ஆப்கானிஸ்தானில் வீடு புகுந்து முன்னாள் பெண் எம்.பி. சுட்டுக் கொலை..!!

காபூல், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தொடர்ந்து வன்முறை சம்பவங்களும், படுகொலைகளும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தில் எம்.பி.யாக இருந்த முர்சால் நபிஜாதா என்ற பெண் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அவரது வீட்டில் முன்னாள் ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினரும் அவரது பாதுகாவலரும் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் 2021ஆம் ஆண்டு தலிபான்கள் அதிகாரத்திற்கு வந்த பிறகு காபூலில் மீண்டும் … Read more

இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழ் சமூகத்துக்கு வாழ்த்து

ஒட்டாவா: தமிழ்நாடு உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழ் சமூகத்தினர் பொங்கல் விழா கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழ் சமூகத்துக்கு தமிழ் மொழியில் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். பொங்கல் விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா, ஜல்லிக்கட்டு, சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் ஜஸ்டீன் ட்ரூடோவும் ஒருவராக … Read more

பல்கேரியாவில் உடல் ஆரோக்கியம் வேண்டி முகமூடிகள் அணிந்தபடி, மேளதாளங்கள் முழங்க கொண்டாடப்படும் ‘சுர்வா திருவிழா’..!

பல்கேரியாவில், உடல் ஆரோக்கியம் வேண்டி கொண்டாடப்படும் சுர்வா திருவிழாவில், இறகுகளால் அலங்கரிக்கப்பட்ட முகமூடிகளை அணிந்தபடி மேளதாளங்கள் முழங்க, மக்கள் பேரணி சென்றனர். அவர்கள் அணிந்திருந்த பாரம்பரிய சிவப்பு ஆடைகளில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளிலிருந்து வெளிப்படும் ஓசை, தீய சக்திகளை விரட்டியடிக்கும் என நம்பப்படுகிறது. புத்தாண்டை முன்னிட்டு கொண்டாடப்படும் சுர்வா திருவிழாவில் கலந்துகொள்ள அனைவரும் சொந்த ஊர்களுக்குத் திரும்புவார்கள் என கூறப்படுகிறது. Source link

உலகளவில் மோடி தலைமையில் அதிகரிக்கும் இந்தியாவின் செல்வாக்கு: பாக்., மீடியா புகழாரம்| pak media praise india

இஸ்லாமாபாத்: உலகளவில் பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவின் கால்தடம் மற்றும் செல்வாக்கு அதிகரித்து வருவதாக பாக்., வெளியாகும் பத்திரிகையில் தலையங்கம் எழுதப்பட்டு உள்ளது. வழிநடத்தும் இந்தியா பாகிஸ்தானில் வெளியாகும் தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் பத்திரிகையில் அரசியல், பாதுகாப்புத்துறை நிபுணர் ஷஜாத் சவுத்ரி எழுதியுள்ளதாவது: வெளியுறவு கொள்கையில், பிரதமர் மோடி தலைமையில் இந்தியா தனக்கு என புதிய விதியை வகுத்துள்ளது. தனக்கு முன்னர் இருந்தவர்கள் செய்ய முடியாததை, இந்தியாவிற்கு முத்திரை குத்த பிரதமர் மோடி ஏதோ செய்துள்ளார். முக்கியமாக, … Read more

ஐதராபாத் எட்டாம் நிஜாம் துருக்கியில் காலமானார்| The eighth Nizam of Hyderabad died in Turkey

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்தான்புல்: ஐதராபாத்தின் எட்டாவது நிஜாம் வயது முதிர்வு காரணமாக துருக்கியில் காலமானார். தெலங்கானா மாநிலம் தலைநகர் ஐ தராபாத்தை ஆட்சி செய்தவர்கள் நிஜாம் மன்னர்கள். சுதந்திர இந்தியாவிற்கு பின்னர் ஐதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அதன் பின்னர் நிஜாம் வம்சாவழியினர். வெளிநாடுகளில் வசித்து வந்தனர். நிஜாம் வழியில் வந்தவர்களில் எட்டாவது நிஜாம் முகரம் ஜா என்பவராவார். 1933ம் ஆண்டில் பிறந்த இவர் தற்போது துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல் குடும்பத்தினருடன் … Read more

பிரபஞ்ச அழகியாக அமெரிக்க பெண் தேர்வு| American woman chosen as Miss Universe

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூ ஓர்லியான்ஸ்:அமெரிக்காவில் நேற்று முன்தினம் இரவு நடந்த, 2022 ம் ஆண்டுக்கான, ‘மிஸ் யுனிவர்ஸ்’ எனப்படும், பிரபஞ்ச அழகி போட்டியில் அமெரிக்க அழகியான ரபோனி கேப்ரியல் முதலிடம் பிடித்தார். அவருக்கு கடந்தாண்டு பிரபஞ்ச அழகியான இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து, கிரீடம் அணிவித்து பட்டத்தை அளித்தார். பிரபஞ்ச அழகிக்கான போட்டி அமெரிக்காவின் லுாசியானா மாகாணம் நியூ ஓர்லியான்சில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், இந்தியாவைச் சேர்ந்த திவிதா … Read more

ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை நல்ல பலன்களை தருகின்றன; அதிபர் புடின் பெருமிதம்.!

வரலாற்று ரீதியாக ரஷ்யாவின் ஒரு பகுதி உக்ரைன் என ரஷ்யா கூறிவருகிறது. ஆனால் தாங்கள் தனித்துவமானவர்கள் என உக்ரேனியர்கள் கூறிவருகின்றனர். இந்த சூழலில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், உக்ரைன் நாட்டு அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்தார். அதை எதிர்த்து தான் ரஷ்யா போரை தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி … Read more

பாக்.,கில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்: கோதுமை மாவு லாரியை துரத்திய மக்கள்| Food famine in Pakistan: People chasing wheat flour truck

இஸ்லாமாபாத்:பொருளாதார நெருக்கடியால் அங்கு உணவுப்பொருட்கள், மண்ணெண்ணெய், காய்கறிகள் ஆகியவற்றின் விலை விண்ணை தொட்டு வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான் மக்களின் முக்கிய உணவான கோதுமைக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. 20 கிலோ கோதுமை மாவு பாக்கெட் ரூ.3,100-க்கும், ஒரு கிலோ சர்க்கரை ரூ.155, ஒரு கிலோ வெங்காயம் ரூ.280, ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சமையல் காஸ் சிலிண்டர்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு உருவாகியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானில் ஒரு நகரில் கோதுமை மூட்டைகளை ஏற்றிச் சென்ற … Read more

நேபாளத்தில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் | 5 இந்தியர்கள் உள்பட 68 பேர் உயிரிழப்பு

நேபாளம்: நேபாளத்தில் 72 பயணிகளுடன் சென்ற பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 இந்தியர்கள் உள்பட 68 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது வருகின்றன. Yeti விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று 68 பயணிகள், 4 விமானப் பணியாளர்கள் என 72 பேருடன் நேபாளத்தில் உள்ள பொக்காரா விமான நிலையத்தில் தரையிறங்கச் சென்றது. அப்போது, விமானம் திடீரென தரையில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில், 68 பேர் … Read more

பெண்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாது; தாலிபான்கள் திட்டவட்டம்.!

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி, ஆட்சி மற்றும் அதிகாரத்தை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றினர். சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து தாலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினர். ஆப்கானிஸ்தான் நாட்டில் ஓராண்டுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் தாலிபான்கள், அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக, அந்நாட்டின் பெண்கள் பாலின பாகுபாட்டால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தான் … Read more