நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஓரியன் விண்கலம் இன்று பூமிக்கு திரும்புகிறது

வாஷிங்டன், நிலவை ஆய்வு செய்வதற்காக நாசாவின் ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம் கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் நவம்பர் 25ம் தேதி முதல் சந்திரனை சுற்றி ஆய்வு செய்தது. மிக அருகில் நிலவின் புகைப்படங்களையும் எடுத்து அனுப்பியது. இந்த நிலையில் ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம் நிலவில் தனது பணிகளை முடித்துக் கொண்டு அதன் சுற்றுப்பாதையில் இருந்து வெளியேறி கடந்த வாரம் பூமிக்கு திரும்ப தொடங்கியது. இன்று இரவு 11.10 … Read more

ரஷியா ட்ரோன் தாக்குதல்: ஒடேசா நகர மக்கள் மின்சாரம் இன்றி தவிப்பதாக உக்ரைன் அதிபர் கவலை

கீவ், தனது அண்டை நாடான உக்ரைனை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்கிற நோக்கில் அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி போரை தொடங்கியது. மிகப்பெரிய படைபலத்தின் மூலம் உக்ரைனை எளிதில் அடிபணிய வைத்துவிடலாம் என எண்ணி போரை தொடங்கிய ரஷியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் ராணுவம் ரஷிய படைகள் துணிவுடன் எதிர்த்து நிற்கிறது. அதே வேளையில் ரஷியாவும் போரில் இருந்து பின்வாங்குவதாக … Read more

ஜி-7 நாடுகளின் எண்ணெய் விலை உச்சவரம்பு முடிவுக்கு இந்தியா ஆதரவில்லை; ரஷியா வரவேற்பு

மாஸ்கோ, உக்ரைனில் ராணுவ நடவடிக்கை பெயரில் ரஷியா போர் தொடங்கியது முதல் சர்வதேச அளவிலான எரிபொருள் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ரஷியாவை வழிக்கு கொண்டு வர அமெரிக்கா உள்பட நாடுகள் பொருளாதார தடை விதித்தும் பலனில்லை. இதனால், ரஷிய இறக்குமதி எண்ணெய்க்கு விலை உச்சவரம்பு நிர்ணயிப்பது என்று கடந்த செப்டம்பரில் ஜி-7 நாடுகள் முடிவு செய்தன. இதன்படி, இந்த முடிவை ஐரோப்பிய ஒன்றியமும் அப்படியே ஏற்கிறோம் என கூறியது. இதனை தொடர்ந்து, ஜி-7 … Read more

விமர்சனத்துக்கு உள்ளாகும் ஹாரி – மேகன் ஆவணத் தொடர்

நெட்பளிக்ஸில் வெளியாகியுள்ள ஹாரி – மேகன் மார்கல் தொடர்பான ஆவணத் தொடர் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பல்வேறு எதிர்வினைகள் இந்த ஆவணத் தொடருக்கு வந்து கொண்டிருக்கிறது. பிரிட்டன் இளவரசர் ஹாரியை திருமணம் செய்ததன் மூலம் இங்கிலாந்தின் இளவரசியான முதல் கருப்பின பெண் என்ற பெருமையை மேகன் பெற்றிருந்தார். எனினும், அரச குடும்பத்தினரும், பிரிட்டன் ஊடகங்களும் கனிவான முகத்தை மேகனுக்கு காட்டவில்லை. பிரிட்டன் ஊடகங்களால் நிறம் சார்ந்து அவர் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தார். ஊடகங்களால் டயானாவுக்கு என்ன நடந்ததோ, … Read more

வடக்கு பிரான்சில் ஜெர்சி தீவில் குண்டுவெடிப்பு: 3 பேர் பலி; பலர் மாயம்

லண்டன், வடக்கு பிரான்சின் கடலோர பகுதியில் அமைந்த ஜெர்சி தீவின் தலைநகர் செயிண்ட் ஹெலியரில் உள்ள துறைமுகம் அருகே அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி ஜெர்சி மாகாண தலைமை காவல் அதிகாரி ராபின் ஸ்மித் கூறும்போது, குண்டுவெடிப்பில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். 12 பேர் வரை காணாமல் போயுள்ளனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து மீட்பு குழுவினர் தொடர்ச்சியாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். 20 முதல் 30 பேர் … Read more

இந்தியாவின் நிலைப்பாட்டை வரவேற்கும் ரஷ்யா; ஜி7 நாடுகள் கடுப்பு..!

உக்ரைன் நேட்டோவில் இணைய அதிபர் ஜெலன்ஸ்கி நடவடிக்கைகள் மேற்கொண்டதால், உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. தாக்குதலை தொடுத்த ரஷ்யா, இரண்டே நாளில் உக்ரைன் தலைநகர் கீவ் வரை முன்னேறியது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா ஆயுதங்களை தாராளமாக உக்ரைனுக்கு வழங்க ஆரம்பித்தது. அதேபோல் பல்வேறு நேட்டோ உறுப்பு நாடுகளும் தாராளமாக ஆயுதங்களை வழங்கின. இதனால் கடந்த 9 மாதங்களாக போர் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. உக்ரைன் – ரஷ்யா போர் … Read more

நவீன ஆயுதங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் ரஷ்யா; மூன்றாம் உலகப்போர் மூளுமா.?

உக்ரைன் நேட்டோவில் இணைய அதிபர் ஜெலன்ஸ்கி நடவடிக்கைகள் மேற்கொண்டதால், ற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தை உக்ரைன் மீற முயற்சித்த நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தனது படைகளை உக்ரைன் எல்லையில் குவித்து வந்த நிலையில், அந்நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது. அதன்படி உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. தாக்குதலை தொடுத்த ரஷ்யா, இரண்டே நாளில் உக்ரைன் தலைநகர் கீவ் வரை முன்னேறியது. … Read more

தாய்மார்களுக்கு முன்னுதாரணம்… சர்வதேச விருதை வென்ற தமிழக பெண்!

திருமணம் ஆகி குழந்தைகளுக்கு தாயான பெண்கள் அழகு துறையில் சாதிக்க முடியுமா? என்ற கேள்வி பலருக்கு எழுவது இயல்புதான். ஆனால், அதில் சாதிக்க முடியும் என்பதற்கு சிறந்த  உதாரணமாக திகழ்கிறார், பிளாரன்ஸ் ஹெலன் நளினி. திருமணமாகி இரு பெண்களுக்கு தாயான பிளாரன்ஸ் ஹெலன் நளினி இன்று சர்வதேச அழகி பட்டத்தை வென்றுள்ளார்.  சாதிப்பதற்கு வானமே எல்லை என்பதை போல் பிளாரன்ஸ் ஹெலன் நளினியின் சாதனை பயணம் நீண்டு கொண்டே செல்கிறது. சாதாரண நடுத்தர குடும்பத்தில் கோவையில் பிறந்த … Read more

ரசிகைகளிடம் பெற்ற 678 பிரா… உள்ளாடைகளை வாங்கும் ராப் பாடகர் – ஏன் தெரியுமா?

26 வயதான அமெரிக்க ராப் பாடகர் யுங் கிரேவி என்ற மாத்யூ ரேமண்ட் ஹௌரி, 2017ஆம் ஆண்டு முதல் பிரபலமாக அறியப்படுகிறார். மூன்று ஆல்பம் பாடல்கள், 7 சர்வதேச இசை சுற்றுப்பயணம் என யுங் கிரேவி பல்வேறு வகையில் மக்களிடம் சென்றடைந்துள்ளார். இவரின் இசை நிகழ்ச்சிகளுக்கு ஆண் ரசிகர்களை காட்டிலும் பெண் ரசிகர்கள் அதிகமாக வருவார்கள். தற்போது, அவர் வித்தியாசமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அதாவது, அவரது இசை நிகழ்ச்சி மேடையை நோக்கி சுமார் 159 ப்ராக்கள் … Read more

 உலக கோப்பை கால்பந்து கால் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வெற்றி| Dinamalar

கத்தார்: கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடரில் தற்போது காலிறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு அல்பேயத் ஸ்டேடியத்தில் பிரான்ஸிற்கும் இங்கிலாந்திற்கும் நடந்த கால் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் 2க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தினை வென்றது. பிரான்ஸின் ஏரெலியன் ச்வாமெனி மற்றும் ஒலிவியர் கிரவ்ட் தலா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர். அரை இறுதியில் பிரான்ஸ் அணி மொராக்காவை எதிர்கொள்ள உள்ளது கத்தார்: கத்தாரில் … Read more