ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் – இந்தியா சிறப்பாக செயல்பட்டதற்கு உலக நாடுகள் பாராட்டு

ஐ.நா: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிக் காலத்தில், இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்டதாக உறுப்பு நாடுகள் பாராட்டு தெரிவித்தன. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா 2 ஆண்டுகளுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டது. தற்போது தனது பதவிக்காலத்தை இந்த மாதத்துடன் நிறைவு செய்தது. இந்த 2 ஆண்டு காலத்தில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா இரண்டு முறை மாதாந்திர தலைமை பொறுப்பையும் ஏற்றது. சுழற்சி முறையில் வரும் இந்த பொறுப்பை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்திலும், … Read more

இந்திய ஓட்டுநருக்கு துபாய் லாட்டரி சீட்டில் ரூ.33 கோடி பரிசு..!

துபாயில் பணியாற்றி வரும் இந்திய ஓட்டுநருக்கு அந்நாட்டின் லாட்டரி சீட்டு குலுக்கலில் 33 கோடி ரூபாய் பரிசாக கிடைத்து. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்தியாவிலிருந்து பணிக்குச் சென்ற அஜய்ஓகுலா, அங்குள்ள நகைக்கடையில் மாதம் 3 ஆயிரத்து 200 திர்ஹம் சம்பளத்தில் பணியாற்றி வரும் நிலையில் தற்போது 15 மில்லியன் திர்ஹம் பரிசாக கிடைத்துள்ளது. இதனை தன்னால் நம்ப முடியவில்லையென தெரிவித்த அஜய்ஓகுலா, பெற்றோரிடம் தெரிவித்த போது அவர்களும் இதனை நம்பவில்லையென கூறியதோடு, ஊருக்கு திரும்பி அறக்கட்டளை … Read more

என்ஜிஓ நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிய தடை: தலிபான் அரசு அதிர்ச்சி உத்தரவு..!!

காபூல், ஆப்கானிஸ்தானில் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆட்சி செய்துவரும் தலிபான்கள் அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக, அந்த நாட்டின் பெண்கள் பாலின பாகுபாட்டால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்தனர். அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த உத்தரவு செல்லும். அடுத்த உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் இந்த தடைக்கு எதிராக மாணவ, மாணவிகள் மற்றும் … Read more

ஃபிஜி நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றார் சிதிவேனி ரபுகா

ஃபிஜி நாட்டின் புதிய பிரதமராக சிதிவேனி ரபுகா பொறுப்பேற்றுள்ளார். இதன் மூலம் கடந்த 2006-ம் ராணுவப் புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஃபிராங்க் பைனிமராமாவின் 16 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 28 ரபுகாவிற்கு ஆதரவாகவும், 27 பேர் முன்னாள் பிரதமர் ஃபுராங்க் பைனிமராமவிற்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட கட்சியின் தலைவரான ரபுகா, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். Source link

பாக்.,கில் தற்கொலை படை தாக்குதல் பயங்கரவாதிகள் உட்பட மூவர் பலி | Three killed including terrorists in suicide squad attack in Pak

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில், இரண்டு பயங்கரவாதிகள், ஒரு போலீஸ்காரர் பலியாகினர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில், முக்கிய ராணுவத் தளம் அமைந்துள்ள ராவல்பிண்டி அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில், நேற்று முன்தினம் தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தினர். போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, காரில் வந்த பெண் உட்பட இரு பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில், அவர்களும், போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள தெஹ்ரீக் – … Read more

ரஷியாவில் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து; 22 பேர் உடல் கருகி பலி

சட்டவிரோதமாக இயங்கியது ரஷியாவின் தென்மேற்கு பகுதியில் சைபீரியா பிராந்தியத்தில் உள்ள கெமரோவோ நகரில் முதியோர் இல்லம் ஒன்று இயங்கி வந்தது. தனியாருக்கு சொந்தமான இந்த முதியோர் இல்லம் முறையான அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கி வந்ததாக கூறப்படுகிறது. 2 மாடி கட்டிடத்தில் செயல்பட்ட இந்த முதியோர் இல்லத்தில் ஏராளமான முதியவர்கள் தங்கியிருந்தனர். இந்தநிலையில் முன்தினம் இரவு இந்த முதியோர் இல்லத்தில் திடீரென தீப்பிடித்தது. கண் இமைக்கும் நேரத்தில் 2 தளங்களிலும் பரவிய தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது. ஆழ்ந்த … Read more

அமெரிக்காவில் குளிர்கால சூறாவளி : மைனஸ் 48 டிகிரி! | Winter storm in America: minus 48 degrees!

வாஷிங்டன், :மைனஸ் 48 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை என்ற வார்த்தையை கேட்கும்போதே முதுகுத்தண்டை உறைய வைக்கும். இந்த வெப்பநிலை அமெரிக்காவில் நேற்று முன்தினம் பதிவானது. இங்கு, குளிர்கால சூறாவளி ஏற்பட்டு, நாடு முழுதும் பெரும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் தொகையில், 60 சதவீதம் பேர், அதாவது, 20 கோடி பேருக்கு கடும் குளிர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது; 15 லட்சம் வீடுகள், அலுவலகங்களில் மின்சார வசதி இல்லை. பூஜ்ஜியம் டிகிரி செல்ஷியஸ் என்பது, உறைபனி துவங்கும் … Read more

ஆப்கானில் உயர்கல்வி தடைக்கு எதிராக பெண்கள் போராட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டியடிப்பு

காபூல், தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில், பெண்களுக்கு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலவும் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது. இதற்கு மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் என பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். மேலும் சர்வதேச அளவிலும் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில், உயர்கல்வி தடைக்கு எதிராக பெண்கள் இன்று ஹெராத் நகரில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மாகாண ஆளுநரின் … Read more