பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தலாம்; தாலிபான்கள் அறிவிப்பு.!

கடந்த 1978ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் ஆதரவுடன் ஆப்கானிஸ்தானில் இடதுசாரிகள் அரசாங்கத்தை அமைத்தனர். ஆனால் 1979ம் ஆண்டு அந்த கம்யூனிஸ்ட் அரசும் கவிழ்ந்துவிட்டது. இதையடுத்து ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த சோவியத் படைகள் அந்நாட்டை ஆக்கிரமித்தன. அப்போது சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக யுத்தம் நடத்த, அமெரிக்காவின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டவர்களே முஜாஹிதீன்கள். சோவியத் ஒன்றியத்தைத் தாக்க அமெரிக்கா இஸ்லாமிய தீவிரவாதக் கோட்பாட்டை உருவாக்கியது. அப்போதுதான் அனைவரையும் அச்சப்படுத்தும் `ஜிஹாத்’, `புனிதப்போர்’ என்கிற பயங்கரவாத சொற்கள் பிறப்பெடுத்தன. சோவியத் ஒன்றியத்தின் படைகளுக்கு எதிராக … Read more

மக்களின் அமைதி வழி போராட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்: சீனாவுக்கு ஐ.நா. அறிவுறுத்தல்

பீஜிங்: சீனாவில் மக்கள் நடத்தும் அமைதி வழி போராட்டத்திற்கு அரசு மதிப்பளிக்க வேண்டும் என ஐ.நா. அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் ஒரே நாளில் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு தொற்று தடுப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. நாடு முழுதும் பல்வேறு மாகாணங்களிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், 41 கோடி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். தங்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இந்நிலையில் உரும்குயியில் அடுக்குமாடி கட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் பலியாயினர். அரசின் … Read more

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக பறவை காய்ச்சலுக்கு 5 கோடி பறவைகள் உயிரிழப்பு

நியூயார்க், அமெரிக்காவின் வேளாண் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நடப்பு ஆண்டில் அமெரிக்க வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் பறவை காய்ச்சலுக்கு, முதன்முறையாக 5 கோடியே 5 லட்சத்து 40 பறவைகள் உயிரிழந்து உள்ளன. அவற்றில் பண்ணை மற்றும் பண்ணை அல்லாத பறவைகளும் அடங்கும். கோழிகள், வான்கோழிகள் மற்றும் பிற பறவைகளின் உயிரிழப்பு, இந்த நாள் வரையில் அமெரிக்காவில் மிக மோசம் வாய்ந்த விலங்கு சுகாதார பேரிடராக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு, 2015-ம் ஆண்டில் பறவை காய்ச்சலுக்கு 5 … Read more

Zero Covid: சீனாவில் மக்கள் போராட்டம்! 'ஜீரோ-கோவிட்' கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு

ஷாங்காய்: சீனாவின் கடுமையான ‘ஜீரோ-கோவிட்’ கட்டுப்பாடுகளுக்கு உள்நாட்டில் எதிர்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், பிற நாடுகளிலும் அதற்கு ஆதரவு அதிகரிக்கிறது. சீன மக்கள் வழக்கமாக போராட்டங்களில் அதிகம் ஈடுபடுவதில்லை. ஆனால், தற்போது தங்கள் கோபத்தை, போராட்டங்களாக வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டனர். கடந்த வார இறுதியில் சீன மக்கள் நாட்டின் கடுமையான பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை எதிர்த்து வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கினார்கல். இதற்கிடையில், நவம்பர் 26 அன்று 39,791 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியிருப்பதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. … Read more

சீனாவில் ஊரடங்கு, போராட்டம்: சர்வதேச சந்தைகளில் பங்குகள் கடும் வீழ்ச்சி

பாங்காங், கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக சீனாவில் கடுமையான போராட்டம் வெடித்துள்ளது. அதிபர் ஜி ஜின்பிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் மாணவர்கள், இளைஞர்கள் பல தரப்பினரும் பொது வெளியில் போராட தொடங்கியிருக்கின்றனர். கடுமையான கட்டுப்பாடுகள் கொண்ட சீனாவில் இதுபோன்ற போராட்டங்கள் நடைபெறுவது அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது. சீனாவில் கொரோன பரவல் மற்றும் அதை சார்ந்து வெடித்துள்ள போராட்டங்களால் சர்வதேச சந்தைகளில் பங்குகளின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.ஐரோப்பிய, ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர். … Read more

ஐ.நா. தலைமையக வளாகத்தில் காந்தி மார்பளவு சிலை| Dinamalar

நியூயார்க்: ஐ.நா. தலைமையக வளாகத்தில் தேச தந்தை மகாத்மா காந்தி மார்பளவு சிலை திறக்கப்படுகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பொறுப்பை இந்தியா விரைவில் ஏற்க உள்ளது. இதையொட்டி தேச தந்தை மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை இந்தியா சார்பில் ஐ.நா.வுக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இந்த சிலை ஐ.நா. தலைமை அலுவலக வளாகத்தில் அடுத்த மாதம் நிறுவப்படுகிறது. இதன் விழாவில் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கலந்து கொள்கிறார். ஐ.நா.வுக்கான இந்தியாவின் பிரதிநிதி ,இந்திய வெளியுறவு அமைச்சர், … Read more

சோமாலியா: ஜனாதிபதி அலுவலகம் அருகே பயங்கரவாதிகள் தாக்குதல் – 4 பேர் பலி

மொகாதிசு, கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் மத அடிப்படையிலான அரசை நிறுவ அல்-கொய்தா ஆதரவு பெற்ற அல்-ஷபாப் பயங்கரவாதிகள் முயற்சித்து வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இவர்கள் அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இவர்களை ஒடுக்க கடுமையாக போராடி வரும் சோமாலியா ராணுவம் போராளி குழுக்களின் உதவியுடன் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை மீட்டெடுத்து வருகிறது. இந்த நிலையில், தலைநகர் மொகாடிஷுவில் ஜனாதிபதி அலுவலகம் அருகே உள்ள ஓட்டல் … Read more

கரோனா கட்டுப்பாடுகளால் கொந்தளிப்பு: ஜின்பிங்குக்கு எதிரான போராட்டக் களத்தில் மாணவர்கள் தீவிரம்

ஷாங்காய்: தீவிர கரோனா கட்டுப்பாடுகள் விவகாரத்தில், சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அதிபருக்கும் எதிரான பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சீனாவில் கரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. கரோனா தொற்றை முழுமையாக இல்லாமல் செய்யும் நோக்கில் ‘ஜீரோ கரோனா’ எனும் கொள்கையை கம்யூனிஸ்ட் அரசு அமல்படுத்தி வருகிறது. இதனால், வீடுகளை விட்டு வெளியே செல்வதில் கட்டுப்பாடு, பணி இடங்களில் கட்டுப்பாடு, பொருட்களை வாங்குவதில் கட்டுப்பாடு என ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நீண்ட நெடுங்காலமாக அமல்படுத்தப்பட்டு வரும் … Read more

இறுதிச்சடங்கு நிகழ்ச்சியின் போது நேர்ந்த சோகம் – நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி

யவ்ண்டி, மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கேமரூன். இந்நாட்டின் தலைநகர் யவ்ண்டியில் உள்ள டமாஸ் மாவட்டத்தில் உயிரிழந்த நபரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 20 மீட்டர் உயரத்திற்கு மணல் மேடு அமைந்துள்ள பகுதி அருகே இருந்த கால்பந்து மைதானத்தில் இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டு மண் மேடு சரிந்து விழுந்தது. இதில், இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்து … Read more

சீனாவில் போராட்ட செய்தியை படம் பிடித்த பிரபல தனியார் சேனல் நிருபருக்கு அடி, உதை

லண்டன், சீனாவில் அரசுக்கு எதிரான போராட்ட செய்தியை படம் பிடித்த பிரபல தனியார் செய்தி நிறுவன நிருபரை கைது செய்து அடித்து, உதைத்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. உலக நாடுகளில் இரண்டரை ஆண்டுகளாக தீவிர அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா பெருந்தொற்று முதன்முறையாக சீனாவில் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலக நாடுகளில் பல்வேறு அலைகளாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. எனினும், கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளால் பிற … Read more