ஜெஃப் பெசோஸ் தொண்டு நிறுவனங்களுக்கு எவ்வளவு நன்கொடை அளிக்கிறார்? $124 பில்லியன்?

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், தனது சொத்துக்களில் பெரும்பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளிப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் 124 பில்லியன் டாலர் அளவிலான சொத்துக்களில் இருந்து எவ்வளவு தொகையை நன்கொடையாக கொடுக்கப் போகிறார் என்பதையோ அல்லது எந்த தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப் போகிறார் என்பதையோ அவர் சரியாகக் குறிப்பிடவில்லை. “மனிதநேயத்தை ஒருங்கிணைத்து ஆழமான சமூக மற்றும் அரசியல் பிளவுகளை குணப்படுத்தக்கூடிய” மக்களுக்கு ஆதரவளிக்க விரும்புவதாக அவர் கூறினார். அமேசான் நிறுவனரும், உலகத்தில் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான ஜெஃப் பெசோஸ் … Read more

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தனது சொத்தின் பெரும்பங்கை செலவிட ஜெப் பெசோஸ் திட்டம்

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தனது சொத்தின் பெரும்பங்கை செலவிட உள்ளதாக அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தெரிவித்துள்ளார். 124 பில்லியன் டாலர் சொத்துக்கு சொந்தக்காரரான ஜெப் பெசோஸ் தொண்டு பணிகளுக்கு பணத்தை செலவிடுவதில்லை என விமர்சனங்கள் இருந்து வந்த நிலையில், முதல் முறையாக தனது சொத்தின் பெரும்பகுதியை தான் உயிரோடு இருக்கும்போதே நன்கொடையாக வழங்க உள்ளதாக அவர் மனம் திறந்துள்ளார். சமூக ஏற்றத் தாழ்வுகளை கலைத்து, மனித குலத்தில் ஒற்றுமையை நிலைநாட்ட பாடுபடுபவர்களுக்கும் ஆதரவளிக்க போவதாக அவர் … Read more

எகிப்தின் மர்ம பெண்: பதப்படுத்தப்பட்ட மம்மியின் முக வடிவத்தை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள்

கெய்ரோ: எகிப்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் இறந்து மம்மியாக பதப்படுத்தப்பட்ட மர்ம பெண்ணின் முக வடிவத்தை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். இறந்தவர்கள் மீண்டும் உயிர் பெற்று வருவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களது உடல்களை பதப்படுத்தி வைக்கும் வழக்கம் எகிப்தில் பின்பற்றப்பட்டு வந்தது. இதன் காரணமாகவே எகிப்தின் பிரமிடுகள் பிரபலமானது. இந்த நிலையில்தான் எகிப்தில் பல நூறு வருடங்களுக்கு முன்னர் பதப்படுத்தப்பட்ட மம்மிகள் பல்வேறு ஆச்சரிய தகவல்களை தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு அளித்து வருகின்றன. அந்த வகையில் எகிப்தின் … Read more

ஐ.க்யூ.,வில் ஐன்ஸ்டீனை மிஞ்சிய 11 வயது சிறுவன்| Dinamalar

லண்டன்: நுண்ணறிவு திறன் எனப்படும் ஐ.க்யூ திறனில் பிரபல விஞ்ஞானிகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங்கை விட 11 வயது சிறுவன் சிறப்பாக செயல்பட்டு ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளான்.அறிவியல் மேதைகளாக கருதப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாவ்கிங் ஆகியோரின் நுண்ணறிவு திறன் அளவீட்டு எண் 160 ஆக இருக்கும். இதனை மிஞ்சும் விதமாக இங்கிலாந்தை சேர்ந்த யூசப் ஷா என்னும் 11 வயதே ஆன சிறுவனின், ஐ.க்யூ., அளவீட்டு எண் 162 ஆக அளவிடப்பட்டுள்ளது. யூசப் ஷா … Read more

பாகிஸ்தானின் உண்மை முகத்தை அம்பலப்படுத்துவன்; பாடகர் அத்னன் சமி ஆவேசம்.!

இங்கிலாந்தில் பாகிஸ்தானிய தந்தைக்கு பிறந்தவர் அத்னன் சமி. பாகிஸ்தான் குடியுரிமையை ஒப்படைத்துவிட்டு, கடந்த 2016ம் ஆண்டு முதல் இந்திய குடிமகனாக இருந்து வருகிறார். இந்திய இசை அரங்கில் பிரபலமான அத்னன் சமிக்கு, கடந்த 2020ம் ஆண்டு இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மஸ்ரீ வழங்கப்பட்டது. இந்தநிலையில் பாடகர் அத்னன் சமி, முன்னாள் பாகிஸ்தான் நிர்வாகத்தை கடுமையாக தாக்கி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‘‘ பாகிஸ்தான் அரசு எனக்கு என்ன செய்தது என்பதை விரைவில் அம்பலப்படுத்த … Read more

பார்முலா 1 உலக சாம்பியன்ஷிப் 21 ஆவது சுற்றில் ஜார்ஜ் ரஸ்ஸல் வெற்றி

பார்முலா 1 உலக சாம்பியன்ஷிப்பின் 21 ஆவது சுற்றில் ஜார்ஜ் ரஸ்ஸல் வெற்றி பெற்றார். பிரேஸில் நாட்டின் சோ பலோ (São Paulo) நகரில் நடைபெற்ற பிரேசிலியன் கிராண்ட் பிரிக்ஸில் இங்கிலாந்தின் ஜார்ஜ் ரஸ்ஸல் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார். சக நாட்டவரும் மெர்சிடிஸ் அணியைச் சேர்ந்தவருமான லீவிஸ்ஹேமில்டன் (Lewis Hamilton) இரண்டாவது இடத்தை பிடித்தார். அணி பிரிவில் மெர்சிடிஸ் அணி முதலிடத்தைப் பிடித்தது. Source link

ட்விட்டரில் அடுத்த அதிரடி: மீண்டும் 4,000 ஊழியர்கள் பணி நீக்கம்!

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கி தன் வசப்படுத்தியுள்ளார். ட்விட்டர் தன் வசமானதும் அதில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரப்போவதாகவும் எலான் மஸ்க் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அந்த வகையில், ட்விட்டர் நிறுவனத்தில் மாற்றங்கள் கொண்டு வந்து அடுத்தடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும் எலான் மஸ்க் எடுத்து வருகிறார். குறிப்பாக, 7,500 பேர் பணிபுரியும் ட்விட்டர் நிறுவனத்தில் பெருமளவிலான ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. … Read more

உக்ரைன்-ரஷ்யா போர் முடிவடைவதற்கான தொடக்கத்தில் உள்ளது- அதிபர் செலன்ஸ்கி

உக்ரைன் போர் முடிவடைவதற்கான தொடக்கத்தில் உள்ளதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். தலைநகர் கெர்சனில் செய்தியாளர்களை சந்திந்த அவர், எங்களது வலிமையான ராணுவத்தினால் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட எங்களது பகுதிகளில் படிப்படியாக முன்னேறி வருகிறோம். நாங்கள் ரஷ்யாவை நம்பவில்லை, ஏனெனில் அவர்கள் உலகத்தை ஏமாற்றி வருகிறார்கள். நாங்கள் அனைத்து நாடுகளின் இறையாண்மையை மதித்தாலும் இப்போதைக்கு உக்ரைனின் அமைதிக்காகவே பேசுகிறோம், அதனால் தான் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடி வருகிறோம் என்று செலன்ஸ்கி பேசினார். Source link

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவருக்கு தூக்கு தண்டனை விதித்த ஈரான்!

ஈரானில் ஹிஜாப் தொடர்பாக நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்க அரசாங்கம் தொடர்ந்து அடக்குமுறைகளை கடை பிடித்து வருகிறது. இந்நிலையில், போராட்டக்காரர் ஒருவருக்கு உள்ளூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. மேலும், பல போராட்டக்காரர்களுக்கு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. ஹிஜாப் பிரச்சினையில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை. ஈரானில் ஹிஜாப் அணிவதைக் கண்டித்து நீண்ட நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஹிஜாப் அணிவதை கட்டாயப்படுத்தும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி … Read more

பாரீஸ் விமான நிலையத்தில் 18 ஆண்டுகளாக வசித்த ஈரானியர் உயிரிழப்பு

பாரீஸ், ஈரான் நாட்டின் ஒரு பகுதியாக இருந்த சுலைமான் நகரில் ஈரானிய தந்தை மற்றும் பிரிட்டன் தாய்க்கு 1945-ம் ஆண்டில் பிறந்தவர் மெஹ்ரான் கரீமி நஸ்செரி. இங்கிலாந்து நாட்டுக்கு மேல்படிப்பு படிப்பதற்காக 1974-ம் ஆண்டு சென்றார். அவர் சொந்த நாட்டுக்கு திரும்பி வந்த பின்பு, ஈரானின் கடைசி மன்னரான ஷாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார் என்பதற்காக கைது செய்யப்பட்டு, பாஸ்போர்ட் இன்றி நாடு கடத்தப்பட்டார். நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர், பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு அரசியல் புகலிடம் … Read more