அதிபர் ஜின்பிங் பதவி விலக மக்கள் தீவிரம்| Dinamalar

பீஜிங்: சீனாவில் நேற்று ஒரே நாளில் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அதிபர் ஷீ ஜின்பிங் பதவி விலக கோரி வெடித்துள்ள மக்கள் போராட்டம், தலைநகர் பீஜிங் வரை பரவியது. சீனாவின் வூஹான் நகரில் 2019 டிசம்பரில் கொரோனா தொற்று பரவத் துவங்கியது. அங்கிருந்து உலகம் முழுதும் பரவிய தொற்று, உலக நாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக முடக்கிப்போட்டது. அனைத்து நாடுகளும் கொரோனா தொற்று பரவலில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு … Read more

அமெரிக்காவ வெளிய துரத்துங்க… FIFA World Cup-ல் வெடித்த பூகம்பம்… செம கோபத்தில் ஈரான்!

கத்தாரில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. போட்டிகளுக்கு மத்தியில் ரசிகர்களின் ஆரவாரமும், கொண்டாட்டமும் களைகட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளை சேர்ந்த ரசிகர்கள் கத்தார் புறப்பட்டு சென்று தங்கள் நாட்டு தேசியக் கொடியுடன் மகிழ்ச்சியுடன் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவிற்கு எதிராக புதிய சர்ச்சை வெடித்துள்ளது. ஈரான் vs அமெரிக்கா இந்திய நேரப்படி இன்று (நவம்பர் 29) நள்ளிரவு 12.30 மணிக்கு ஈரான், அமெரிக்கா இடையில் லீக் சுற்று போட்டி நடைபெறுகிறது. இதுதொடர்பாக அமெரிக்க … Read more

அமெரிக்க ஏரியில் மூழ்கி தெலுங்கானா மாணவர்கள் பலி| Dinamalar

ஹூஸ்டன்: அமெரிக்காவில் ஏரியில் குளித்த இரண்டு இந்திய மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த உதேஜ் குன்டா, 24, சிவ கெல்லிகரி, 25 இருவரும், அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் உள்ள பல்கலையில் படித்து வந்தனர். கடந்த 26ம் தேதி அங்குள்ள ஓசர்க்ஸ் ஏரிக்கு சென்றனர். முதலில் ஏரியில் குதித்த உதேஜ் ஆழமான பகுதிக்கு சென்று தத்தளித்தார். அவரைக் காப்பாற்ற கெல்லிகரி ஏரியில் குதித்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக இருவருமே நீரில் மூழ்கினர். மீட்புப் படையினர் வந்து, … Read more

குழந்தை உட்பட 21 பேர் பலி| Dinamalar

மிலன்: இத்தாலி மற்றும் கேமரூன் நாடுகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பிறந்து மூன்று வாரங்களே ஆன குழந்தை உட்பட 21 பேர் உயிரிழந்தனர். ஐரோப்பிய நாடான இத்தாலியில் அமைந்துள்ள இச்சியா தீவு, உலக அளவில் சுற்றுலாப் பயணியரின் மனம் கவர்ந்த இடமாக திகழ்கிறது. இங்கு சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இங்குள்ள காசாமிச்சியோலா என்ற இடத்தில் 26ம் தேதி அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் மண்ணுக்குள் புதைந்தனர். தகவல் அறிந்து வந்த மீட்புப் படையினர், … Read more

உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு| Dinamalar

லண்டன்: குரங்கு அம்மை நோய்க்கு ‘எம் பாக்ஸ்’ என்ற புதிய பெயரை உலக சுகாதார அமைப்பு சூட்டியுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 1958ல் ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் இந்த நோய் குறித்து ஆராய்ச்சி நடத்தி குரங்கு அம்மை என்ற பெயர் சூட்டப்பட்டது. இழிவு: ஆனால் குரங்கு அம்மை என்ற பெயர் ஆப்ரிக்க கண்டத்தை இனரீதியில் இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளது. இந்த நோய் ஆப்ரிக்க நாடுகளில் இருந்துதான் பரவுவதாகவும் அறியப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொற்று … Read more

சார்லஸ் டார்வின்கையெழுத்திட்ட ஆவணம் ரூ.9 கோடிக்கு ஏலம்| Dinamalar

நியூயார்க்: புகழ்பெற்ற உயிரியலாளர் ‘ சார்லஸ் டார்வின்’ கையெழுத்திட்ட ஆவணம் ஏலம் விடப்பட உள்ளதாகவும் அதனை ரூ. 9 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த பிரபல உயிரியலாளரும், இயற்கையியல் விஞ்ஞானியான சார்லஸ் டார்வின், மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்த கோட்பாட்டை வகுத்தார். அவர் தனது நூலனான ‘The Origin of Species by Natural Selection’ என்கிற புத்தகம் அமோக வரவேற்பைப் பெற்றது. அதில் ‘மனிதனின் முன்னோர்கள் குரங்குகள் என்பதை ஆதாரங்களுடன் … Read more

பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தலாம்; தாலிபான்கள் அறிவிப்பு.!

கடந்த 1978ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் ஆதரவுடன் ஆப்கானிஸ்தானில் இடதுசாரிகள் அரசாங்கத்தை அமைத்தனர். ஆனால் 1979ம் ஆண்டு அந்த கம்யூனிஸ்ட் அரசும் கவிழ்ந்துவிட்டது. இதையடுத்து ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த சோவியத் படைகள் அந்நாட்டை ஆக்கிரமித்தன. அப்போது சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக யுத்தம் நடத்த, அமெரிக்காவின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டவர்களே முஜாஹிதீன்கள். சோவியத் ஒன்றியத்தைத் தாக்க அமெரிக்கா இஸ்லாமிய தீவிரவாதக் கோட்பாட்டை உருவாக்கியது. அப்போதுதான் அனைவரையும் அச்சப்படுத்தும் `ஜிஹாத்’, `புனிதப்போர்’ என்கிற பயங்கரவாத சொற்கள் பிறப்பெடுத்தன. சோவியத் ஒன்றியத்தின் படைகளுக்கு எதிராக … Read more

மக்களின் அமைதி வழி போராட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்: சீனாவுக்கு ஐ.நா. அறிவுறுத்தல்

பீஜிங்: சீனாவில் மக்கள் நடத்தும் அமைதி வழி போராட்டத்திற்கு அரசு மதிப்பளிக்க வேண்டும் என ஐ.நா. அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் ஒரே நாளில் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு தொற்று தடுப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. நாடு முழுதும் பல்வேறு மாகாணங்களிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், 41 கோடி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். தங்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இந்நிலையில் உரும்குயியில் அடுக்குமாடி கட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் பலியாயினர். அரசின் … Read more

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக பறவை காய்ச்சலுக்கு 5 கோடி பறவைகள் உயிரிழப்பு

நியூயார்க், அமெரிக்காவின் வேளாண் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நடப்பு ஆண்டில் அமெரிக்க வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் பறவை காய்ச்சலுக்கு, முதன்முறையாக 5 கோடியே 5 லட்சத்து 40 பறவைகள் உயிரிழந்து உள்ளன. அவற்றில் பண்ணை மற்றும் பண்ணை அல்லாத பறவைகளும் அடங்கும். கோழிகள், வான்கோழிகள் மற்றும் பிற பறவைகளின் உயிரிழப்பு, இந்த நாள் வரையில் அமெரிக்காவில் மிக மோசம் வாய்ந்த விலங்கு சுகாதார பேரிடராக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு, 2015-ம் ஆண்டில் பறவை காய்ச்சலுக்கு 5 … Read more

Zero Covid: சீனாவில் மக்கள் போராட்டம்! 'ஜீரோ-கோவிட்' கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு

ஷாங்காய்: சீனாவின் கடுமையான ‘ஜீரோ-கோவிட்’ கட்டுப்பாடுகளுக்கு உள்நாட்டில் எதிர்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், பிற நாடுகளிலும் அதற்கு ஆதரவு அதிகரிக்கிறது. சீன மக்கள் வழக்கமாக போராட்டங்களில் அதிகம் ஈடுபடுவதில்லை. ஆனால், தற்போது தங்கள் கோபத்தை, போராட்டங்களாக வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டனர். கடந்த வார இறுதியில் சீன மக்கள் நாட்டின் கடுமையான பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை எதிர்த்து வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கினார்கல். இதற்கிடையில், நவம்பர் 26 அன்று 39,791 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியிருப்பதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. … Read more