விஞ்ஞானிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற வட கொரிய அதிபர் கிம் மகள்| Dinamalar

சியோல் : வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், மீண்டும் தன் மகளுடன் பொது இடத்தில் தோன்றியது உலக அளவில் பெரும் ஆச்சர்யத்தையும், விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. கிழக்காசிய நாடான வட கொரியாவைப் பற்றி வெளி உலகிற்கு எந்தத் தகவலுமே கசியாது. இங்கு சர்வாதிகார ஆட்சி நடத்தும் கிம் ஜோங் உன், தன் நாட்டை ஒரு மர்மப் பிரதேசமாக வைத்துள்ளார். நாட்டை மட்டுமின்றி தன் குடும்பத்தைப் பற்றியும் கூட எந்தத் தகவலையும் வெளியிட்டது இல்லை. ஆனாலும், அவருக்கு … Read more

7 மாதம் வீட்டை விட்டு வெளியேறிய நபர்! திரும்பி எப்படி வந்தார் என்று பாருங்கள்!

பலரும் உடல் பருமன் குறித்து மிகவும் கவலையடைந்திருப்பீர்கள். உடல் பருமனை குறைக்க உணவு கட்டுப்பாட்டு, உடற்பயிற்சி என பலவற்றையும் நீங்கள் முயற்சித்திருப்பீர்கள். ஆனால், அவை எதுவும் உங்களுக்கு கைக்கொடுத்திருக்காது. எனவே, நீங்கள் மீண்டும் சோர்வடைந்து, உடல்நலத்தை பேண தவறிவிடுவீர்கள்.  அதேபோன்றுதான் அயர்லாந்தை சேர்ந்த ஒருவருக்கும் உடல் பருமனை குறைப்பதில் மோசமான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால், கடும் பின்னடைவுகளுக்கு பின்னரும் துவண்டு விடாமல் அவர் எடுத்த மாற்று முயற்சி அவரின் உடல் எடையை குறைப்பதில் எவ்வாறு பலனளித்தது என்று … Read more

கடுமையான கரோனா கட்டுப்பாடுகள்: அடுக்குமாடி கட்டிட தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு – சீன அதிபர் ஜின்பிங்குக்கு எதிராக மக்கள் போராட்டம்

ஷாங்காய்: சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் கரோனா ஊரடங்கு அமலில் இருந்த அடுக்குமாடி கட்டிட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இதனால் கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரும் போராட்டம் சீனா முழுவதும் பரவியது. சீனாவில் கரோனா தொற்று ஓயவில்லை. அங்கு இப்போது கரோனா தொற்று வேகம் எடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் சுமார் 40 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சீனாவின் பல பகுதிகளில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதிமுறைகள் அமலில் உள்ளன. … Read more

 சிவப்பு கிரக தினம்| Dinamalar

பூமியில் வசிப்பவர்கள் பல தலைமுறைகளாக நமது அடுத்த அண்டை கிரகத்தால் ஈர்க்கப்படுகிறார்கள். நாசா விண்வெளித் திட்டம் பல தசாப்தங்களாக அதைப் பற்றி மேலும் மேலும் அறியவும் முயன்று வருகிறது. சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் இந்த கிரகம் மேற்பரப்பில் துருப்பிடித்த இரும்பு காரணமாக சற்று சிவப்பு நிறத்தில் வானில் தோன்றுகிறது.சிவப்பு கிரக தினத்தின் வரலாறு 1964 ஆம் ஆண்டு நாசாவால் செவ்வாய் கிரகத்தை அடைந்த முதல் விண்கலமான மரைனர் 4 என்ற விண்கலம் ஏவப்பட்டதை நினைவுகூரும் வகையில் … Read more

வாடகைத் தாய் சேவையில் புதிய மாற்றம்; ரஷ்யா அதிரடி.!

கருப்பையில் குழந்தையைச் சுமக்க முடியாத நிலையில் இருக்கும் பெண்ணின் கருமுட்டை மற்றும் அவரது துணையின் விந்தணு இரண்டையும் எடுத்து உருவாக்கப்படும் கருவை, வேறொரு பெண் சுமந்து குழந்தை பெற்றுக் கொடுப்பார். அவர் வாடகைத் தாய் என்றழைக்கப்படுவார். குழந்தை இல்லாத தம்பதியினர் மற்றொரு பெண்ணின் மூலம் குழந்தை பெற்று எடுப்பது வாடகைத்தாய் முறை எனப்படுகின்றது. கற்பகால வாடகைத்தாய், மரபியல் வாடகைத்தாய் என வாடகைத்தாய் முறையானது இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. கற்பகால வாடகைத்தாய் முறையில் கருமுட்டை தாயிடம் இருந்தும், தந்தையிடமிருந்தும் … Read more

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்கிறார் எகிப்து அதிபர்

இந்திய குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல்-சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. எகிப்து அரபுக் குடியரசின் அதிபர் 2023ம் ஆண்டின் இந்திய குடியரசு தினத்தில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்வது இதுவே முதல் முறை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அல்-சிசிக்கு அனுப்பிய முறையான அழைப்பிதழை, கடந்த அக்டோபர் 16ம் தேதி அன்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எகிப்திய அதிபரிடம் அளித்தார் மேலும், இந்தியாவும் … Read more

ஏவுகணை விஞ்ஞானிகளுடனான ஆலோசனைக்கு மகளுடன் வந்த கிம் ஜாங் அன்..!

சியோல், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் கடந்த சில தினங்களுக்கு முன்பாக முதல் முறையாக தனது மகளை வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்தினர். தனது நாட்டைப்போலவே தனது தனிப்பட்ட விஷயங்கள் குறித்தும் ரகசியம் காத்து வரும் வடகொரியா அதிபர் கிம் ஜான் அன், முதல் முறையாக தனது மகளான ஜூ ஏவுடன் வருகை தந்தது உலக அளவில் கவனம் பெற்றது. வடகொரியாவின் எதிர்கால அரசியல் தலைவராக மகளை அறிமுகப்படுத்த தயார் செய்வதற்கான முன்னோட்டமாக கிம் ஜாங் அன் மகளுடன் … Read more

எங்கு போனாலும் இடிக்கிறது… பெரிய மார்பை குறைக்க நிதி திரட்டி வரும் பெண்

லண்டன், இங்கிலாந்து நாட்டின் தென்மேற்கில் வசித்து வருபவர் ஜாஸ்மின் மெக்லெட்சி (வயது 33). கேக், ரொட்டி தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரது கணவர் பால் வில்லியம்ஸ் (வயது 51). இந்த தம்பதிக்கு 5 வயதில் மகள் உள்ளது. கணவர் தரையில் விரிப்பு, கம்பளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளார். ஜாஸ்மின் சிறு வயதில் பள்ளிக்கு போகும்போதே உடல் பருமனுடன் காணப்பட்டு உள்ளார். அவருடன் படிக்கும் சக மாணவிகள் உடல் பருமனை விட அவரது பெரிய மார்பை … Read more

Covid New Wave: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! கோவிட் அலையால் சீனாவில் லாக்டவுன் அமல்

பெய்ஜிங்: சீனாவில் தொடர்ந்து நான்காவது நாளாக கோவிட் வழக்குகள் அதிக அளவில் பதிவாகியுள்ளன. சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் இன்று (நவம்பர் 27)) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, நேற்று (நவம்பர் 26) நாட்டில் அதிகபட்சமாக 39,791 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன. கண்டறியப்பட்ட வழக்குகளில், 3709 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தன, 36,082 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்த அறிகுறிகள் எதுவும் இருக்கவில்லை. தொடர்ந்து நான்காவது நாளாக அதிக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

சீனாவில் தொடர்ந்து 4-வது நாளாக புதிய உச்சம்; 40 ஆயிரம் நெருங்கிய கொரோனா பாதிப்பு

பீஜிங், சீனாவில் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலக நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றது. எனினும், கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளால் பிற நாடுகளை விட முன்பே பரவலை சீனா கட்டுப்படுத்தி இருந்தது. இந்நிலையில், மீண்டும் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 39,791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களில் 3,709 பேருக்கு அறிகுறி காணப்படுகிறது. … Read more