நேபாள விமான விபத்து நடந்தது எப்படி? இந்தியர்கள் உட்பட 72 பேர்… பரபரப்பு வீடியோ!

நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து ட்வின் எஞ்சின் ATR 72 ஏர்கிராப்ட் என்ற யெடி ஏர்லைன்ஸ் (Yeti Airlines) விமானம் இன்று காலை 10.33 மணிக்கு புறப்பட்டது. இது போகாரா விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது. இந்த இரு விமான நிலையங்களுக்கும் இடைப்பட்ட பயண நேரம் 25 நிமிடங்கள் மட்டுமே. இந்நிலையில் விமானம் புறப்பட்டு 20 நிமிடங்கள் ஆன நிலையில் சேதி ஆற்றங்கரை பகுதியில் விழுந்து நொறுங்கி பயங்கர விபத்தில் சிக்கியது. மளமளவென எரியும் தீ … Read more

லண்டனில் உள்ள தமிழ் கல்விக்கூடத்தில் மாணவர்கள் இணைந்து தை பொங்கல் கொண்டாட்டம்..!

லண்டன் எசக்ஸ் கோல்செஸ்டர் தமிழ் கல்விக்கூடத்தில் தை பொங்கல் திருநாள் விமரிசையாக கொண்டாடப்பட்டது. தை மாதத்தை தமிழ்ப் பாரம்பரிய மாதமாக உலக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் எசக்ஸ் கோல்செஸ்டர் தமிழ் கல்விக்கூடத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், அங்கு தமிழ் பயிலும் மாணவர்கள் கலந்துகொண்டனர். தமிழர்களின் தொன்மை, வரலாறு, கலை, பண்பாடுகளை மாணவர்கள் அறியும் வகையில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.  Source link

Nepal Plane Crash: நோபாள விமான விபத்து – 72 பேர் நிலை என்ன?

மேற்கு நேபாளத்தில் அமைந்துள்ள நகரின் பழைய மற்றும் புதிய விமான நிலையங்களுக்கு இடையில் இயங்கும் எட்டி ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 68 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் பயணித்தனர்.  எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் இரட்டை எஞ்சின் ஏடிஆர் 72 விமானம் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து போகரா நோக்கி வந்து கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. விபத்தால் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மீட்புப் பணிகள் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேபாள பிரதமர் புஷ்ப கமல் … Read more

நேபாள விமான விபத்து;16 பயணிகள் உயிரிழந்த சோகம்… மற்றவர்களின் நிலை?

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து இன்று காலை எட்டி ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 10:33 மணிக்கு பொக்காரா புறப்பட்டது. இந்த விமானத்தில் 68 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் என மொத்தம் 72 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில், விமானம் பொக்காரா பகுதி அருகே திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமானம் விழுந்ததும் மளமளவென தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் புகை மூட்டம் ஏற்பட்டு உள்ளூர் வாசிகள் அலறி அடித்துக்கொண்டு அப்பகுதிக்கு சென்றனர். சம்பவ இடத்துக்கு மீட்பு குழுவினர்விரைந்து … Read more

நேபாள விமான விபத்தில் 5 இந்தியர்கள் பலியா?| 5 Indians killed in Nepal plane crash?

காத்மண்டு: நேபாளத்தில் பொகாரோ சர்வதேச விமான நிலையத்தில் 68 பயணிகளுடன் சென்ற விமானம் தரையிறங்கிய போது, ஓடுபாதையில் மோதி தீப்பிடித்தது. அந்த இடத்தில் மீட்பு பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. அந்த விமானத்தில் நேபாளத்தை சேர்ந்த 53 பேர், 5 இந்தியர்கள், 4 ரஷ்யர்கள், ஐரிஷ் ஒருவர், கொரியாவை சேர்ந்த இருவர், அர்ஜென்டினாவை மற்றும் பிரான்சை சேர்ந்த தலா ஒருவர் பயணித்துள்ளனர். அவர்களும் இந்த விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காத்மண்டு: நேபாளத்தில் பொகாரோ சர்வதேச … Read more

கோவிட் பாதிப்பால் சுமார் 60 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பு!

கோவிட் தொடர்பான இறப்பு எண்ணிக்கை சுமார் 60 ஆயிரம் என்று சீன அரசு முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 7ம் தேதி கட்டுப்பாடுகளை சீனா தளர்த்திய பின்னர் கோவிட் வேகமாகப் பரவத் தொடங்கியது.. தினமும் 5 அல்லது 10 பேர் மட்டுமே உயிரிழப்பு என்று சீனா உண்மைகளை மூடி மறைப்பதாக உலக சுகாதார அமைப்பு முதல் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தது. இந்நிலையில் நேற்று சீனாவின் தேசிய சுகாதார கமிஷன் டிசம்பர் 8 … Read more

உக்ரைனில் பொதுமக்கள் வசித்த அடுக்குமாடிக் குடியிருப்பில் ரஷ்யா ஏவுகணை வீச்சு.. 5 பேர் உயிரிழப்பு!

உக்ரைனில் பொதுமக்கள் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 5 பேர் உயிரிழந்தனர். உக்ரைனின் னிப்ரோ நகரில் உள்ள ஒன்பது மாடிகளைக் கொண்ட அடுக்கு மாடிக் குடியிருப்பில் ரஷ்யா தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதால் அந்தக் கட்டடம் முழுவதுமாக நொறுங்கியது. இந்தத் தாக்குதலில் பொதுமக்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 6 குழந்தைகள் உள்பட 27 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. Source link

நட்சத்திரங்கள் உருவாகும் பகுதி: ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி புகைப்படம்!

அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி நிறுவனமான நாசா, ஐரோப்பா மற்றும் கனடாவின் விண்வெளி ஆய்வு அமைப்புகளுடன் இணைந்து ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியது. சுமார் ரூ.75,000 கோடிக்கும் அதிகமான மிகப்பெரிய பட்ஜெட்டுடன் உருவாக்கப்பட்ட இந்த தொலைநோக்கி பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் கடந்த 2021ஆம் ஆண்டு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு, பூமியிலிருந்து 10 லட்சம் மைல்கள் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டது. பிரபஞ்சத்தின் முதல் நட்சத்திரத்தை கண்டுபிடிக்கும் சக்திகொண்ட இந்த … Read more

லண்டன் சென்ற பார்சலில் யுரேனியம் இருந்ததற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை – பாகிஸ்தான் அரசு மறுப்பு

இஸ்லாமாபாத்: லண்டன் ஹீத்ரு விமான நிலையத்துக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி வந்த ஓமன் ஏர் விமானத்தின் உடமைகள் சோதனையிடப்பட்டன. அப்போது, யுரேனியம் தடவிய சரக்கு பெட்டகத்தை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து, இங்கிலாந்தின் காவல் துறை, தீவிரவாத எதிர்ப்பு பிரிவுக்கு தகவல் தெரிவித்தது. அவர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கராச்சியில் இருந்து வந்ததா?: இதுகுறித்து சன் நாளிதழ், இந்த கதிர்வீச்சுள்ள யுரேனிய பார்சல் காரச்சியில் இருந்து வந்ததாகவும், இங்கிலாந்தை சேர்ந்த ஈரானிய நாட்டவருக்கு பார்சல் அனுப்பப்பட்டதாகவும் … Read more

எல்லை பிரச்சினைக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தையை விரைவுபடுத்த சீனா-பூடான் சம்மதம்

பீஜிங், பூடான்-சீனா இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை நீடிக்கிறது. இருநாடுகளுக்கும் இடையில் தூதரக உறவுகள் இல்லாத நிலையில் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி எல்லை பிரச்சினையை தீர்க்க இருநாடுகளும் முயன்று வருகின்றன. இந்த நிலையில் சீனா-பூடான் எல்லை பிரச்சினைகள் குறித்த 11-வது நிபுணர் குழு கூட்டம் சீனாவின் குன்மிங் நகரில் கடந்த 10-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடைபெற்றது. இதுதொடர்பாக இருநாடுகளும் நேற்று கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- 11-வது நிபுணர் குழு கூட்டத்தில் ஒரு … Read more