பாலியல் புகார் , முன்னாள் தலைமை செயலர் கைது| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: பாலியல் புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரியும், அந்தமான் நிகோபார் தலைமை செயலாளருமான ஜிதேந்திரா நாராயணன் கைது செய்யப்பட்டார். அந்தமான் நிகோபார் அரசின் தலைமை செயலராக இருந்தவர் ஜிதேந்திரா நாராயண், இவர் மீது கடந்த ஜூலை மாதம் 21 வயது இளம் போலீசில் புகார் கொடுத்தார். அதில் தன்னை ஜிதேந்திரா நாராயண், தொழிலாளர் கமிஷனர் ஆகிய இருவரும் சேர்ந்த கூட்டு பலாத்காரம் செய்ததாக அந்த புகாரில் கூறியிருந்தார். இது … Read more

உக்ரைனை விட்டு வெளியேறிய இந்திய மாணவர்கள் ரஷ்யாவில் தங்கள் கல்வியைத் தொடரலாம் – ரஷ்ய துணைத் தூதர்..!

உக்ரைனை விட்டு வெளியேறிய இந்திய மாணவர்கள் ரஷ்யாவில் தங்கள் கல்வியைத் தொடரலாம் என்று சென்னையிலுள்ள ரஷ்ய துணைத் தூதர் ஓலெக் அவ்தீவ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிலும் உக்ரைனைப் போலவே மருத்துவ பாடத் திட்டம் இருக்கிறது. உக்ரைனியர்களில் பெரும்பாலானோர் ரஷ்ய மொழி தான் பேசுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். Source link

டி20 உலக கோப்பை: பைனலில் இங்கிலாந்து – பாக்., மோதல்

அடிலெய்டு: ‛டி-20′ உலக கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி, பைனலுக்கு முன்னேறியது. பைனலில் பாக்., அணியை இங்கிலாந்து எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலியாவில் ‛டி-20′ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் முதலாவது அரையிறுதியில் நியூசிலாந்தை தோற்கடித்த பாகிஸ்தான் பைனலுக்கு முன்னேறியது. இன்று (நவ.,10) அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் ‛டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர், பந்துவீச்சை … Read more

வொர்க் ப்ரம் ஹோம் இனி கிடையாது… அதிரடி காட்டும் எலான் மஸ்க்!

ட்விட்டர் நிறுவனத்தின் புதிய உரிமையாளர் எலோன் மஸ்க், தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து அதிர்ச்சிகளை கொடுத்து வருகிறார். டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உடனேயே, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல், நிறுவனத்தின் கொள்கைத் தலைவர் விஜயா காடே மற்றும் பலரை நிறுவனத்தில் இருந்து நீக்கினார். தொடர்ந்து ஆட்குறைப்பில் ஈடுபட்டு வரும் எலான் மஸ்க், ஆயிரக்கணக்கானவர்களை பணி நீக்கம் செய்துள்ளார்.  இந்நிலையில், தனது பணியாளர்களுக்கு முதன்முறையாக … Read more

கொரோனா பெருந்தொற்றுக்கு பின் 1.2 பில்லியன் டாலர் ஈட்டிய எமிரேட்ஸ் விமான நிறுவனம்..!

கொரோனா பெருந்தொற்றுக்கு பின் மீண்டும் விமான சேவை தொடங்கிய நிலையில், எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனம் அரையாண்டில் 1.2 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளது.  கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1.6 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக எமிரேட்ஸ் குழு தெரிவித்திருந்தது. இந்நிறுவனம் கொரோனா காலகட்டத்தில் வாங்கிய 4 பில்லியன் டாலர் கடனை தற்போது திருப்பி செலுத்த தொடங்கியுள்ள நிலையில்,  இந்த வருடத்திற்குள்  முழு கடன் தொகையையும் திருப்பி செலுத்தி விடுவோம்  என்று … Read more

மாலத்தீவு தலைநகர் மாலேவில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – 9 இந்தியர்கள் உட்பட 10 பேர் பலி…!

மாலே, மாலத்தீவு தலைநகர் மாலேவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் வாகனம் நிறுத்தும் இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தானது, அருகில் உள்ள வீடுகளுக்கும் மளமளவெனப் பரவியது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 10 பேரில் 9 பேர் இந்தியர்கள் என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாலேயில் உள்ள அரசு உயரதிகாரி ஒருவர் கூறுகையில், … Read more

ராஜினாமா செய்த இங்கிலாந்து மந்திரி: பிரதமர் ரிஷி சுனக்கிற்கு பின்னடைவு !

லண்டன், இங்கிலாந்தின் ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் அந்நாட்டு பிரதமராக பதவியேற்றார். பொருளாதார சிக்கலில் இருந்து நாட்டை விடுவிக்க போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் அவரை தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இதற்கிடையே, எந்த துறைகளும் ஒதுக்கப்படாத இணை மந்திரி காவின் வில்லியம்சன், சக எம்.பி., ஒருவரை துன்புறுத்தும் வகையில், மொபைல் போனில் செய்திகள் அனுப்பியதாக புகார் எழுந்தது. ஊடகங்களில் செய்திகள் வெளியானதால் சில மூத்த அதிகாரிகளும் புகார் … Read more

மாலத்தீவில் தீ விபத்து: 9 இந்தியர்கள் உள்பட 11 தொழிலாளர்கள் பலி

மாலே: மாலத்தீவில் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 இந்தியர்கள் உள்பட 11 தொழிலாளர்கள் பலியாகினர். மாலத்தீவின் தலைநகர் மாலேவில் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி இருந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் கட்டிடம் முழுவதுமே எரிந்து சேதம் அடைந்தது. இந்த விபத்தில் 11 பேர் பலியாகினர். இவர்களில் 9 பேர் இந்தியர்கள். பலர் காயமடைந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். … Read more

ஏர்டெல், ஜியோ 5-ஜி சேவைகளை ஐபோன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்..!

ஏர்டெல், ஜியோ நிறுவனங்களின் அதிவேக 5-ஜி சேவைகளை ஐ-போன் வாடிக்கையாளர்கள்பயன்படுத்த, பீட்டா அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐபோன் 12, 13, 14 மாடல் ஆப்பிள் போன் வைத்திருப்பவர்கள் 5 ஜி கனெக்டிவிட்டியை பெற முடியும் என தெரிக்கப்பட்டுள்ளது. முழுமையான 5 ஜி அப்டேட் டிசம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில், தற்போது சோதனையோட்டமாக வெளியிடப்பட்டுள்ள இந்த பீட்டா அப்டேட்டை விருப்பம் உள்ளவர்கள், போன் டேட்டாவை Backup செய்துவிட்டு, பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனாளர்களின் … Read more