சீனாவில் தொடர்ந்து 4-வது நாளாக புதிய உச்சம்; 40 ஆயிரம் நெருங்கிய கொரோனா பாதிப்பு

பீஜிங், சீனாவில் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலக நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றது. எனினும், கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளால் பிற நாடுகளை விட முன்பே பரவலை சீனா கட்டுப்படுத்தி இருந்தது. இந்நிலையில், மீண்டும் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 39,791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களில் 3,709 பேருக்கு அறிகுறி காணப்படுகிறது. … Read more

அதிகமாக டிவி பார்த்த மகன்… விடிய விடிய பெற்றோர் கொடுத்த கொடூர தண்டனை…

மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதாக அவர்கள் பெற்றோர் கவலையடைந்துள்ளனர். பள்ளியில் கொடுக்கப்பட்ட வீட்டு பாடங்களை முடித்த உடன், இரவு 8.30 மணிக்கு தூங்க செல்ல வேண்டும் என அந்த சிறுவனக்கு அறிவுறுத்தியுள்ளனர்.  இருப்பினும், அந்த சிறுவன் தாங்கள் இல்லாத நேரங்களில், வீட்டுப்பாடங்களை முடிக்காமல், அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதை பெற்றோர்கள் கண்டுபிடித்துவிட்டனர். அவர்கள் வீட்டிற்கு வரும்போது, வீட்டுப்பாடங்களை முடிக்காமல் சிறுவன் தூங்கிவிடுபவதும் பெற்றோர்களுக்கு தெரியவந்தது.  பல … Read more

நிலவில் நாசாவின் ஆதிக்கத்திற்கு சவாலாக களமிறங்க சீனா திட்டம்

பீஜிங், பூமியில் மக்கள் தொகை பெருகி வரும் நிலையில், இடப்பற்றாக்குறையை போக்கும் வகையில் பூமி தவிர்த்து வேறு கிரகங்களில் மனிதர்கள் வசிப்பதற்கான சூழலை தேடும் ஆராய்ச்சியில் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றில், நிலவு மற்றும் பூமியின் அருகேயுள்ள செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வியலுக்கான சூழல் பற்றிய ஆராய்ச்சியாளர்களின் தேடல் நீண்டுள்ளது. இதன்படி, அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு நிலவுக்கு கடந்த 1972-ம் ஆண்டில் விண்வெளி வீரர்களை அனுப்பியது. அதன்பின் கடந்த 50 ஆண்டுகளாக நிலவுக்கு … Read more

ஊரடங்கு கட்டுப்பாட்டால் வெகுண்டெழுந்த மக்கள்; சீனாவில் நாடு முழுவதும் போராட்டம்.!

கொரோனா தொற்றின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவில், கடந்த சில தினங்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. சீனாவில் நேற்று 40 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி கடைபிடிக்கப்படுவதால், கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. அந்தவகையில் கொரோனா பரவல் காரணமாக சீனாவின் மேற்கு … Read more

அமெரிக்கா வரை சென்று தாக்கும் வடகொரியாவின் ஹ்வாசாங்-17 ஏவுகணை: கிம் பெருமிதம்

பியாங்கியாங்: உலகின் வலிமையான அணுசக்தி ஆற்றலை பெறுவதே தங்கள் நோக்கம் என்று வடகொரிய அதிபர் கிம் தெரிவித்துள்ளார். ஹ்வாசாங்-17 என்ற ஏவுகணை பரிசோதனையை வடகொரியா சமீபத்தில் வெற்றிகரமாக செய்து முடிந்தது. அந்நாட்டின் மிகப்பெரிய ஏவுகணை பரிசோதனையாக இது அறியப்படுகிறது. இந்நிலையில் இப்பரிசோதனையில் பங்கு கொண்ட அதிகாரிகளையும், விஞ்ஞானிகளையும் சந்தித்து கிம் வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேசும்போது, “ஹ்வாசாங்-17 அமெரிக்கா வரை செல்லும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் … Read more

எல்லாம் பொய்… மெஸ்ஸியை வீழ்த்திய சவுதி வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசா? அல் ஷெஹ்ரி பளீர்!

கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் 22வது ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் முன்னாள் சாம்பியன்களை கத்துக்கட்டிகள் வீழ்த்தியது பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதில் குறிப்பிடத்தக்கது லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா. குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்த அணி தனது முதல் போட்டியில் சவுதி அரேபியா உடன் மோதியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெஸ்ஸியின் கோல் முதல் பாதியில் கச்சிதமாக வந்து சேர்ந்தது. இதை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். ஆனால் இரண்டாவது பாதியில் இரண்டு … Read more

ஊரடங்கிற்கு எதிராக மக்கள் கோபம்| Dinamalar

பெய்ஜிங்: சீனாவில் கோவிட் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பரவலை கட்டுப்படுத்துவதற்கு எதிராக அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல நகரங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த படங்களும், வீடியோக்களும் அந்நாட்டு சமூக வலைதளங்களில் பரவுகிறது. உலகளவில் கோவிட் பரவல் குறைந்துள்ள நிலையில், அது தோன்றிய இடமாக கருதப்படும் சீனாவில் மட்டும் அதிகரித்து வருகிறது. கடந்த ஓரிரு நாட்களாக 30 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று வரை அங்கு கோவிட்டால் … Read more

விண்வெளியில் கருந்துளையின் ஒளி எதிரொலிகளை ஒலி அலைகளாக மாற்றிய நாசா| Dinamalar

வாஷிங்டன்: விண்வெளி ஆராய்ச்சியில் அறிவியலாளர்களுக்கு இன்று வரை மர்மமாக இருக்கும் கருந்துளை (Black Hole) பற்றி அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, புதிய தகவல்களை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய முயற்சியாக நாசா, கருந்துளையைச் சுற்றியுள்ள ஒளி எதிரொலிகளை ஒலி (சத்தம்) அலைகளாக மாற்றியுள்ளது. நமது பால்வெளி மண்டலத்தில் நிறைய கருந்துளைகள் உள்ளன. பால்வெளி மண்டலத்தில் உள்ள ‘பிளாக் ஹோல்’ எனப்படும் மிகப் பெரிய கருந்துளையின் படம் கடந்த மே மாதம் முதல் முறையாக … Read more

இந்தியா – நியூசி., மோதிய 2வது போட்டி மழையால் கைவிடப்பட்டது

ஹாமில்டன்: இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது ஒரு நாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 12.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால், போட்டி நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், 2வது ஒரு நாள் போட்டி கைவிடப்பட்டது. இரு … Read more

சீனாவில் தீவிர கரோனா கட்டுப்பாடுகள் – அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக பல்வேறு நகரங்களில் போராட்டம்

ஷாங்காய்: சீனாவில் கரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக பல்வேறு நகரங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜின்ஜியாங் மாகாணத்தின் தலைநகரான உரும்கியில் உள்ள உயரமான ஒரு கட்டிடத்தில் கடந்த வியாழன் அன்று ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கட்டிடம் பகுதியளவு பூட்டப்பட்டதால் உள்ளே இருந்தவர்கள் சரியான நேரத்தில் தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் … Read more