பல்கலைக்கழகத்தில் போலீஸ் அதிகாரியின் மகன் துப்பாக்கி சூடு; 2 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் இன்று (அந்நாட்டு நேரப்படி) காலை வழக்கம்போல் வகுப்பறையில் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று கொண்டிருந்தனர். காலை 11.50 மணியளவில் பல்கலைக்கழகத்திற்குள் திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. மாணவன் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினான். இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், துப்பாக்கி சூடு நடத்திய மாணவனை சுட்டு வீழ்த்தினர். துப்பாக்கி சூடு நடத்தியது … Read more

என்ஐஏவால் தேடப்படும் பயங்கரவாதி ‘ஹேப்பி’ பாசியா அமெரிக்காவில் கைது!

புதுடெல்லி: பஞ்சாபில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும், இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியான ஹேப்பி பாசியாவை அமெரிக்க போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். சண்டிகரில் செப்டம்பர் 2024 இல் நடந்த குண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடைய ஹேப்பி பாசியா என்று அழைக்கப்படும் ஹர்ப்ரீத் சிங்குக்கு எதிராக, கடந்த ஜனவரி மாதம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை என்ஐஏ பிறப்பித்தது. அதாவது, ஓய்வுபெற்ற பஞ்சாப் காவல்துறை அதிகாரியின் வீட்டை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான பாப்பர் … Read more

“சீனாவுடனான வரிகள் முடிவுக்கு வரக்கூடும்” – ட்ரம்ப் சமிக்ஞை

வாஷிங்டன்: சீனா மீதான வரிவிதிப்பு நடவடிக்கை முடிவுக்கு வரக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தையும் அவர் விவரித்துள்ளார். கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், உலகின் பல்வேறு நாடுகள் அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரி விதிப்பதாகவும், இனி தங்கள் நாடும் பரஸ்பர வரியை விதிக்கும் என்றும் அறிவித்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக கடந்த 2-ம் தேதி இந்தியா, சீனா, இங்கிலாந்து, கனடான, மெக்சிகோ உட்பட … Read more

ப்ளோரிடா பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி; 6 பேர் காயம்

ப்ளோரிடா: அமெரிக்காவின் ப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர். 6 பேர் காயமடைந்தனர். இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறை தரப்பில், ப்ளோரிடா பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் இருவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் பல்கலை. மாணவர்கள் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும் … Read more

புத்தாண்டை முன்னிட்டு மியான்மரில் அரசியல் கைதிகள் 22 பேர் உட்பட 4,900 பேர் விடுதலை

நேபிடா: பர்மிய புத்தாண்டை முன்னிட்டு சிறையில் உள்ள அரசியல் கைதிகள் 22 பேர் உட்பட 4,900 பேருக்கு மியான்மர் ராணுவ அரசின் தலைவர் மின் ஆங் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளார். மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டிலிருந்து ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூ கி சிறையில் அடைக்கப்பட்டார். மியான்மர் தற்போது உள்நாட்டு போரை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இங்கு கடந்த மாதம் 28-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி … Read more

காங்கோவில் படகு விபத்து: 50 பேர் பலியான சோகம்

மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் வடமேற்கு பகுதியில் மடான் குமு துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் இருந்து போலோம்பா பகுதிக்கு ஒரு மோட்டார் படகில் 400-க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர். பன்டாக்கா பகுதியில் படகு சென்று கொண்டிருந்த போது படகில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. படகில் பயணம் செய்தவர்கள் தீ விபத்தில் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்தனர். இதில் படகு ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு … Read more

திருநங்கைகளை பெண்களாக வரையறுக்க முடியாது – இங்கிலாந்து கோர்ட்டு தீர்ப்பு

லண்டன், அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அங்கு 3-ம் பாலினத்தவர்கள், ஓரின சேர்க்கையாளர்கள் உள்ளிட்டோருக்கு தடை விதித்தார். மேலும் அவர்களை நாட்டைவிட்டும் வெளியேற்றப்படுவார்கள் என தெரிவித்தார். இதனால் பெரும்பாலான திருநங்கைகள், ஓரின சேர்க்கையாளர்கள் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் புகுந்தனர். இதனால் இங்கிலாந்தில் தற்போது திருநங்கைகள் மக்கள்தொகை எகிறி வருகிறது. இங்கிலாந்தில் திருநங்கைகளுக்கு சட்டபூர்வமாக கடந்த 2010-ம் ஆண்டு அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. ஆனால் அவர்களை தனி பாலினம் என … Read more

உலகின் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியல்: இந்தியர்களுக்கு இடம் இல்லை

வாஷிங்டன், சர்வதேச அளவில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள், ஏற்படுத்த கூடியவர்கள், பிரபலங்கள் என டாப் 100 பேரை ஒவ்வொரு ஆண்டும் பிரபல ஆங்கில பத்திரிக்கையான டைம் மேகசின் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், 2025 ஆண்டுக்கான உலகின் செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் லிஸ்டில் இந்தியர்கள் யாரும் இடம்பெறவில்லை. இந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், முகம்மது யூனுஸ், டெஸ்லா நிறுவன சி இ ஒ எலான் மஸ்க் உள்ளிட்டவர்கள் … Read more

ரஷியா: நவால்னி கூட்டாளிகளுக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை – மாஸ்கோ கோர்ட்டு தீர்ப்பு

மாஸ்கோ, ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் நவால்னி. ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக செயல்பட்டதாகவும் அரசை கவிழ்க்க சதி தீட்டி வருவதாகவும் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் சிறையில் மர்மமான முறையில் நவால்னி உயிரிழந்தார். சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவருடைய மனைவி சர்வதேச கோர்ட்டில் முறையிட்டு உள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்தநிலையில் ரஷியாவில் நவால்னியுடன் தொடர்பில் இருந்தவர்களை அந்த நாட்டு போலீசார் கைது … Read more

காசா போர் எதிரொலி; இஸ்ரேல் பயணிகள் மாலத்தீவிற்குள் நுழைய தடை

மாலே, இஸ்ரேல்-காசா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முழுமையாக ஒழிக்கும் நோக்கிலும் காசா முனையில் இஸ்ரேல் தொடர்ந்து தரைவழி, வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த போாில் பாலஸ்தீனத்தை சேர்ந்த அப்பாவி பொதுமக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். 2 ஆண்டுகளுக்குமேல் நடைபெற்றுவரும் போரில், காசாவில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆயிரமாக அதிகரித்துள்ளது. பாலஸ்தீன மக்கள் மீதான தாக்குதல்களுக்கு … Read more