கலிபோர்னியாவில் நிலநடுக்கம்: 2 பேர் பலி: பலர் காயம்

நியூயார்க்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் கடலோரப் பகுதிகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. நில நடுக்கத்துக்கு இதுவரை 2 பேர் பலியாகி உள்ளனர். 11 பேர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், ”கலிபோர்னியா மாகாணத்தில் வடக்கு கடலோரப் பகுதிகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியது. நிலநடுக்கத்தின் ஆழம் 16 கிமீ ஆகும். சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்துக்கு இதுவரை 2 பேர் பலியாகி உள்ளனர். 11 … Read more

முட்டாளை கண்டறிந்த பின் பதவி விலகல்: எலான் மஸ்க் தகவல்!

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 30 கோடிக்கும் மேலாக பயனர்களை கொண்டுள்ள சமூக வலைதளமான ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் எலான் மஸ்க், தான் பதவி விலக வேண்டுமா என கேள்வி எழுப்பி வாக்கெடுப்பு ஒன்றை ட்விட்டரில் நடத்தினார். அதன் முடிவுகளுக்கு தான் கட்டுப்படுவதாகவும் அவர் அறிவித்திருந்தார். எலான் மஸ்க் நடத்திய ட்விட்டர் வாக்கெடுப்பில் 17,502,391 பேர் வாக்களித்துள்ளனர். எலான் மஸ்க் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே பலரது விருப்பமாக இருக்கிறது என்பது வாக்கெடுப்பு முடிவில் தெரியவந்துள்ளது. … Read more

ரஷ்யா – உக்ரைன் எல்லையில் எரிவாயு குழாயில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலி..!

மேற்கு ரஷ்யாவில் இருந்து ஐரோப்பியாவிற்கு இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் குழாயின் ஒருபகுதி வெடித்து சிதறியதில், மூன்று பேர் உயிரிழந்தனர். சுவஷியா பிராந்தியத்தில் உள்ள பைப்லைனில் பழுது பார்க்கும் பணி நடைபெற்றபோது தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே, எரிவாயு குழாயில் வெடிப்பு ஏற்பட்ட போதும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதியில் பாதிப்பு ஏதும் இல்லையென்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.  Source link

ராஜினாமா செய்கிறேன்; ஒரு முட்டாளை தேடிப்பிடிப்பேன் – எலான் மஸ்க்

சான் ஃப்ரான்சிஸ்கோ: ட்விட்டர் சிஇஓ பதவியை ராஜினாமா செய்வதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ட்விட்டர் சிஇஓ பதவியை நான் விரைவில் ராஜினாமா செய்கிறேன். அந்த பதவிக்கு ஒரு முட்டாளை தேடிப்பிடித்துவிட்டு ராஜினாமா செய்வேன். அதன் பின்னர் மென்பொருள், சர்வர் அணிகளை மட்டும் ஏற்று நடத்துவேன்” என்று பதிவிட்டுள்ளார். எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு 2 மாதங்களாக சிஇஓ வாக செயல்பட்டு வருகிறார். நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஊழியர்கள் … Read more

ட்விட்டர் சி.இ.ஓ பொறுப்பில் இருந்து விலக இருப்பதாக எலான் மஸ்க் அறிவிப்பு..!

ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து விலக இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், புதிய நபர் கிடைத்த பிறகு தனது பொறுப்பை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், அதன் பிறகு சாஃப்ட்வேர் மற்றும் சர்வர்ஸ் குழுக்களை இயக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து தான் விலக வேண்டுமா என எலான் மஸ்க் நடத்திய வாக்கெடுப்பில் 57.5 சதவீதம் பேர் பதவி விலக வேண்டும் என்றும், 42.5 … Read more

சீன கரோனா நிலவரம் | அண்மைத் தகவல் ஐந்து

பீஜிங்: சீனாவில் மீண்டும் கரோனா அதிகரித்து வருகிறது. நேற்று (செவ்வாய்க்கிழமை) 3,101 பேருக்கு அறிகுறிகளுடன் தொற்று உறுதியானது. அதற்கு முந்தைய நாளில் 2,722 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இப்போதைக்கு சீன மெயின்லான்டில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 276 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தேசிய சுகாதார ஆணையத்தின் படி, நேற்று புதிதாக கரோனா பலி ஏதும் பதிவாகவில்லை. திங்கள்கிழமையன்று 5 பேர் கரோனா தொற்றால் பலியாகினர். தலைநகர் பீஜிங்கில் மட்டும் கடந்த 2 நாட்களில் 7 … Read more

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து விலகுகிறார் எலான் மஸ்க்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலக போவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். மென்பொருள் மற்றும் சர்வர் குழுக்களை மட்டும் வழி நடத்தப் போவதாக கூறியுள்ளார். டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க், தலைமை பொறுப்பை வகித்து வந்தார். அந்த நிறுவனத்தில் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்திய அவர், தலைமை பொறுப்பை தொடர்ந்து வகிக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து தன்னை பின்பற்றும் 12.2 கோடி … Read more

திடீரென ஏற்பட்ட பேரலையால் தாய்லாந்து போர்க் கப்பல் மூழ்கி விபத்து..!

தாய்லாந்து நாட்டின் தென்கிழக்கு கடற்கரையில் மூழ்கிய போர்க் கப்பலில் இருந்து 6 மாலுமிகளின் சடலங்களை மீட்புக் குழுவினர் மீட்டனர். அந்தக் கடல் பகுதியில் (HTMS Sukhothai) ஹெச்.டி.எம்.எஸ் சுகோதாய் போர்க் கப்பல் திடீரென கடலில் ஏற்பட்ட பேரலையால் ஞாயிற்றுக்கிழமை இரவு கவிழ்ந்தது. ஏற்கெனவே விபத்துப் பகுதியிலிருந்து 76 மாலுமிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். இதுவரை 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 23 பேர் மாயமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. Source … Read more

பெல்ஜியத்தில் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு கிறிஸ்துமஸை முன்னிட்டு பரிசுப் பெட்டகம்..!

பெல்ஜியத்தில் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு கிறிஸ்துமஸை முன்னிட்டு பரிசுப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன. 75 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள Pairi Daiza உயிரியல் பூங்காவில் பல்வேறு வகையான 7 ஆயிரம் விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அவைகளுக்கு பிடித்த பழங்கள், கீரைகள், மீன்கள் வைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் பரிசுப் பெட்டகங்கள் அனைத்து விலங்குகளுக்கும் வழங்கப்பட்டன. பரிசுப் பெட்டகங்களை திறந்து அதில் இருந்த உணவுகளை அனைத்து விலங்குகளும் ஆர்வமுடன் உண்டு மகிழ்ந்தன. Source link

சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் மருத்துவமனைகள், மயானங்கள் நிரம்பி வருகின்றன..!

சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள், தகனக்கூடங்கள் நிரம்பி வருவதாக கூறப்படுகிறது. பெய்ஜிங் மக்கள் தொகையில் 70 சதவீதத்திற்கும் அதிமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். பொதுமுடக்கம் மற்றும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதில் இருந்து கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. சீனாவில் மொத்த மக்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் அதாவது பூமியின் மக்கள் தொகையில் 10 சதவீதத்தினர் அடுத்த 90 நாட்களில் தொற்றால் பாதிக்கப்படுவார்கள் எனவும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் … Read more