ஜப்பானுக்குள் விழுந்த வடகொரிய ஏவுகணை; சகித்து கொள்ள முடியாது என பிரதமர் காட்டம்.!

அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில், வடகொரியா அவ்வப்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் தாய்லாந்தில் நேற்று நடைபெற்ற ஆசியான் மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தென் கொரிய அதிபருடனும், ஜப்பான் பிரதமருடனும் முத்தரப்பு உச்சி மாநாடு நடத்தினர். அப்போது வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைகளுக்கு தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்தநிலையில் மூன்று நாடுகளை கண்டிக்கும் வகையில், இன்று காலை மற்றொரு கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் … Read more

பாகிஸ்தானில் 19 வயது பெண்ணை காதல் திருமணம் செய்த 70 வயது 'வாலிபர்' !

பாகிஸ்தானில் மிக பெரிய அளவில் வயது வித்தியாசம்  இருந்தபோதிலும் திருமணம் செய்து கொண்ட பாகிஸ்தான் ஜோடியின் காதல் கதை மிகவும் வைரலாகியுள்ளது.  காதலுக்கு கண் இல்லை என்பது மீண்டும் நிரூபனம் ஆகியுள்ளது. ஒரு பாகிஸ்தானிய யூடியூபர் சையத் பாசித் அலி சமீபத்தில் இந்த ஜோடியின் காதல் கதையை வெளிப்படுத்தினார். அவர்கள் லியாகத் அலி, வயது 70 மற்றும் ஷுமைலா அலி, 19 என்ற காதல் ஜோடி ஆவர். இந்த தகவல் சமூக ஊடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. காலை … Read more

10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ‘அமேசான்’ திட்டம்.. ராஜினாமா செய்வோருக்கு 3 மாத சம்பளம்..!

அமேசான் நிறுவனத்தில் தற்போது தொடங்கப்பட்டுள்ள பணிநீக்க நடவடிக்கை அடுத்தாண்டுவரை நீடிக்கும் என அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி தெரிவித்துள்ளார். மெட்டா, டுவிட்டர் நிறுவனங்களை தொடர்ந்து அமேசான் நிறுவனமும், செலவீனங்களை குறைக்கும் முயற்சியாக, 10,000 ஊழியர்களை படிப்படியாக பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. 2 மாதங்களுக்குள் வேறேதேனும் நிறுவனத்தில் வேலை தேடிக்கொள்ளுமாறு அறிவுறுத்திய அமேசான் நிறுவனம், இம்மாத 29-ந் தேதிக்குள் தாமாக முன்வந்து ராஜினாமா செய்வோருக்கு அடுத்த 3 மாதங்களுக்கான முழு சம்பளம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.  … Read more

ஈராக்கில் சமையல் எரிவாயு வெடித்து சிதறிய விபத்தில் 15 பேர் பலி

ஈராக்கில், சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. சுலைமானியா (Sulaimaniya) நகரில், குடியிருப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் அருகிலிருந்த 3 வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமான நிலையில்,5 வாகனங்கள், பல வீடுகள் பலத்த சேதமடைந்தன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி 17 மணி நேரத்திற்கு பின் நிறைவுற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். Source link

டுவிட்டரில் ஊழியர்களின் ராஜினாமா அதிகரித்தாலும் நான் கவலைப்படவில்லை – எலான் மஸ்க் டுவீட்!

சான்பிரான்சிஸ்கோ, சமூக வலைதளமான டுவிட்டரை கையகப்படுத்திய பிறகு, உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் அந்நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறார். டுவிட்டர் அதிக லாபத்தை உருவாக்கத் தொடங்கவில்லை என்றால் திவால் நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறிய மஸ்க், வீட்டில் இருந்து வேலை செய்யும் கொள்கையில் பல மாற்றங்களைச் செய்துள்ளார். அதன்படி ஊழியர்கள் ஒரு வாரத்துக்கு 80 மணி நேரம் பணிபுரிய தயாராக வேண்டும் என்றும் கூறினார். இந்த நிலையில், டுவிட்டர் ஊழியர்கள் அனைவருக்கும் … Read more

கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 6 பேர் பலி – 30 பேர் காயம்.. 5 வாகனங்கள் சேதம்..!

ஈராக்கில், சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் 6 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர். சுலைமானியா (Sulaimaniya) நகரில், வீட்டு மாடியில் வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததால் 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. 5 வாகனங்கள் சேதமடைந்தன. நெருப்பை அணைத்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடிகளில் சிக்கியவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். Source link

தொடர் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ள வடகொரியாவுக்கு ஜப்பான் கடும் கண்டனம்!

டோக்கியோ, கம்போடியாவில் நடந்த ஆசியான் மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தென் கொரிய அதிபருடனும், ஜப்பான் பிரதமருடனும் முத்தரப்பு உச்சி மாநாடு நடத்தி, பேசியபோது, அவர்கள் வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைகளுக்கு தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். இதற்கு பதிலடி தருகிற வகையில் இன்று காலையில் வடகொரியா ‘பாலிஸ்டிக்’ ரக ஏவுகணை ஒன்றை ஏவி சோதித்துள்ளது. வடகொரியா இன்று அதிகாலை மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய குறுகிய அளவிலான ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக … Read more

பிரபஞ்சத்தின் ‘முதல் நட்சத்திர பிறப்பு’ வைரலாகும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி புகைப்படம்

நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி இதுவரை நட்சத்திரம் உருவாவதை படம் பிடித்து பகிர்ந்துள்ளது. இதுவரை இப்படியொரு நிகழ்வை உலகில் உள்ள யாருமே பார்த்ததில்லை என்ற வகையில் பிரபஞ்சத்தின் ‘முதல் நட்சத்திர பிறப்பு’ படம் இது என சமூக ஊடகங்களில் இந்த புகைப்படம் வைரலாகிறது. புரோட்டோஸ்டார், டாரஸ் மூலக்கூறு மேகத்தில் அமைந்துள்ளது, இது பூமியிலிருந்து சுமார் 430 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திரங்களின் தாயகமாகும். கண்ணைப் பறிக்கும் ஆரஞ்சு மற்றும் நீல தூசியால் நிரம்பிய மற்றும் ஒரு மிக … Read more

“ஆசிய நாடுகளே… உக்ரைன் போரும் உங்கள் பிரச்சினைதான்” – பிரான்ஸ் அதிபர்

பாங்காக்: “ஆசிய நாடுகளே… உக்ரைன் போரும் உங்கள் பிரச்சினைதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று என்று பிரான்ஸ் அதிபர் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து பாங்காக்கில் நடந்த பசுபிக் உச்சி மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் மக்ரோன் பேசும்போது, “உக்ரைன் போர் குறித்து உங்களது கருத்தையும் திரட்ட முயற்சிக்கிறேன். ஆசிய நாடுகளே… உக்ரைன் போரும் உங்கள் பிரச்சினைதான். அவ்வாறு பார்த்தால்தான் இதில் நிலைப்புத்தன்மை உருவாகும். உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையேயான போரை நிறுத்த சீனா மத்தியஸ்தம் செய்ய வேண்டும். வரும் … Read more