உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 59.98 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61 கோடியே 99 லட்சத்து 52 ஆயிரத்து 013 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை … Read more

ரஷ்யாவில் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு| Dinamalar

மாஸ்கோ ; ரஷ்யாவில் ‘கோஸ்டா – 2’ என்ற கொரோனா போன்ற வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் வவ்வால்களிடம் ‘கோஸ்டா – 2’ என்ற வைரஸ் கண்டறியப்பட்டது. இது ‘சர்பிகோவைரஸ்’ என்ற ‘சார்ஸ் கோவிட் 2’ கொரோனாவின் துணை வகையை சேர்ந்தது. இது மனித செல்களையும் தாக்கும் வாய்ப்புள்ளதால் மனிதர்களுக்கு புதிய அச்சுறுத்தலாக அமையலாம். இந்த வைரஸ் கொரோனா தடுப்பூசியில் இருந்து கிடைக்கும் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிக்கும் திறனுடையது. இந்த … Read more

நேட்டோ அல்லாத முக்கிய நட்பு நாடு பட்டியலில் இருந்து ஆப்கானிஸ்தான் நீக்கம் – ஜோ பைடன் அறிவிப்பு

வாஷிங்டன், ஆப்கானிஸ்தானை நேட்டோ அல்லாத முக்கிய நட்பு நாடு பட்டியலில் இருந்து நீக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2012 இல், அமெரிக்கா ஆப்கானிஸ்தானை ஒரு முக்கிய நேட்டோ அல்லாத (எம்என்என்ஏ) நட்பு நாடாக அறிவித்தது, இது இரு நாடுகளுக்கும் பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவைப் பேணுவதற்கான வழியை உருவாக்கியது. இந்த பதவி ஆப்கானிஸ்தானுக்கு பாதுகாப்பு மற்றும் … Read more

ஈரானில் தீவிரமடையும் போராட்டம்- இதுவரை 41க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்கள், அந்நாட்டின் 80 நகரங்களுக்குப் பரவியுள்ள நிலையில், கடுமையாக இதனைக் கையாள அதிகாரிகளுக்கு அதிபர் இப்ராகிம் ரைசி உத்தரவிட்டுள்ளார். இளம் பெண் ஒருவர் போலீசாரின் காவலில் உயிரிழந்ததையடுத்து அங்கு போராட்டங்கள் வலுத்துவருகிறது. பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஐநா கூட்டத்தில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய அதிபர் ரைசி, வழக்கமான போராட்டங்களை அனுமதிக்கும் அதே நேரத்தில் கலவரங்களை ஏற்க முடியாது எனத் தெரிவித்தார். ஈரானில் வன்முறையில் ஈடுபட்டதாக … Read more

இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் – போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பரபரப்பு

போராட்டக்காரர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் அவர்களை கலைத்தனர். தினத்தந்தி Related Tags : Sri Lanka Protest இலங்கை போராட்டம்

ஹிஜாப் விவகாரத்தால் போர்க்களமாக மாறிய ஈரான் – இதுவரை 50 பேர் உயிரிழப்பு; ஆயிரக்கணக்கானோர் கைது

தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக அந்த நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து போர்க்களமாக மாறியுள்ளது. போலீஸ் துப்பாக்கிச்சூடு, தடியடியில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானில் 9 வயது சிறுமி முதல் முதிர்வயது பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்பு பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். கடந்த 13-ம் … Read more

சரிவை நோக்கி செல்லும் சீன பொருளாதாரம்| Dinamalar

‘உரலுக்கு ஒரு பக்கம் இடி; மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி’ என்பதை போல, சீனாவுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சிக்கல்கள் அதிகரித்து வருகின்றன.கொரோனாவுக்கு முன் இருந்த சீனாவின் வளர்ச்சிக்கும், இப்போதைய நிலைக்குமான வித்தியாசம், அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது. இதன் காரணமாக, சீன மக்களின் மனங்களிலும் அண்மைக் காலமாக அதிருப்தி அதிகரித்து வருகிறது.கடந்த 30 ஆண்டுகளில் முதன்முறையாக, ஆசிய வளரும் நாடுகள், சீனாவை விட வேகமான வளர்ச்சியை காணும் என, ஆசிய மேம்பாட்டு வங்கி தெரிவித்துள்ளது.அத்துடன் மேலும் பல மதிப்பீட்டு … Read more

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம்

ஜகார்த்தா, இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஆச்சே மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள மெயுலாபோ நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 22 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக இந்தோனேசியாவின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கம் ஆச்சே மாகாணம் முழுவதும் கடுமையாக உணரப்பட்டது. நிலநடுக்கத்தின்போது வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் … Read more

தங்கள் நாட்டுடன் இணைக்க உக்ரைனின் லுஹான்ஸ்க் உட்பட 4 நகரங்களில் வாக்கெடுப்பு நடத்தும் ரஷ்யா

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், லுஹான்ஸ்க் உள்ளிட்ட 4 நகரங்களை இணைத்துக் கொள்வது தொடர்பாக ரஷ்யா வாக்கெடுப்பு நடத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுதம் மற்றும் நிதி உதவி செய்து வருகின்றன. 6 மாதங்களைத் தாண்டி போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் பல நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியது. … Read more

3 குழந்தைகளின் தாயை கடத்தி மதமாற்றம்!

கராச்சி : பாகிஸ்தானின் ஹிந்து மதத்தை சேர்ந்த மூன்று குழந்தைகளின் தாயான ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுமியர் கடத்தப்பட்டு, கட்டாயமாக முஸ்லிம் மதத்துக்கு மாற்றப்பட்டனர். பின், முஸ்லிம் மதத்தை சேர்ந்தவருக்கு கட்டாய திருமணமும் செய்து வைக்கப்பட்டனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் சிந்து மாகாணம் நசர்பூரில் வசிக்கும் மீனா மேக்வர்,14, என்ற சிறுமி சமீபத்தில் கடத்திச் செல்லப்பட்டு, முஸ்லிம் மதத்துக்கு மாற்றப்பட்டார். பின், முஸ்லிம் இளைஞருக்கு கட்டாய திருமணமும் செய்து வைக்கப்பட்டார். இதேபோல், மிர்புர்காஸ் நகர … Read more