மற்றும் ஸ்பான்சர்ஷிப் ஆகியவற்றிற்கு முழுமையான தடை விதிக்கப்படுகிறது. இந்த புதிய மற்றும் கடுமையான விதிமுறைகள் வேப்ஸ் மற்றும் இ-சிகரெட்டுகளுக்கும் நடைமுறையில் உள்ளன என்று பிபிசி தெரிவித்துள்ளது. தடையை அமல்படுத்தும் … Read more

உக்ரைனில் ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 21 பேர் உயிரிழப்பு

கீவ், உக்ரைனில் ரஷிய படைகள் தொடர்ந்து உக்கிரமான தாக்குதலை நடத்திவருகின்றன. நேற்று இரவு டினிப்ரோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை குறிவைத்து ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. பல வாகனங்கள் தீப்பற்ற எரிந்தன. குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அங்கு மீட்பு பணி நடைபெறுகிறது. இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் 15 வயது சிறுமி உள்பட 21 பேர் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். … Read more

இலங்கையில் பொங்கல் திருநாளை கொண்டாடிய ஈழத்தமிழர்கள்..!

இலங்கையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஈழத்தமிழர்கள் வசிக்கும் பகுதிகளிலுள்ள ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் வழக்கத்தைவிட பொங்கல் கொண்டாட்டங்கள் சற்று களையிழந்து காணப்பட்டன. நாட்டின் பொருளாதாரம் மேம்பட கோயில்களில் நம்பிக்கையுடன் மக்கள் வழிபட்டனர். Source link