உலகக்கோப்பையுடன் தாயகம் திரும்பினார் மெஸ்ஸி.. வெற்றிவாகை சூடிய வீரர்களை வரவேற்க தேசிய விடுமுறை அறிவிப்பு!

36 ஆண்டுகள் காத்திருப்பிற்குப் பின், அர்ஜென்டினாவிற்கு கால்பந்து உலகக்கோப்பையை வென்றுக்கொடுத்த கேப்டன் மெஸ்ஸி, வெற்றிக்கோப்பையை ஏந்தியபடி, தாயகம் திரும்பினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடிய அர்ஜெண்டினா வீரர்களை வரவேற்க அங்கு தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த கால்பந்து ஜாம்பவான் மரடோனா பாணியில், அதிபர் மாளிகைக்கு வருகை தந்து வெற்றிக்கோப்பையுடன் போஸ் கொடுக்குமாறு அணி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், அதனை நிராகரித்து, மக்கள் மத்தியில் கொண்டாட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. Source … Read more

எலன் மஸ்கிற்கு அதிர்ச்சி தந்த டுவிட்டர் பயனாளர்கள்| Dinamalar

வாஷிங்டன்:’டுவிட்டர்’ சமூக வலைதளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டுமா என பயனாளர்களிடம் கருத்துக்கணிப்பை நடத்திய எலன் மஸ்கிற்கு, பயனாளர்கள் அதிர்ச்சியை பரிசாக கொடுத்துள்ளனர். தலைமைப் பொறுப்பிலிருந்து விலகும்படி, 57 சதவீதம் பேர் அவரை வலியுறுத்தி உள்ளனர். ‘டெஸ்லா’ நிறுவனத் தலைவரான எலன் மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் பங்குகளை அதிகளவில் பெற்று அதன் உரிமையாளரானார். இதைத் தொடர்ந்து டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்ற மஸ்க், நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். அவரது … Read more

அப்பா வருகிறார், சீக்கிரம் படி… சிறுமியை அறிவுறுத்திய புத்திசாலி நாய்; வைரலாகும் வீடியோ

ஷாங்காய், பொதுவாக, மனிதனின் உற்ற தோழனாக, நன்றி உணர்வுக்கு எடுத்துக்காட்டாக நாய் இருந்து வருகிறது. மனிதர்களுடன் நட்புடன் பழகும் குணம் கொண்டதுடன், அவர்களது செல்ல பிராணியாகவும் பலரால் விரும்பி வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், படிக்காமல் டி.வி. பார்த்து கொண்டு இருந்த ஒரு சிறுமியை செல்ல பிராணியான நாய் ஒன்று, சிறுமியின் அப்பா வருகையை அறிந்து, படிக்கும்படி அறிவுறுத்திய வீடியோ வைரலாகி வருகிறது. யோக் என்ற பெயரில், பாட்னர்ஸ் இன் கிரைம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த … Read more

‘லைக்’ வாங்குவதில் ரொனால்டோ சாதனையை முறியடித்தார் மெஸ்ஸி

உலகக்கோப்பையை ஏந்தியபடி, இன்ஸ்டாகிராமில் மெஸ்ஸி பதிவேற்றிய புகைப்படம், ஐந்தரை கோடி லைக்குகளை பெற்றுள்ளது. விளையாட்டு வீரர் ஒருவர் பதிவேற்றிய புகைப்படத்திற்கு இவ்வளவு லைக்-கள் கிடைப்பது, இதுவே முதல்முறையாகும். இதற்குமுன், லூயி வுய்டோன் ஆடை நிறுவன விளம்பரத்திற்காக மெஸ்ஸியுடன் செஸ் விளையாடுவதுபோல் கிறிஸ்டியானோ ரொனால்டோ பதிவேற்றிய புகைப்படம், நான்கே கால் கோடி லைக்குகளை பெற்றிருந்தது அதிகப்பட்சமாகக் கருதப்பட்டது. Source link

கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; வீடுகள் குலுங்கின, ஜன்னல்கள் உடைந்தன

வாஷிங்டன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியில் ஹம்போல்ட் கவுன்டி பகுதியில் யுரேகா என்ற இடத்திற்கு அருகே இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் 16.1 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. பெர்ன்டேல் என்ற பகுதியில் இருந்து மேற்கே-தென்மேற்கே 7.4 மைல்கள் பரப்பளவிற்கு நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோரின் மின் வினியோகம் … Read more

நீகாட்டா மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு – போக்குவரத்து பாதிப்பு

ஜப்பானின் வடக்கு மாகாணமான நீகாட்டாவில் கடும் பனிப்பொழிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பனிப்பொழிவின் காரணமாக ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்ட நிலையில், மக்கள் மாற்று போக்குவரத்துக்காக பேருந்துகளை நாடியதால், நீகாட்டா பேருந்து நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சாலைகள் மற்றும் நடைபாதைகள் பனிபடர்ந்து வழுக்கும் நிலையில் இருந்ததால், பயணிகள் சவாலான சூழலை எதிர்கொண்டனர். கடந்த சில நாட்களாக ஜப்பானின் சில பகுதிகளில் வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   Source link

சீனாவில் கொரோனா மரணங்களால் குவியும் சடலங்கள் : உலக நாடுகளுக்கு எச்சரிக்கை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங் : சீனாவில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை தளர்த்தியதன் எதிரொலியாக அங்கு தொற்று பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமெடுத்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவது உலக நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில், கடந்த 2019-ம்ஆண்டு இறுதியில் வூஹான் நகரில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா தொற்று, உலக நாடுகளுக்கு பரவியது.தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால், பெருந்தொற்றில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீண்டு வருகின்றன. இந்நிலையில், … Read more

எனது பதவிக் காலத்தில் இந்தியாவுடனான உறவை மேம்படுத்த விரும்பினேன் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், தனது பதவிக் காலத்தில் இந்தியாவுடனான உறவை மேம்படுத்த விரும்பியதாகவும், ஆனால் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது தடையாக அமைந்ததாகவும் தெரிவித்தார். லாகூரில் உள்ள ஜமான் பூங்காவில் உள்ள அவரது இல்லத்தில் வெளிநாட்டு செய்தியாளர்கள் சந்திப்பின் போது இம்ரான் கான் கூறியதாவது:- எனது மூன்றரை ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவுடனான உறவை மேம்படுத்த விரும்பினேன், ஆனால் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் மற்றும் ஜம்மு காஷ்மீர் சிறப்பு … Read more

பெருவில் போலீசாருடனான மோதலில் 3 பேர் உயிரிழப்பு..!

தென் அமெரிக்க நாடான பெருவில் போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். பெரு அதிபராக இருந்த பெட்ரோ காஸ்டிலோ, கடந்த 7ம் தேதி, பதவி நீக்கம் செய்யப்பட்டு, கிளர்ச்சி மற்றும் சதி குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பெருவில் மத்திய பகுதியிலுள்ள பிச்சானாகி பாலத்தில் போராட்டக்காரர்கள் வைத்த தடுப்புகளை, போலீஸார் அகற்றியதோடு கண்ணீர்புகை குண்டுகளையும் வீசினர். அப்போது, இருதரப்பினருக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் 9 போலீஸார் உட்பட … Read more

சீனா கொரோனா பாதிப்பு: லட்சக்கணக்கானோர் உயிரிழக்க வாய்ப்பு; உலக அளவில் மீண்டும் ஒரு எச்சரிக்கை

பீஜிங்: சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தினமும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தியதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதன் பிறகு சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. கொரோனா தொற்று தொடர்புடைய உயிரிழப்புகளும் உயர்ந்து வருவதாக தகவல் வெளியானது. பிஎப் 7 எனப்படும் இந்த வைரஸ் மற்ற இடங்களில் பரவுவதை விட சீனாவில் வேகமாகப் பரவுகிறது. … Read more