அணுமின் நிலையங்களில் அமெரிக்க ஆயுதங்கள்; ரஷ்ய உளவுத்துறை ரிப்போர்ட்.!

வரலாற்று ரீதியாக ரஷ்யாவின் ஒரு பகுதி உக்ரைன் என ரஷ்யா கூறிவருகிறது. ஆனால் தாங்கள் தனித்துவமானவர்கள் என உக்ரேனியர்கள் கூறிவருகின்றனர். இந்த சூழலில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், உக்ரைன் நாட்டு அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்தார். அதை எதிர்த்து தான் ரஷ்யா போரை தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி … Read more

“உக்ரைன் போர் முடிவுக்கு வராததற்கு மேற்கத்திய நாடுகளே காரணம்” – ரஷ்யா

பிரிடோரியா: உக்ரைன் போர் முடிவடையாமல் இருப்பதற்கு மேற்கத்திய நாடுகளே காரணம் என்று ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. தென்னாப்பிரிக்கா சென்றுள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாரோவ், அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் நலீதி பந்தரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். தென்னாப்பிரிக்காவின் நிர்வாகத் தலைநகரான பிரிடோரியாவில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையை அடுத்து செர்கி லாரோவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய உக்ரைன் போர் ஓராண்டை நிறைவு செய்ய உள்ள நிலையில், அது எப்போது முடிவுக்கு … Read more

மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு பீரங்கிகள் வழங்க ரஷ்யா எதிர்ப்பு

மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு பீரங்கிகளை வழங்கினால், அதற்கான தண்டனையை உக்ரைன் மக்கள் அனுபவிப்பார்கள் என ரஷ்யா எச்சரித்துள்ளது. கரடு முரடான பாதைகளில் கூட மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய லியோபர்டு கவச பீரங்கிகளை உக்ரைனுக்கு வழங்க ஜெர்மனி தொடர்ந்து தயக்கம் காட்டிவருகிறது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் எவ்வளவோ வலியுறுத்தியும் ஜெர்மனி தயக்கம்காட்டுவது, நேட்டோ நாடுகளியே நிலவிவரும் குழப்பத்தை பிரதிபலிப்பதாக ரஷ்யா விமர்சித்துள்ளது. Source link

சீனர்கள் மீதான துப்பாக்கிச்சூடு; தன்னைத் தானே சுட்டுக் கொண்ட குற்றவாளி.!

சந்திர புத்தாண்டு என்பது சீனாவில் மிக முக்கியமான வருடாந்திர விடுமுறையாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சீன இராசியின் 12 அறிகுறிகளில் ஒன்றின் பெயரால் மீண்டும் மீண்டும் சுழற்சியில் கொண்டாடபடுகிறது. இந்த ஆண்டு முயல் ஆண்டு. இந்த கொண்டாட்டத்தில் பெரிய குடும்பக் கூட்டங்கள் மற்றும் கோயில்களுக்குச் செல்லும் கூட்டம் ஆகியவை அடங்கும். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குழந்தைகளுக்கான பணத்துடன் கூடிய விரிவான இரவு உணவுகள் மற்றும் சிவப்பு உறைகள் ஆகியவை வழங்குவது நடைபெறும். அதன்படி சீனா மற்றும் வியட்நாமில் … Read more

பாகிஸ்தானில் முக்கிய நகரங்களுக்கு மின் விநியோகம் நிறுத்தம்

பாகிஸ்தானில், மின் பகிர்மான நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறால் கராச்சி, இஸ்லாமாபாத், லாகூர் உள்ளிட்ட நகரங்களில் காலை முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அலுவலகங்களிலுள்ள கணிணிகளும், போக்குவரத்து சிக்னல்களும் இயங்காததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குளிர்காலத்தில், மக்களின் மின் தேவை குறைவதாலும், பல்வேறு சிக்கன நடவடிக்கைகளாலும், இரவில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டு, மீண்டும் காலை தொடங்கப்படுகிறது. அப்போது மின்னழுத்தத்தில் நேர்ந்த ஏற்றத் தாழ்வுகளால் மின் பகிர்மானம் பாதிக்கப்பட்டது. நிதிபற்றாக்குறையால் ஜெனரேட்டர்கள் முறையாகப் பராமரிக்கப்படாததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. Source link

ஸ்வீடனில் குரான் எரிப்பு சம்பவம்: இஸ்லாமிய வெறுப்புக்கு எதிராக துருக்கி கொந்தளிப்பு

ஸ்டாக்ஹோம்: ஸ்வீடனில் நடந்த ஒரு போராட்டத்தில் குரானை தீயில் வைத்து எரிந்த சம்பவம், இஸ்லாமிய நாடுகளில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஸ்வீடனை துருக்கி கடுமையாக விமர்சித்துள்ளது. ஸ்வீடனை சேர்ந்த ராஸ்மஸ் பலுடன் என்பவர் இஸ்லாம் மதத்துக்கு எதிராக கருத்துகளை கூறி வருபவர். இவர் ஸ்டாக்ஹோமில் உள்ள துருக்கி தூதரகத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை தீயில் எரித்தார். இந்தச் செயலை பலரும் கண்டித்தனர். இத்தகைய போராட்டங்களை அனுமதிக்கும் ஸ்வீடன் அரசின் முடிவு “முற்றிலும் ஏற்றுக்கொள்ள … Read more

இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது அதிநவீன ‘வகிர்’ நீர்மூழ்கி கப்பல்..!

இந்திய கடற்படைக்கு வலிமை சேர்க்கும் வகையில் ஐஎன்எஸ் ‘வகிர்’ நீர்மூழ்கிக் கப்பல் கடற்படையில் சேர்க்கப்பட்டது. மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடற்படை தளபதி ஹரிகுமார் முன்னிலையில் வகிர் கப்பல் இணைக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்ப பரிமாற்றங்களுடன், இந்தியாவிலுள்ள மசகான் டோக் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் ஐஎன்எஸ் ‘வகிர்’ உருவாக்கப்பட்டது. இந்த நீர்மூழ்கி கப்பல், எதிரிகளைத் தடுப்பதிலும், கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளிலும் இந்திய கடற்படையின் ஆற்றலை வலுப்படுத்தும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். உலகின் சிறந்த சென்சார்களை கொண்ட அந்த … Read more

இருளில் மூழ்கிய பாகிஸ்தான் – பொது மக்கள் கடும் அவதி!

பாகிஸ்தான் நாட்டில் இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் கராச்சி ஆகிய முக்கிய நகரங்களில் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டதால் பொது மக்கள் அவதிக்கு உள்ளாகினர். அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டில் இன்று காலை பல்வேறு நகரங்களில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இது பற்றி அந்நாட்டின் மின் துறைக்கான செய்தித் தொடர்பாளர் இம்ரான் ராணா, சமூக வலைதளமான ட்விட்டரில் இன்று வெளியிட்ட செய்தியில், “வெவ்வேறு நகரங்களின் முக்கிய பகுதிகளில் பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டு உள்ளது என்ற தகவல் … Read more