வரலாறு காணாத மழையால் பெருவெள்ளம் – அமெரிக்காவில் 52 பேர் உயிரிழப்பு; 27 பேரை காணவில்லை

வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. கனமழை வெள்ளத்தால் இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் தென் மத்திய பகுதியில் டெக்சாஸ் மாகாணம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்த மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 4ம் தேதி சில மணி நேரத்தில் 280 மிமீ மழை பெய்தது. இதன் காரணமாக குவாடலூப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரத்தில் நதியின் நீர்மட்டம் 29 அடி வரை உயர்ந்தது. … Read more

பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடங்கியது: பிரேசிலில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நேற்று தொடங்​கியது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடியை உலக நாடுகளின் தலைவர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். முன்​ன​தாக, விமான நிலையத்தில் ஏராள​மான இந்​தி​யர்​கள் திரண்டு மோடிக்கு உற்​சாக வரவேற்பு அளித்​தனர். பிரிக்ஸ் கூட்​டமைப்பு 2009-ம் ஆண்​டில் தொடங்​கப்​பட்​டது. இதில் பிரேசில், ரஷ்​யா, இந்​தி​யா, சீனா, தென் ஆப்​பிரிக்​கா, எகிப்​து, எத்​தி​யோப்​பி​யா, ஈரான், ஐக்​கிய அரபு அமீரகம், இந்​தோ​னேசியா ஆகிய நாடு​கள் உறுப்​பினர்​களாக உள்​ளன. … Read more

புதிய கட்சி தொடங்கினார் எலான் மஸ்க்

வாஷிங்டன்: உலக பெரும் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளவரும், டெஸ்லா,ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியவர் எலான் மஸ்க். இதையடுத்து, ட்ரம்ப் நிர்வாகத்தில் அரசு செயல் திறன்துறை (டிஓஜிஇ) தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், உள்நாட்டு செலவினம், வரி குறைப்பு தொடர்பான மசோதாவை ட்ரம்ப் கொண்டு வந்ததால்,இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, … Read more

காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் – 33 பேர் உயிரிழப்பு

காசா, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 57 … Read more

ஈரான்-இஸ்ரேல் போருக்கு பின் முதன்முறையாக பொதுமக்கள் முன் தோன்றிய காமேனி

தெஹ்ரான், காசா மீது ஓராண்டுக்கும் மேலாக இஸ்ரேல் போர் தொடுத்து வரும் சூழலில், கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் குடியிருப்புகளை இலக்காக கொண்டு, 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி ஈரான் தாக்குதல் நடத்தியது. நிவேதிம் விமான தளம், நெட்ஜரிம் ராணுவ தளம் மற்றும் டெல் நாப் உளவு பிரிவு என இஸ்ரேலின் 2 ராணுவ தளங்கள் உள்ளிட்ட பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, அதற்கு பதிலடி தரும் வகையில், ஈரான் மீதும் இஸ்ரேல் … Read more

அமெரிக்காவில் புதிய கட்சியை தொடங்கிய எலான் மஸ்க்… ஏன், எதனால்? விரிவான ஓர் அலசல்

லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்தது. இதில், குடியரசு கட்சியை சேர்ந்த வேட்பாளரான டொனால்டு டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியை சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிட்டனர். எனினும், டிரம்ப் வெற்றி பெற்று ஜனாதிபதியானார். அந்நாட்டில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி என இரு கட்சிகள் பெரும் சக்தியாக உள்ளன. இந்த இரு கட்சிகளை சேர்ந்தவர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு, மாறி மாறி வெற்றியும் பெற்று வருகின்றனர். இந்த சூழலில், ஜனவரி … Read more

ஆப்கானிஸ்தானின் தலீபான் அரசுக்கு ரஷியா அதிகாரப்பூர்வ அங்கீகாரம்

மாஸ்கோ, ஆப்கானிஸ்தானில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையில் அங்கு மக்களாட்சி நடைபெற்றது. 2021-ம் ஆண்டு தலீபான்கள் தலைமையில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து அங்கு தலீபான்கள் ஆட்சி ஏற்பட்டு 4 ஆண்டுகளாகிறது. இருப்பினும் அப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சிக்கு அண்டை நாடுகள் உள்பட சர்வதேச நாடுகள் இதுவரை அங்கீகாரம் அளிக்கவில்லை. இந்தநிலையில் ரஷியா அரசாங்கம் முதன்முறையாக தலீபான் ஆட்சிக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. அதாவது அந்த நாட்டுடன் தூதரக அளவில் உறவு … Read more

உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்… புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி என இரு கட்சிகள் பெரும் சக்தியாக உள்ளன. இந்த இரு கட்சிகளை சேர்ந்தவர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு, மாறி மாறி வெற்றியும் பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த வேட்பாளரான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று ஜனாதிபதியானார். இதனால், ஜனநாயக கட்சியை சேர்ந்த பைடனின் ஆட்சி முடிவுக்கு வந்தது. டிரம்ப் பதவிக்கு வந்ததும் பல உத்தரவுகளை பிறப்பித்து அதற்கான … Read more

அதிபர் ட்ரம்ப் உடன் மோதல்: அமெரிக்காவில் புதிய கட்சியை தொடங்கிய எலான் மஸ்க்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே கடந்த மாதம் கருத்து முரண் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை தற்போது எலான் மஸ்க் தொடங்கியுள்ளார். “அமெரிக்க மக்களுக்கு மீண்டும் சுதந்திரத்தை கொடுப்பதற்காக அமெரிக்கா கட்சியை இன்று தொடங்கி உள்ளோம். நமது தேசத்தை வீண் செலவு மற்றும் ஊழல் மூலம் திவால் செய்கின்றனர். இதை பார்க்கும்போது நாம் ஜனநாயக ஆட்சி முறையின் கீழ் இல்லாமல் ஒரு கட்சி முறையின் … Read more

இந்தியா விடுத்த வேண்டுகோளால் நீரவ் மோடி சகோதரர் அமெரிக்காவில் கைது

புதுடெல்லி: குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர். இந்தியாவில் வைர வியாபாரம் செய்த நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில், தனது பங்குதாரர்கள் மற்றும் தனது மாமா மெகுல் ஷோக்ஸி ஆகியோருடன் இணைந்து ரூ.28,000 கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்தார். இந்த பணத்தை போலி நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்ப இவரது தம்பி நெஹல் மோடி உதவினார். இருவர் மீதும் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ, மோசடி மற்றும் குற்றச் … Read more