பாலியல் வன்கொடுமையில் ரஷ்ய படையினர் உக்ரைன் அதிபரின் மனைவி பகிரங்க குற்றச்சாட்டு| Dinamalar
லண்டன், ”உக்ரைன் நாட்டு பெண்களை பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்வதை ரஷ்ய படையினர் ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்,” என உக்ரைன் அதிபரின் மனைவி ஒலேனா செலன்ஸ்கா, 44, குற்றஞ்சாட்டி உள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர், கடந்த பிப்., துவங்கி தற்போது வரை நீடித்து வருகிறது. இதில், ரஷ்யா பல்வேறு விதமான போர் உத்திகளை கையில் எடுத்தாலும், உக்ரைனை கைப்பற்றுவதில் அது பின்னடைவையே சந்தித்து வருகிறது. இந்நிலையில், போர்களின் போது ஏற்படும் … Read more