இஸ்லாமியரின் புனிதநூல் எரிப்பு போராட்டத்துக்கு அனுமதி அளித்த ஸ்வீடன் அரசுக்கு துருக்கி அதிபர் கண்டனம்..!

இஸ்லாமியரின் புனிதநூல் எரிப்பு போராட்டத்துக்கு அனுமதி கொடுத்த ஸ்வீடன் அரசு நேட்டோ உறுப்பினருக்கான ஆதரவை எதிர்பார்க்க கூடாது என துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார், ஸ்வீடனில் நடைபெற்ற புனிதநூல் எரிப்பு போராட்டத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எர்டோகன், இது அனைவருக்கும் குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு அவமானம் என்றும் இந்த போராட்டத்துக்கு அனுமதி அளித்த ஸ்வீடன் அதிகாரிகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார். துருக்கி அல்லது இஸ்லாமியர்களுக்கு ஸ்வீடன் மரியாதை கொடுக்கவில்லை என்றால் நேட்டோ விவகாரத்தில் தங்களிடம் இருந்து எந்த ஆதரவையும் … Read more

குரோஷியாவில் வரலாறு காணாத கடும் பனிப்பொழிவு… மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

குரோஷியாவின் கடலோரப் பகுதிகளில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது. டெல்னிஸ்  நகரத்தில் பலத்த காற்றுடன் சாரல் மழைபோல் பனிக் கொட்டி வருவதால், சாலைகளில் 2 மீட்டர் அளவுக்கு பனி படர்ந்துள்ளது. கடும் பனிப் பொழிவு காரணமாக அத்தியாவசியமற்ற பயணங்களை மக்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  Source link

அமெரிக்காவில் உள்ள பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு

அயோவா, அமெரிக்காவின் அயோவாவில் உள்ள டெஸ் மொயின்ஸ் பட்டயப் பள்ளியில் நேற்று பிற்பகலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு குறித்து பலர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கு ஸ்டார்ட்ஸ் ரைட் ஹியர் பள்ளிக்கு போலீசார் விரைந்தனர். அங்கு துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்த மூன்று பேரை மீட்ட போலீசார், மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில் இரண்டு மாணவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்றொருவர் அந்த பள்ளியில் … Read more

தொடரும் பெருநிறுவனங்களின் ஆட்குறைப்பு; 6 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் 'ஸ்பாடிபை'

வாஷிங்டன், கொரோனா வைரஸ், உக்ரைன் – ரஷியா போர், கச்சா எண்ணெய் விநியோகம், அரசியல் நிலைத்தன்மை, உற்பத்தி – நுகர்வு இடையேயான வேறுபாடு உள்பட பல்வேறு காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக உலக பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, 2023-ம் ஆண்டில் 3-ல் 1 பங்கு உலக பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்கும் என்று ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா இந்த ஆண்டு தொடக்கத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து … Read more

சோமாலியாவில் மேயர் அலுவலகத்தில் குண்டு வெடிப்பு, துப்பாக்கிச்சூடு: 11 பேர் உயிரிழப்பு

மொகாதிசு, கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல் கொய்தா ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் ராணுவ வீரர்கள், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளை குறிவைத்து தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். குறிப்பாக தலைநகர் மொகாதிசுவில் சமீபகாலமாக பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மொகாதிசுவில் உள்ள மேயர் அலுவலகம் மீது அல் ஷபாப் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். முதலில் மேயர் … Read more

உலகம் முழுவதும் 6 சதவீதம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஸ்பாடிஃபை..!

கூகுள், அமேசான், பேஸ்ஃபுக் மெட்டா போன்ற நிறுவனங்களின் வரிசையில், மியூசிக் ஸ்ட்ரீமிங் தளமான ஸ்பாடிஃபை உலகம் முழுவதும் தனது ஊழியர்களில் 6 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. செயல்திறன்களை மேம்படுத்தும் முயற்சியாக, நிறுவனத்தில் உள்ள பத்தாயிரம் ஊழியர்களில் 600 பேரை பணி நீக்கம் செய்ய ஸ்பாடிஃபை முடிவு செய்துள்ளது. இதனிடையே, பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கான தொகுப்பூதியம், மருத்துவ காப்பீடு உள்ளிட்டவையும் வழங்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால், பல்வேறு பெருநிறுவனங்கள், … Read more

'உயிரோடு எரித்துவிடுவேன்' – அரசியல்வாதிக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த எழுத்தாளர் – காரணம் என்ன?

இஸ்தான்புல், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து மாதக்கணக்கில் போர் நீடித்து வருகிறது. இந்த போரையடுத்து ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோ ராணுவ அமைப்பில் இணைய விண்ணப்பித்துள்ளன. அமெரிக்காவை தலைமையாக கொண்ட நேட்டோ ராணுவ அமைப்பில் துருக்கி உறுப்பு நாடாக உள்ளது. உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒப்புக்கொண்டால் மட்டுமே புதிய உறுப்பு நாடுகள் நேட்டோவில் சேர முடியும். ஆனால், ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைய முட்டுக்கட்டையாக உள்ளது. நாங்கள் பயங்கரவாத இயக்கமாக … Read more

அமெரிக்காவில் அடிக்கடி நடக்கும் துப்பாக்கி சூடு….! ஒரே ஆண்டில் 44,000 பேர் பலி!

கலிபோர்னியா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரருகே மாண்ட்ரே பார்க் நகரம் அமைந்துள்ளது. இதில், கார்வே அவென்யூ பகுதியில் செங் வான் சோய் என்ற சீன வம்சாவளி தொழிலதிபரின் ஓட்டல் ஒன்று உள்ளது. தெற்கு கலிபோர்னியாவில் ஆண்டுதோறும், 2 நாட்கள் சீனாவின் சந்திர புதுவருட திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில், லட்சக்கணக்கானோர் திரளாக கலந்து கொள்வது வழக்கம். இதேபோன்று, நடந்த முதல் நாள் திருவிழாவின்போது, அந்த ஓட்டலில் நேற்று இரவு சீன புதுவருட தினம் கோலாகலமுடன் கொண்டாடப்பட்டு … Read more