ஸ்பெயின் பிரதமருக்கு கொரோனா| Dinamalar
மாட்ரிட் : ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்ஷே, கடந்த வாரம் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா., பொதுசபை கூட்டத்தில் பங்கேற்றார். அதன்பின், அவர் இம்மாதம் 23ம் தேதி நாடு திரும்பினார். இந்நிலையில், நேற்று சோசலிஸ்ட் கட்சி சம்பந்தமான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக இருந்தார். ஆனால், அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, அவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ரத்து செய்தார். “தகுந்த முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டு, எனது பணியை தொடருவேன்,” என, அவர் சமூக வலைதளத்தில் நேற்று … Read more