உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி குறித்து நேற்று கூகுளில் அதிகம் பேர் தேடல் – சுந்தர் பிச்சை வியப்பு..!
உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி தொடர்பாக நேற்று கூகுளில் தேடப்பட்டதைப்போல், கடந்த 25 ஆண்டுகளில் வேறெதுவும் தேடப்படவில்லை என அதன் சி.இ.ஒ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். உலகின் ஒட்டுமொத்த கவனமும் கால்பந்து இறுதிப்போட்டியின் மீதிருந்ததாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தியாவில், இந்தாண்டு, கூகுளில் அதிகம் தேடப்பட்ட தலைப்புகளில், கால்பந்து உலகக்கோப்பை மூன்றாவது இடத்தில் உள்ளது. Source link